சொல்லை ஆண்ட முல்லை (2)
_____________________________________________
சொற்கீரன்
வெட்டுண்ட வேழம் தூம்புக்கை துமிய
குருதி குளிப்ப பகழி தோய் நிணம்
நனந்தலை மூச முளிச்சிறை அடிக்கும்
புட்கணம் மேவ செருக்களம் கண்டாய்
மண் கொள்ளை தடுத்தாய் மாண்ட
திறம் நிறுத்தாய் கொடி நுடங்கு வானம்
படர்தந்து சுடர்ந்தாய் பட்டுழீஇ மறைந்தும்
மறம் படுத்து நின்றாய் என்னே தமிழா!
நின் நிறம் மாய்ந்து மொழி தேய்ந்து
மறைமொழி வேட்டம் மலியக்காணும்
காட்சி இஃதென்ன உட்பகையில் எல்லாம்
அழிந்திடல் ஆமோ.மாயம் செய்து
அறிவைத்தின்னும் இறைவம் நின்னை
இற்றிடல் செய்யும் நிலை கண்டிலையோ?
செந்தமிழ் நற்றமிழ் சீரிய பேரொலி
ஈயல் கூட்டம் அன்னவாங்கு உதிர்ந்த
அத்தம் போல் அருகுதல் தகுமோ?
முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழியத்,
தண்ணிழற் சோலை தமிழ் பிறக்கொழிந்து
தடம் பதி பரல் நீடு பாழ் ஆறு நெளிந்தன்ன
வேள்வி புதைத்த கேள்விகள் இழந்து
கூச்சல் கூளம் இடையே நீயும்
எழுநிலை மாடங்கள் மதிமலி புரிசை
விழுநிலை உற்றதென்? தமிழ்க்கொடி
வான்பூ வண்ணம் சிதற வடவன் கொடுந்தீ
நாவு தீண்டி நம் எழில் நலம் யாவும்
கருகுதல் தகுமோ தமிழே எழுவாய்!
___________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக