திங்கள், 30 செப்டம்பர், 2024

பொம்மை சொர்க்கம்.

 

விஷ்ணுவுக்கு புரியாத ஒரு "சஹஸ்ரநாமம்"

________________________________________________


"பாவ புண்ணியம் பேசுவதே பாவம்.

பாவ புண்ணியம் பேசாததே புண்ணியம்.

உன் ஸ்லோகங்களையெல்லாம் 

கேட்டுவிட்டுத் தான்

நான் சாப்பிடப்போகிறேன் அல்லது

படுக்கப்போகிறேன்

என்று உனக்கு

யார் சொன்னது.?

நான் கடவுளாய் இருப்பது

பாவமா?

புண்ணியமா?

இன்னும் தீர்ப்பு வெளியாக வில்லை.

இந்த மனிதன் தான்

அந்த மரசுத்தியல் வைத்து

அடித்து அடித்து

ஒழுங்கு படுத்த வேண்டும்

நீ

நாலு என்ன‌

நாப்பத்தெட்டு ஆயிரம் வேதங்களை

வேண்டுமானாலும் வைத்துக்கொள்.

ஆயிரம் ஆயிரம் வர்ணங்களை

வெள்ளையடிப்பதாய் சொல்லிக்கொண்டு

இருட்டுப்பிழம்பில் விழுந்து

ஊறிக்கொள்.

எனக்கு எந்தவிதமான‌ 

சின்ன  எறும்புக்கடி கூட இல்லை."

"இப்படியே நல்லவன் போல‌

பேசிக்கொண்டிரு."

"என்ன? யார் பேசறது?

என் அருகில் இருக்கும் அம்பாளா பேசுகிறாள்?"

"அம்பாள் எந்தக்காலத்தில் அய்யா பேசினாள்.

எல்லாம் நான் தான்

அதாவது மனிதன் தான் பேசுகிறேன்.

பாற்கடல் கடைந்த விளையாட்டை வைத்து

தேவனுக்கு ஒரு நியாயம்

அசுரனுக்கு ஒரு நியாயம் 

செய்தாயே.

தேவர்கள் புண்ணியர்கள் என்றால்

எல்லோரையும் 

புண்ணியர்களாய்ப்படைத்து

எலோரையும் தேவர்கள் 

ஆக்கி விட வேண்டியது தானே.

நீ பரம்பொருள்.

எல்லா உயிரிலும் மயிரிலும்

மரம் மட்டையிலும் தான் இருக்கிறாய்.

சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்

என்று

பாஷ்யம் சொன்னாலும்

99.999999 சதவீத மக்களை

பசியில் பிணியில்

அடிமையாக வைத்திருக்கும் 

உரிமையை உனக்கு

யார் கொடுத்தார்கள்?

அதனால்

பரந்து கெடுக உலகியற்றியான்

என்று

வள்ளுவன் ஆவேசமாக சொன்னான்.

உன் பாவ புண்ணிய கணக்கை வைத்து

எங்களை ஏமாற்றியது போதும்.

எப்போதுமே பிராமணனாக பிறப்பவன் 

மட்டும் தான் உன் குழந்தை

என்று 

புராணம் எழுதிக்கொண்டவர்கள் 

உன்னையும் கூட‌

சூத்திரனாக பஞ்சமனாக தான்

ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

சிவனைக் கும்பிடுபவர்களெல்லாம்

இவர்களுக்கு

"பிரேத வழிபாட்டுக்காரர்கள்" தான்.

ஆம்.

கடவுள் என்றும் கோயில் என்றும்

ஒன்றும் கிடையாது எங்களுக்கு

நாங்கள் தான் சுத்தமான ஸ்மார்த்தர்கள் 

என்று பேசும் நாத்திகம் மட்டும்

சமஸ்கிருதத்தில் சொல்லிவிட்டால்

உனக்கு இனிக்குமா?


உன்னை

அவர்கள் பிழைப்புக்கு மூலதனம் 

ஆக்கிக்கொண்டு

"கடவுள் மாஃபியா"வாக‌

நீ இருந்தால்

அந்த முதலாளித்துவ கடவுள்

எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

நீ நீயில்லை.

அதாவது

நீ கடவுள் இல்லை.

அல்லது 

மொத்தமாக கடவுளே இல்லை.

இப்படிச்சொல்லும் 

மொத்த பாவாத்மாவாக

மனிதன் எப்போது மாறுகிறானோ

அப்போதே

நிஜ சொர்க்கம் அவன் கையில் 

வேண்டாம் உன் 

பொம்மையான பொய்மை சொர்க்கம்.

___________________________________________

செங்கீரன்









 





லட்டு


லட்டு

________________________________


லட்டும் பரிகாரமும்

தோஷ நிவர்த்தி நாடகமும்

நடந்த பிறகும்

மரா மரா என்று
மாற்றிச்சொன்னால் தான்

புரிந்து கொள்ளமுடிகிற‌

ஒரு வேடனின்

அம்பும் மானும் தைத்துக்கிடக்கும்

இறைச்சி நாற்றம் அடிக்கிற‌

அந்த ராமாயணத்தை

என்ன செய்யப்போகிறார்கள்?

தீக்குளிப்பா?

"ஜலத்தெளிப்பா"?

வேடன் கணணப்பன் தான்
வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை
சிவன் பசியாற வேண்டும் என்று
படைத்தானாமே.
அவன்
சிவலிங்கத்தின் கண்களில்
ஏற்பட்ட பிணியை அகற்ற
தன் கண்களையே பெயர்த்து வைத்தானாமே.
அப்படி
சிவலிங்கத்தை தீட்டுப்படுத்தையதைப்
போக்கும் பரிகாரமாக‌
என்றைக்கு அந்த‌
சிவன் மீதே
"ஜலம்"தெளிக்கப்போகிறார்கள்? போகிற போக்கைப்பார்த்தால்

இந்து மகா சமுத்திரம் கூட‌

இந்து மகா பசுமூத்திரம்

என்று

தேசிய அகராதியில்

அச்சுப்பிழை திருத்தம்

கொண்டு வந்தாலும்

கொண்டு வந்துவிடுவார்கள்.

அறிவு என்றால் தீ.

அந்தத் தீ பரவட்டும்.

இருட்டுகள் தொலையட்டும்.
_____________________________________
செங்கீரன்

தமிழனே!தமிழனே!

    தமிழனே!தமிழனே!

இப்படித்தான் அழைத்தேன்
அந்த கண்ணாடிச்சிறகுத்தும்பியை
அது அந்தக் குறுந்தொகையிலிருந்து
"கல் பொரு சிறு நுரையை"
சிறக்கடித்து சொல்லிவிட்டு சென்றது.
அந்த பட்டாம்பூச்சியைப் பார்த்தேன்.
பார்த்தவுடனேயே
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
என்று
அந்த வண்ணச்சிறகுகளை
"சப்பாணி"கொட்டிக்கொண்டே நகர்ந்தது.
நத்தை ஒன்று ஊர்ந்து சென்றது
நலமா என்று கேட்டேன்.
"நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளது...
என்று
நம் வாழ்க்கையை தோலுரித்துக்காட்டியது.
அந்த வீட்டு முற்றத்துப் பசும்புல்லில்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
அந்த பூந்தன்றல் சொன்னது
இந்த "அணிலாடு முன்றிலில்"
என் தோழன் அணிலை இன்னும் காணோமே
என்று ஏக்கத்தோடு சொன்னது.
அப்புறம்
என் மீது மோதாத குறையாய்
ஒரு தமிழன் இடித்து விட்டுச்சென்றான்.
"வழி விடப்பா.
இன்று அங்கே கோயில் கும்பாபிஷேகம்
அபிஷேக ஜலம் தெளித்துவிடுவார்கள்
சீக்கிரம் போகவேண்டும்.."
என்றான்.
தமிழ் கண்ணீர் விட்டது.
என்னை மிதித்து கூழாக்கி விட்ட‌
அந்த ஆதிக்கக்கூச்சல் மொழியின்
எச்சில் நீரில் குளிக்கவா போகிறாய்?
ஓ தமிழா?
தமிழனே!தமிழனே!
இன்பத்தமிழை ஒலிக்க விடாமல்
உன் குரல்வளையில்
மாட்டி விடப்பட்டிருக்கும்
அடிமைச்சங்கிலியை
எப்போது அறுத்தெறியப்போகிறாய்?
___________________________________________
சொற்கீரன்.
கலிஃபோர்னியா
30.09.2024
காலை 07.09.2024
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

சனி, 28 செப்டம்பர், 2024

நிழல்

 

நிழல்

____________________________________

இறப்புக்குப் பின் விழும் 

உன் நிழல்

உன் பிறப்புக்கு முன்பே

பதிவாகி இருக்கிறது.

எப்படி எப்படி

சற்று விவரமாச்சொல்லப்பா?

டி எஸ் பாலையா மொழியில்

உச்சு கொட்டிக் கேட்க‌

நிறையபேர்கள் மொய்த்து விட்டார்கள்.

நீண்ட தாடியை உருவிக்கொண்டு

விழிகளை உருட்டி உருட்டி

பேச ஆரம்பித்தார்..அவர்.

"உன் தந்தை தான் அந்த நிழல்.

உன் தந்தைக்கு முன் உள் தந்தை தாயின்.."

அவர் சொல்லிக்கொண்டே போனார்

பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றார்.

பில்லியன் பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் என்றார்.

....,,

அந்த புள்ளிக்கு

இவர் புளுகும் முகங்களும்

கண்களும் 

கை  கால்களும்

இன்னும் 

கோரைப்பல் கொம்பு எல்லாம் 

சேர்த்து

பிம்பங்களின் பிசிறுகளில்

ரத்தம் சொட்ட சொட்ட‌

நிழலாட்டம் காட்டுவார்

கேட்பவர்கள் முகத்தில் ஈ ஆட வில்லை.

அப்புறம்

மதங்கள் சாதிகள் வர்ணங்கள்

இதற்கும் ஃபிஸிக்ஸ் பி எச் டி காகித‌

அந்து பூச்சிகள்

அங்குலம் அங்குலமாய் 

ஏ ஐ துப்பிய சொற்பொழிவு

அந்த அரங்கத்தை

அடியில் ஆழ்ந்து கிடந்த‌

அறியாமையை  முட்டாள்தனத்தை

அனக்கோண்டா குட்டிகளால்

நிரப்பி

அங்கும் இங்கும் நெளிய விட்டன.

உண்டியலில்

கரன்சிகள் பிதுங்கி வழிந்து

நிறைந்தன..

_____________________________________________

சொற்கீரன்.





உலகத்தமிழர்களே!



உலகத்தமிழர்களே

ஒன்று சேருங்கள்.

நீங்கள் இழப்பது

இன அடிமைச்சங்கிலிகள் 

மட்டுமே.

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்

உறைந்து போன 

பனிப்பிழம்பிலிருந்து

நுண்ணுயிர்கள்

அசைந்து கொடுக்கின்றன.

நம் தமிழ் உயிர்ப்பின் 

அகர முதல‌

ஏன் அங்கிருந்தே 

தோன்றியிருக்கக்கூடாது?

இது 

மிக மிகப்பேராசை.

இன ஆதிக்க வெறியின்

முதற் சுழி..

என்றெல்லாம் பொதுமையியல்

சான்றோர்கள் முணு முணுக்கலாம்.

இது

எதனுடைய எதிர்வினை?

சிந்து என்ற சொல் சிந்துகின்ற‌

ஒலிச்சிதறலே 

தமிழ் நெருப்பின் முதல் ஒலி தான்.

ஆனால் 

அதையே

சரஸ்வதி நதி கடாட்சம் என்று நம்மை

சாமி கும்பிட வைக்கும்

ஒரு கூட்டம்

செங்கோல் என்று உளறிக்கொண்டு

கொடுங்கோல் நடத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு

உள்ளூர் வெளியூர் தந்திர ஜால்ராக்கள்

நம் செவிப்பறை கிழியும்படி

ஊடக நரித்தனங்களைக்கொண்டு

ஏமாற்று வித்தைகளை 

அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே

பானை ஓடுகளில்

நம் தமிழ் இதயம் கிறுக்கியிருக்கும்

அந்த வரிகள் எல்லாம்

நம் நாகரிக முன் தோற்றத்தைக்காட்டும்

இ சி ஜி இலக்கிய வரிகள்

அல்லவா?

சிந்தியுங்கள் அன்பான தமிழர்களே.

நம் குழந்தைகளுக்கு

இனிப்பு ஊட்டுங்கள்..மகிழ்ச்சி தான்.

ஆனால்

பெயர் சூட்டுகிறேன் என்று

வாயில் நுழையாத‌

காது குடைய சுகமாயிருக்கிறதே

என்ற அந்த 

அயல் ஒலிப்புக்கூளங்களை

கூட்டிப்பெருக்கி தூர எறியுங்கள்.

இது ஏதோ

உள்ளக்காழ்ப்பில் பிறந்த உறுத்தல்கள் அல்ல.

தமிழ்

இன்னும் வெறும் குப்பைப்புழுக்களாக‌

உங்கள் மீது

நெளிய விடலாமா?

அன்புடன் சிந்தியுங்கள்.

அருமைத்தமிழ் தோழர்களே.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தான்.

கணியன் எனும் அன்றையக்கணினியாளன்

சொல்லாமல் சொன்ன‌

ஒரு "பைத்தான் மொழி" அதில் உண்டு.

சமஸ்கிருத அனக்கொண்டாக்கள்

உன்னை விழுங்குவதற்குள்

நீ விளங்கிக்கொள்.

யாதும் ஊரே என்ற முழக்கம்

உலகத்தமிழின் மனித நேய முழக்கம் தான்.

கடவுள் மொழிக்குள்

பொதிந்திருக்கும்

கயமைப்பொருளை உணர்ந்து கொள்வதே

நமக்கு வேண்டிய‌

இன்றைய "கடவுள் வாழ்த்துக்கள்"

"அறிவுப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

அறிவினை அறியாதார்."

_____________________________________________

சொற்கீரன் 

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

நீடூழி! நீடூழி வாழ்கவே!



நீடூழி!நீடூழி வாழ்கவே!

____________________________________


அகநானூறு புறநானூறு போல்

பலப்பல நானூறு தமிழ் வரிகள்

உங்கள் யுகங்கள் ஆகும்.

நூறு களைத்து ஆயிரமும் அயர்ந்து

நீளும் 

உங்கள் வயதுகள் பேச.

தமிழ் இன்பம் ஒன்றே

இங்கு சிற்றுன்ப பேரின்பப்

பெருவெள்ளம்.

அந்த ஈரோட்டுக் கவிப்பிரளயம் 

"ஈரோடு தமிழன்பன்"


நீடூழி!நீடூழி வாழ்கவே!

___________________________________________

சொற்கீரன்

(கலிஃபோர்னியாவிலிருந்து)

27.09.2024.காலை 11.14 மணி.


 

புதன், 25 செப்டம்பர், 2024

தமிழ் ஆற்றுத்தொகை (3)"

 தமிழ் ஆற்றுத்தொகை (3)

_____________________________

இடைக்காடன் (இ பரமசிவன்)




மண் முழா மறப்ப விழவு விழா 

நீள்நெடு நாள் அயர்வு கொள் வீட‌

இருங்கண் குழிசி சோறு ஆரல் இன்று

துன்பியல் பெய்த அடர்மழை அன்ன‌

அகலுள் ஆங்கண் அணிலாடி உறப்ப‌                 55

புறப்புண் நாணி வாள் வடக்கு இருக்கும்

மறம்படு வேந்து கல்லென அவிந்து

விழிகுத்தி அமர்த்த அகல் இலை ஆடா

கூர்நிழல் தந்த பாழ்சுவடு அன்ன‌

பனிப்பூத் தீக்குளி  நோன்றல்  நைந்தாள்.           60

மோரியர் திண்ணிய நெடுங்குடை சாய்த்த

ஆதனுங்கன் தழல் மறமே தமிழ் மறம் என‌

வியந்த  "கள்ளில் ஆத்திரையன்" அன்று

உரைத்த சொல்லே  போதும் போதும் அவன்

தமிழ் வீச்சு'உலக இடைகழி அறைவாய்                65

நிலைஇய'நின்ற வண்ணம் அறிமதி அறிமின்.

மன்னும் நம் மொழி மலர்வாய் மண்டிலம்

எங்கணும் செங்கதிர் பொழியும் தகைத்ததே.

பொருள்வயின் செலீஇய பொன்னம் வெற்பன்

பொதிமுகம் பொதித்த முறுவல் கண்டாள்               70

கனவின் நனவாய் நனவிடை கனவாய்

பிரிவின் நோயினும் இன்பம் இழிதரும்

வெள்ளிடை அருவியில் தோயும் தேயும்.                   73

(தொடரும்)

---------------------------------------

இடைக்காடன் (இ பரமசிவன்)