வண்ணதாசன் அவர்களே.
"நான் எழுதுவது கடிதம் அல்ல.."
என்று இனிய தருணங்களை
அந்த உதடுகள் இசையமைத்துத் தந்ததை
உணர்ந்திருப்பீர்களே!
அந்த பிரபஞ்ச இனிப்பின்
பிய்ஞ்ச சிறகுகள் தான் அவை.
________________________________
சொற்கீரன்
------------------------------------------------------------------------------(1)
வண்ணதாசன் அவர்களே!
நம் ஊருக்கு ஊர்
முக்குக்கு முக்கு
"வெயிலுகந்த" அம்மன்களின்
அன்பான மடிகள் உண்டே.
அந்த வெப்பமும் குளிச்சியும் தானே
அன்னையின் மடி.
அந்த வேப்பம் நிழலில்
காக்கை பிதுக்கிய
வேப்பம் பழ இனிப்பின்
வரிகளே
மண்ணில் வீசிய கவிதைகள்!
_________________________________________
சொற்கீரன்.
__________________________________________(2)
ON VANNADHASAN KAVITHAI 03.09.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக