சனி, 4 அக்டோபர், 2025

"சம்பவாமி யுகே!யுகே!"

 "சம்பவாமி யுகே!யுகே!"

________________________________________


சரி.

பாதிக்கு பாதி.

நீங்க ரெண்டரை வருஷம்

நாங்க ரெண்டரை வருஷம்.

போகட்டும்

உங்களுக்கும் வேண்டாம் 

எங்களுக்கும் வேண்டாம்

எல்லாருமே 

துணை முதல்வர்கள்.

முதல்வரை 2029ல பாத்துக்கலாம்.

என்ன சொல்றீங்க..

சோழிகளை  குலுக்கிப்போட்டுடலாமா?

சீட்டுகள விரியுங்க‌

டேபிள்ள..

காரவானும் வாகனுமும்

ஆயுத பூசை மாலைகள‌

எடுக்க‌ வேண்டாமா?

..............

அந்த நாப்பதுக்கும் மேற்பட்ட‌

உடல்களைப்பாருங்கள்..

ஈக்கள் மொய்த்துக்கொண்டு...


2026ல்

ஜனநாயகத்தை சிதையில் வைக்க‌

சங்குகளில் "பாஞ்ச ஜன்யம்"

முழங்கிக்கொண்டிருக்கிறது...


______________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக