தோழர் பி.எஸ்.ராஜகோபாலன் கிளறி விட்ட என் எல் ஐ சி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நான் எல் ஐ சியில் தேர்வு ஆனது "நான் டெஸ்ட் கேடகரியில். பொருளாதார பட்டப்படிப்பில் 60% மார்க்ஸ்ல் தேர்வு பெற்றிருந்தேன்.மார்ச் 1966ல் எல் ஐ சிக்கு தேர்வு ஆனேன்.அந்த வருடம் தொடர்ந்து ஏ ஏ ஒ
டைரக்ட் ரிக்ருட்மென்ட் போட்டி தேர்வுகள் (இரு தடவைகள் பரீட்சைகள் எழுதி தேர்வு பெற்றேன்.இருதடவைகளிலும் நேர்முக தேர்வில் வெற்றி பெறவில்லை.மேலும் ஏ ஏஃப் ஐ ஐ (ஃபெல்லொசஷிப்) தேர்வு அடைந்தும் ஏ ஏ ஓ உயர்வு கிடைக்கவில்லை.இன்க்ரிமென்ட் மட்டும் கிடைத்தது.எனக்கு "மிஸ்ஸிங் த பஸ்"
என்ற மனவோட்டம் இருந்த போதும் எல் ஐ சி தோழர்களுடன் பெற்ற அனுபவம் அரிது அரிது மிகவும் அரிது.அந்த அறுபது களிலிருந்தே நான் கவிதைகள் எழுதும் பழக்கமுடையவன்.என் கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வருவதுண்டு."செம்மலர்" இதழில் செங்கீரன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.ஆசிரியர் திரு முத்தையா அவர்கள் என் கவிதைகளில் மிகுந்த வாசிப்பு பிரியம் உடையவர்.
1972 ஆகஸ்டு செம்மலர் இதழில் "தோரணங்கள் ஆடுகினறன"என்ற தலைப்பில் இந்தியாவின் "வெள்ளி விழா"
வைப்பற்றி நான் எழுதிய கவிதையை அந்த ஆகஸ்ட் இதழின் "தலையங்கத்திலேயே" வெளியிட்டார்.அதையே நான் பெற்ற விருது ஆக இன்றும் கருதுகிறேன்.மேலும் நம் நண்பர்களின் மனப்போக்குகளை நகைச்சுவையோடு கார்டூன் கவிதைகள் வடிவில் "முகநானூறு" என்ற கையெழுத்துப்பதிப்பாக எழுதி உலவ விட்டேன்.தோழர்கள் ஆர்வமுடன் படித்தார்கள்.அதில் நம் மதிப்பிற்குரிய தோழர் தனபால் பாண்டியன்
அவர்களைப்பற்றி ஒரு கவிதை.அவர் நண்பர்களிடையே கலகலப்பாக பேசி மகிழச்செய்பவர்.கிண்டல் அடித்து அருமையாக பேசுவார்.அவரைப்பற்றி
"நம்மிடையே
உலா வந்து கொண்டிருக்கும்'
ஒரு "பாண்டியன் போக்குவரத்துக்"கலகம்"
இதை நண்பர்கள் எல்லோரும் ரசித்தர்கள். பாண்டியன் அவர்களும் அதை மிக மிக ரசித்தார்.
எல் ஐ சி நண்பர்களிடையே சமுதாய விழுப்பு உணர்ச்சியும் இலக்கிய எழுச்சியும் நிலவியிருந்த அந்த காலத்தை இன்றும் என்னால் மறக்க இயலாது.சமுதாய மானிட ஓர்மை எனும் நூலிழை நம் எல் ஐ சி தோழர்களிடயே சிந்தனை நரம்பிழையாக உலவியதை மறக்கவே இயலாது.
ஆம் அது ஒரு "தோழமையின் உலாக்காலம்"
இப்படிக்கு
இ பரமசிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக