ஞாயிறு, 5 அக்டோபர், 2025

தமிழா பொங்கி வா!

 

தமிழா பொங்கி வா!

_____________________________________


குழந்தையா விஜய்?

சினிமாத்தொட்டிலில் இருந்து

சிங்காரப்புன்னகையைக்கூட‌

ஆங்கார சிறுத்தையாய் ஆக்கி

சீறும் "செல்லுலாய்ட்" 

பொம்மைக்குழந்தையா இது?

அந்த வாகன மேடை ஏதோ

பரமண்டலத்து 

பஞ்சு மெத்தை மேடையா?

மழலை தெறிக்கும் அந்த எச்சிலில்

எப்படி

மிருகவெறி வசனங்கள் தைத்துத்

தரப்பட்டன?

அங்கிள் என்பதும்

சார் என்பதும்

இன்னும் எழுதிக்கொடுத்தால்

"போடா புண்ணாக்கு" என்பதும்

என்ன வகையான‌

"பாயாசப் பாசிசம்"?

அந்தக்காலத்து 

"ஜப்பான் பொம்மையா?"

இல்லை சினிமாத்தனம் 

பொங்கி வழியும்

சப்பாணியா?

விட்டால் "குழந்தை ஏசு"

கோடரி தூக்கிக்கொண்டு நிற்கும்

"கொடூர கோடம்பாக்கத்து"

செட்டிங்க் திகில் காட்சியாய்

வசூல் குவிக்க வந்த 

அரக்கம் கொப்பளிக்கும்

டீஸர் ஆர்ப்பாட்டங்களா?

அந்த நாப்பதுக்கும் மேற்பட்ட‌

உயிரிழந்த உடல்களில்

கூட‌

ஏதாவது அரிதாரம் பூசி

அற்புதம் நிகழ்த்த வந்த‌

ஒரு அரிப்பெடுத்த அவதாரமா?

தமிழ் இனமே!

வந்தாரை வாழ வைக்க 

காலம் காலமாய்

நீ 

சவக்கிடங்கில் அழுகிய‌

சரித்திரமாய்

அமுங்கிக்கிடந்தது போதும்.

சீறி வா.

சிந்தனைத் தீப்பொறி தெறித்து

இந்தப் போலிக்கூட்டங்களை

பொடி பொடியாக்கு.

இந்த மத்தாப்புத்தீயை

சாம்பலாக்கி

புது யுக நெருப்பின் வீரியத்தில்

தமிழ்ப்பேரொளியாய்

பொங்கி வா!

குருட்டுச்சினிமா நிழல்களை

துடைத்தெறியும்

"ஒளி படைத்த கண்ணினனாய்

ஓங்கி உயர்ந்துப்

பொங்கி வா..

தமிழா பொங்கி வா!

_________________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக