ஞாயிறு, 28 மார்ச், 2021

காத்திருப்போம்

 காத்திருப்போம்

___________________________ருத்ரா


காலண்டரில் 

ஏப்ரல் அஞ்சாம் தேதி தாள்

உதிர்ந்து விழுந்தது.

உதயசூரியன் எல்லோருக்கும்

இமை விரித்து நாட்பொழுதை

திறந்து கொடுத்தது.

கியூ..கியூ..கியூ..

மக்கள்

மலைப்பாம்பாய்

நீண்டு வளைந்து

மீண்டும் திரும்பி

நீண்டு வளைந்து....

விரலில்

புள்ளி விழுந்தது.

ஆனால்

விடியல்?

நடுவில் 

எண்ணுவதற்கு உள்ள‌

அந்த இடைவெளியைத் தான்

கேட்க வேண்டும்.

கோடி கோடியாய்

மக்கள் ஆட்சிக்கு விரிக்கும்

கனவுகளின் ரத்தினக்கம்பளம்

கணினிக்குள்ளிருந்து கிளைத்து வருமா?

அது

புயலா?

சுநாமியா?

திக் திக் நிமிடங்களின்

சுருள்களில் 

அனகொண்டா பாம்புகளை அல்லவா

சுருட்டி வைத்திருக்கிறார்கள்.

பகடைகள் 

சகுனிகள் சொற்படி

உருளக்காத்திருக்கின்றன.

ஜனநாயக சிலிர்ப்புகள் இங்கே

சூதாட்டங்களில் தான் 

சூல் கொள்ளுகின்றன.

இந்த பரமபதக்கட்டங்களில்

நம் அரசியல் சாசனம்

நசுங்கிக்கிடக்கிறது.

சமஸ்கிருதத்திலேயே சொல்லுவோமே!

நம் தமிழ் முன்

அந்த "புண்டரீகம்" 

புகை மூட்டமா? இல்லை

பகை மூட்டமா?

காத்திருப்போம்

விடியல் 

நம் விழிமுனையில்.


________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக