சனி, 27 மார்ச், 2021

ஒரே ஒரு ஊரில்

 ஒரே ஒரு ஊரில்

_______________________________

ருத்ரா.



ஒரே ஒரு ஊரில்

ஒரு கடவுள் இருந்தார்.

இருந்தார் என்றால்

இப்போது இல்லையா?

இல்லை இல்லை..

இருக்கிறார்.

எப்படி 

"இல்லை இல்லை" என்றா?

அதெல்லாம் இல்லை.

இருக்கிறார்.

மறுபடியும் இல்லையை ஏன்

துணைக்கு அழைக்கிறீர்கள்..?

சரி..இருக்கிறார் இருக்கிறார்..

சரி தானே?

அப்படி யென்றால்

இன்னும் "இருப்பார்"

என்று நீங்கள் சொல்லவில்லை.

அப்படி என்றால்

நாளை அல்லது அடுத்த கணம்

அவர் இருக்க மாட்டார்

அப்படித்தானே..

அடடா..

இது என்ன பெரிய 

தொல்லையாப்போச்சு?

சரி!

நாளை இருப்பார் 

அப்படித்தானே.

ஏன் அப்படி கேட்கிறீர்கள்?

பொய் தான் கடவுளா?

என்ன சொல்கிறீர்கள்?

நாளை என்ற ஒன்றே இல்லையே!

நாளை என்பது விடியும்போது

இன்று ஆகி விடுகிறதே.

அப்படியானால்

நாளை என்பதும் பொய்

நாளை கடவுள் இருப்பார் என்பதும் 

பொய் தானே!

அய்யோ!

ஆளை விடும் அய்யா?

சரி..அப்போ..கடவுள்?..

அதெல்லாம் வேண்டாம் 

என்னை விட்டு விடுங்கள்..

எனக்கு ஒரு பதில் சொல்லிவிட்டுப்போங்கள்

என்ன சொல்வது?

அது தான் ..கடவுள்..?

கடவுளா..

சரி அவர் இன்னும் பிறக்கவே இல்லை.

என்ன சொல்கிறீர்கள்?

ஆமாம் அய்யா அமாம்!

கடவுள் இன்னும் பிறக்கவில்லை

போய் வாருங்கள்.

பிறந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன்.

..........

..............

வேத கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன.

ஆகாயங்கள் கிழிந்து தொங்குகின்றன.

ஆம்..

கேள்விகளாய் அவை 

கிழிந்து தொங்கிக்கொண்டே இருக்கின்றன.


__________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக