ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பத்தாவது இரவு

 பத்தாவது இரவு

_____________________________ருத்ரா

பெண்ணே!

பார் இந்த கூத்தை.

உன் கோபம் புனிதமானது.

நியாயமானது.

உன் சூலாயுதத்தின் கூர்மை முன்

இந்த பிரபஞ்சங்கள் கூட‌

தூள் தூள்.

ஆனால்

இந்த மனுநீதி முன்

நீ வெறும் மரப்பாச்சி

என்று மந்திரங்கள்

கக்குகின்றார்களே!

இதற்கு இன்னொரு

முனை மழுங்காத வேல் கோண்டு வா!

சனாத சங்கிலிகளைப்

பொடி பொடியாக்க‌

சினத்தீ தெறிக்கும்

வேல் விழி கொண்டு வா!

உன் முதல் இரவுக்கும் பத்தாவது இரவுக்கும்

இடையே தலைநீட்டும்

இந்த சாதி மத ஆதிக்க மிருகங்களை

வேட்டையாடுவதே உன் 

புதிய அவதாரங்கள்.

இந்த எருமை அரக்கப்புராணங்கள்

எல்லாம் எரிக்கப்பட 

அக்கினிச்சட்டிகளை எந்திக்கொண்டு வா!

தாயே! வா ஒரு புயலாய்.

கருவறை தந்து

உலகமே கண்விழிக்கச்செய்யும்

உன் தூய்மை நெருப்பை

தீட்டென்று கதைக்கும்

இந்த தீயசக்திகளே

முதன் முதலாய் 

சம்பலாக்கப்பட வேண்டியவை.

காளி வேடங்களில் 

காமிக் செய்தது போதும்.

உன் ஊழிக்கூத்தை அந்த‌

மானிஷா வால்மீகியிடமிருந்து

தொடங்கு.

உன் சீற்றமே

இந்த‌

மானிடத்தின் கன பரிமாணம்.


____________________________________



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக