சனி, 24 அக்டோபர், 2020

மணல்வெளி

 மணல்வெளி

______________________________________ருத்ரா


ஒட்டகமாகி நடந்து பார்த்தேன்.

வெயில் மழை நனைத்தது.

வெறுமை நீண்டது.

நான் அரேபியாவைச்சொல்லவில்லை.

நாற்பத்தைந்து வயது இளைஞன் 

நான்.

"சோதிட"த்தின் சோர்ந்து போன‌

ராசிக்கட்டங்களிலும்

இன்னும் இன்னும்

பஸ் ஸ்டாண்டு பூங்காக்களில்

ஏதாவது காதல் ஈக்கள் மொய்க்காதா

என்ற‌

ஏக்கப்பெருமூச்சுகளிலும்

ஒரு நீண்டவெளியில்

நடந்து கொண்டே இருக்கிறேன்.

விதி என்றார்கள்.

மிகவும் கனத்த சுத்தியலை எடுத்து

ஓங்கி அதன் மண்டையில் 

அடித்து நொறுக்கிவிட்டுக்கொண்டே தான்

நடந்து கொண்டிருக்கிறேன்.

அதோ விளிம்பு தெரிகிறது.

அது சந்திரோதயமா?

சூரியோதயமா?

என்னைச்சுற்றிய பாம்பு

இருட்டு எனும் சட்டையை

உரித்துப்போடுகிறது.

அனல் காற்றிலும் குளிர்ப்பசை

உணர்கிறேன்.

ஆம்.

நான் நடந்து கொண்டே இருக்கிறேன்.


_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக