வெள்ளி, 2 அக்டோபர், 2020

தேசத்தந்தையே !

 தேசத்தந்தையே !

====================================ருத்ரா


தேசத்தந்தையே!

எந்த ஆண்டும் இல்லாமல் 

இந்த ஆண்டுதான்

உன் வெறுமையை 

அதில் தகிக்கும் அக்கினிக்குழம்பை

தாங்கவொண்ணாமல் 

நாங்கள் தவிக்கிறோம்.

"ஹே ராம் என்று 

கூப்பிட்டாயே

அந்த ராமனிடம் கேள்

ஓ ராமா !

உன் ராஜ்யத்தில் 

செங்கோல் என்றால்

கடப்பாரையா

என்று கேள்.

ஈஸ்வர அல்லா தேரே நாம்

என்றேனே

உனக்கு இந்தி தெரியாதா ?

என்று கேள்.

உன் தராசு தட்டுகளில்

ராமரும் பாபரும்

ஒன்றாய்த்தானே இருந்தார்கள்.

இவர்கள் தராசுகள்

தடம் புரண்டது 

ஏன் என்று கேள்?


"டுமீல் டுமீல்"

அந்த துப்பாக்கியில் இன்னும்

குண்டுகள் 

பாக்கியிருந்தது போலும் !


"உன்னை எத்தனை தடவைகள் 

சுட்டாலும் நீ 

சாக மாட்டாய் போலிருக்கிறது!"

அந்த ராம் 

இன்னும் உறுமிக்கொண்டிருக்கிறான்.

அட!

தேசத்தந்தை தேசத்தந்தை 

என்று இவர்கள்

மலர் தூவிக்கொண்டிருப்பது

இந்த "ராம்"க்கு த் தானா?


"ஹே ராம்!"

நம் தேசத்தந்தை 

மீண்டும் மண்ணில் வீழ்ந்தார்!


========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக