செத்த பாம்பு
_________________________________________ருத்ரா
செத்த பாம்பு என
பெண்மையைப்பற்றிய
ஒரு கவிதை படித்தேன்.
அதுவும் கூட
அங்கே சீறுகிறது!
சட்டை உரிக்கிறது.
பெண் என்றால்
படுக்கை அறையில்
ஆணி மாட்டி அடித்து
நேராக்கி சரியாக்கி
சுவரில் தொங்கவிடப்படுகிற
ஒரு படம்.
அதிலிருந்து
கை முளைத்துக் கொண்டு
காஃபி போடும்.
சிக்கன் குழம்புக்கு மசாலா
அறைக்கும்.
பிறப்பித்த குஞ்சுகளுக்குள்
எல்லாம் தன் உயிரைப்பெய்து விட்டு
மீண்டும்
படத்துக்குள் சுருண்டுவிடும்.
கணவனின் இரவு நேர
அந்த மரப்பாய்ச்சிக்குள்
மின்னல்கள் நெளிவது பற்றி
அந்த கணவனுக்கு
மரத்து செத்துதான் அனுபவம்.
அந்தப் படம்
ஆடையில் இருந்தாலும்
அது எப்போதுமே அவனுக்கு
ஒரு நிர்வாணம்.
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக