சனி, 31 அக்டோபர், 2020

ஓடுகிறீர்கள்

 ஓடுகிறீர்கள்


_________________________________ருத்ரா




கண்ணாடியில் உன்  முகத்தை

 

காணமுடியாத ஒரு முகத்தை

  

அறிய  முடியாத முதல் தருணம்

 

உன் கண்களில் குத்திட்டு

 

நிற்பதே மரணம்.


கீரி பாம்பு இரண்டையும் 


நம் முன் காட்டி  காட்டி

 

ஜனன மரண பிம்பம்பங்களை

 

ஒரு மலிவான வித்தை காட்டுபவனா

  

கடவுள்?


அந்த வித்தை பார்ப்பவர்களில் 


ஒருவனாய் கூட‌


உன் தோள்மீது கை போட்டுக்கொண்டு


நிற்கலாம் அவர்.


நாம் நம் அறிவின் விளிம்பில்


நிற்கும் அந்த கத்தி முனையில்


கடவுளை எக்ஸ் என்று வைத்து


நம் கையில் 


இன்னொரு "ஒய்"யாக இருப்பதை


எக்ஸோடு சமன்பாடு செய்ய முனைகிறோம்.


"டோபாலஜிகல் குவாண்டம் ஃபீல்டு தியரியில்


ஒரு கோஹோமாலஜி"


கண் கொண்டு துருவிப்பாருங்கள் 


கோடிக்கணக்கான பிரபஞ்சவெளிகளையும்


உங்கள் கைப்பிடியில் வைத்து


விளையாடிப்பார்க்கலாம் என்கிறார்


எட்வர்டு விட்டன்.


இவர் கணித அறிவின் உச்சத்தில் நின்று


ஒரு நோபல் பரிசுக்கு இணையான‌


"ஃபீல்ட்ஸ் மெடல்"வாங்கிய அமெரிக்க விஞ்ஞானி.


ஓகோ!


இப்படியும் ஒன்று இருக்கிறதா


என்று அந்த கடவுளுக்கு


வியப்பு மேல் வியப்பு.


அதனால் தான்


அவர் நம்மைத்தேடி வந்து


நம்மோடு ஒட்டி நிற்கிறார்.


"அங்கே எங்கே ஓடுகிறீர்கள்?


அது நான் இல்லை.


நான் அது இல்லை"


என்கிறார்


"ஆத்திகர்களே


இந்த நாத்திகனைத்தேடியா


நீங்கள் ஓடுகிறீர்கள்?"


அவர் குரல் துரத்துகிறது


அவரையும் சேர்த்து தான்.


_________________________________________






வெள்ளி, 30 அக்டோபர், 2020

பொருளாதார வளர்ச்சி

 

பொருளாதார வளர்ச்சி 

----------------------------------------------------------ருத்ரா 


ரூபாய்க்கு இவ்வளவு ஜி.பியா?

ஈசல்களுக்கு கொண்டாட்டம். 

குவிந்தன  கோடிகள்...ஆனால் 

உதிர்ந்தவை அத்தனையும் 

ஈசல் சிறகுகள் 

பொருளாதார வளர்ச்சி

_________________________________


கரையில்லாத கடல்

 கரையில்லாத கடல்

________________________________________ருத்ரா


அது என்ன?

அலைகள் பொங்கினால்

அதில் உன் சிரிப்பு தெரிகிறது.


ஒதுங்கும் கிளிஞ்சல்களும் நண்டுகளும்

காகிதம் தேடி செல்லவில்லை.

அன்று நாம் நடந்த‌

அப்புறம் அழிந்த அந்த‌

அமுதச்சுவடுகளை கவிதை எழுத.

அந்த மணல் படுகையே

மாணிக்க ஓலைகள்

அவைகளுக்கு.

எழுதி எழுதி மறையும் அந்த வரிகளை

கவ்வி கவ்விச்சுவைக்கும்

அலைத்திவலைகள்.


அந்த கடல் எனும் துணிவிரிப்பில்

உன் மயிலிறகு முந்தானை.

அந்திகள் தோறும் 

மருதாணிக்குழல் பிதுக்கிய உன்

மனவெளிச்சித்திரங்கள்

எத்தனை? எத்தனை?


எனக்கு எப்போது உன் இதழ்கள் 

பிரியும்?

ஆம் என்று.


காத்திருக்கிறேன்.

களைப்பு எனக்கு இல்லை.

கால் கடுக்க நிற்கிறேன்.

கொஞ்சம் கவனி என்கிறது

காலத்தின் செங்குத்துக்கோடு.

குதிரையின் பிடறிமயிர்களாய்

மணலோர நுரை வருடல்களில்

கிச்சு கிச்சு மூட்டும்

தருணங்களுக்கும் தெரியும்

உன் சொல் உதிர்வு ஒவ்வொன்றும்

கோடி யுகங்களின்

விழுதுகள் போல் நீளும் என்று.


சரி என்று

கெட்டி மேளங்களுக்குள்

நாம் முடங்கிக்கொள்ளத்தேவையில்லை.

கிழிந்த தவில் முதுகுகளுக்கு

தையலும் போட வேண்டியதில்லை.


தூரத்து அடி வான விளிம்பு

ஒரு உதடு.

தளும்பும் நீர்ப்பிம்பம்

இன்னொரு உதடு.

அந்த முத்தத்தின்

அதிர்வு

துல்லியமாய்

என்னை நிமிண்டுகிறதே.

அது போதும்.

மொத்தமாய் இந்த பிரபஞ்சம் முழுதும்

நரைத்துப்போகட்டுமே.

காதல் தீயில்

காதல் குளிக்கிறது.

கோடி நிலாப்பிறைகள்

குஞ்சம் கட்டி கவரியாய் குழைந்து

ஒரு மௌனத்தின் மேல்

ஒரு மௌனத்தை முலாம் பூசி

கலித்தொகை காட்டுகிறது.

கடல் தெரியாத கரையில் உட்கார்ந்து

கரையில்லாத கடலில் நீந்துகிறோம்.

காட்சிகளின் "சவ்வூடு" பரவலில்

வெறுமை எனும் "ஹோலோகிராஃபி"

நம் உள்ளங்களை இழையூட்டம் செய்கிறது.

அந்தக் காதலை

நாம் இருவரும் 

பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

பார்த்துக்கொண்டே இருந்தோம்.

பார்த்துக்கொண்டே இருப்போம்.


_____________________________________________________









"மேலாண்மை பொன்னுச்சாமி."

Melanmai ponnuswamy.JPG

நன்றி... https://en.wikipedia.org/wiki/Melanmai_Ponnusamy



எழுத்து என்றால் என்ன?

அதில் பசியின் அமிலம் எரியலாம்.

மயில்பீலிகளின் வர்ணம் தெரியலாம்.

கருவாட்டுக்குழம்பு ஏக்கத்தோடு

வியர்வையின் அமுதக்குடம் சுரக்கலாம்.

உப்பரிகையாளர்களுக்கும்

உப்புக்கரிக்கும் உழைப்பார்களுக்கும்

கால் பதிக்கும் சமூகம் ஒன்று தான்.

சுவடுகள் தோறும் முரண்கள்.

இதைக்களைய எண்ணும் 

எழுத்துகள் களைப்பதே இல்லை.

சாஹித்ய அகாடெமியோ..ஞானபீடமோ

சமயங்களில்

தன் மீது படிந்த அழுக்குகளை

கழுவிக்கொள்ள இவைகளுக்கு 

மிகச்சிறந்த‌

எழுத்துக்கள் தான் தேவைப்படுகின்றன.

அந்த எழுத்துக்களாய்

நிமிர்ந்தே இருந்தவர் நம்

"மேலாண்மை பொன்னுச்சாமி."

நாய் குரைப்பதை மட்டுமே எழுதுபவன்

வெறும் பேனாவில் தான் எழுதுகிறான்.

அதன் ஊளைக்குரல் ஊசிக்குரலாய்

சூரியனுக்கே ஊசி போடுகிறது

என்று எழுதுபவன்

மண்ணின் அடி "லாவா"வைத்தொட்டு

எழுதுபவன் ஆகிறான்.

இவனே அந்த செம்மை எழுத்தாளன்.

அவனுக்கு நம்

சிவப்பு வணக்கங்கள்.


______________________செங்கீரன்.



வியாழன், 29 அக்டோபர், 2020

"ஏழரை"

 "ஏழரை"

_____________________________

ருத்ரா



ஏழரையை

"ஏழரை" ஆக்கலாம்

என்று

எதிர்பார்த்த 

ஏழரைகளுக்கே

ஒரு ஏழரையை ஏவிவிட்டார்

ஒரு அரசாணை மூலம்

மாண்பு மிகு எங்கள்

எடப்பாடி அவர்கள்.

அவருக்கு பாராட்டுகள்.


____________________________


VOICE

\வாய்ஸ்

====================================ருத்ரா


ரஜனி எனும் 

எங்கள் உயிரே!

மூச்சே! பேச்சே!

தலைவா!

எங்கள் குரல் உன் நெஞ்சைத்

தொடவில்லையா?

எத்தனை நாளாய் உன் 

டையலாக்குகளின் கையில்

செங்கோலைக்கொடுத்து

இந்த தமிழ் பூமியை 

நீ ஆளவேண்டும் என்று

ஏங்கிக்கிடக்கிறோம்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு

அறிக்கையா?

சரி!

பரவாயில்லை.

நாங்கள் எங்கள் கன்னங்களில் வழியும்

கண்ணீர் வைரங்களை

கையில் ஏந்திக்கொண்டு

ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்.

அந்த அறிக்கையே இனி உங்கள்

தேர்தல் அறிக்கை.

பரத கண்டம் இது.

இந்த பரத புத்திரர்களுக்கு

உன் பாதுகைகளே போதும்.

வாய்ஸ் கொடு போதும்.

கோட்டை உன் வசம்.

இங்கு

எந்த துரும்பும் தூசும்

உன் மூச்சுகளையே

வந்தேமாதரம் என்று முழங்கும்.

"ஜெய்ஹிந்த்"

....................


ஜி அறிக்கை சரியாய் இருக்கிறதா?

இதை தமிழ்மக்களின் குரலாய்

ஊடகங்களில் ஊதி விட்டு விடலாமா?

டெல்லியில்

ஒரு ஜி இன்னொரு ஜி யிடம்

கேட்டுக்கொண்டிருக்கிறது.


__________________________________




செவ்வாய், 27 அக்டோபர், 2020

செவிமடுப்பீர் நண்பர்களே

 செவிமடுப்பீர் நண்பர்களே

________________________________________________ருத்ரா


இன்று சொற்கள் எங்கும் எதிலும் தூவிக்கிடக்கின்றன.தொலைக்காட்சிகளில் செய்திகளாய் வழக்குரைகளாய் "அரசியலே ஒரு சாக்கடை" என்று அரசியலுக்குள் இன்னொரு அரசியலாய்

பல ஆளுமைகளின் சொற்பொழிவுகளாய் நிரம்பி வழிகின்றன.நம் ஜனநாயக மண்டபத்தில்

தூண்கள் எல்லாம் கரையான்களால் நச்சுப்பூச்சிகளால் பாழ்படுத்தப்படுகின்ற‌ன.அதில் எங்கோ

ஒரு செய்தித்துளியாய் யாரும் அந்த மூலைக்கு போகவிடாத படிக்கு மிரட்டப்பட்ட ஊடகங்களால்

மறைக்கப்பட்டு கிடக்கிறது இது.அது தான் தேர்தல் கணிப்பொறி மோசடி.ஆதாரம் இல்லை என்பார்கள்.புகை இல்லை அதனால் தீ இல்லை என்பார்கள்.இல்லாவிட்டால் தீயும் இல்லை புகையும் இல்லை என்பார்கள்.மற்ற அன்றாட செய்தி இரைச்சல்களைக்கொண்டு இதை மழுங்கடிப்பார்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். முழுக்க முழுக்க உண்மையாய் இது இருந்த போதிலும் ஒரு விழுக்காடு தான் உண்மை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம்.அப்படி எனில்

அந்த ஒரு விழுக்காட்டு உண்மை வெளியே வராமல் போனால் இவர்களின் சட்டத்திற்குப்புறம்பான ஆட்சி பலப்பல ஐந்தாண்டுகளையும் விழுங்கிக்கொண்டு முன்னேறத்தானே செய்கிறது.அது சர்வாதிகாரத்தின் உச்ச கட்டம் அல்லவா.அது வெளியே தெரியவே கூடாது.பல படிகளையும் தாண்டி

அத்தி பூத்தாற்போல் இது வரை ஆட்சி செய்தது தவறு என்று ஒரு பெரிய தீர்ப்பே வந்து விட்ட போதும்

அந்த சர்வாதிகாரத்தின் கடந்துபோன நச்சு நிழல்களை அழித்துவிடுகிறார்களா என்ன? 

இதற்கு என்ன தீர்வு?

வரும் காலங்களில் இந்த ஜனநாயகம் தூய்மை பெறுமா? இல்லை ஏற்கனவே செய்தது தானே.ஆளும்

எந்திரத்தின் எல்லா நட்டுகளும் போல்ட்டுகளும் நம் கையில் தானே என்று அதே அரக்கன் புனிதமான‌

மஞ்சள் குங்குமதோடு சிம்மாதனத்தில் நிரந்தரமாய் கோவில் கொண்டுவிடுவானா? என்பதே

நமக்கு இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி ஆகும்.ஏனெனில் நமக்கு கோவில் பூஜைகள் அர்ச்சனைகள் கும்பாபிஷேகங்கள் இவையெல்லாம் தானே வாழ்வாதாரம் என்று பிம்பம் கட்டி வைக்கப்பட்டிருக்கிற்து.ஐநூறுக்கும் மேல் சீட்டுகள் ஜெயிக்கும் "மாந்த்ரீக தாந்த்ரீகங்கள்"எல்லாம் செய்து தரும் செல்லப்பிள்ளைகளான கார்ப்பரேட்டுகள் உதவிக்கு வரத்தயார்.சித்தாந்த வலிமை இல்லாத கட்சிகளின் ஊழல் சுக போகங்களும் இந்த அநீதிக்கு கவரி வீச காத்திருக்கின்றன.

இனி என் செய்வது?

அன்றைய தொழிற்புரட்சி நம் முகத்தை அகத்தை எல்லாம் மாற்றியது.

நாம் யதார்த்தங்களுக்குள் வந்தோம்.இன்றைய மின்னணுப்புரட்சியோ நம்மை நாமே ஏய்த்துக்கொள்ளும் ஒரு மாயாபஜார் என்னும் ஃபன்டாசி உலகத்தில் உலவ விட்டுக்கொண்டிருக்கிறது.

மொத்தமாய் சமூக மனமுறிவு உற்ற ஒரு மெய்மை என்ற பொய்மைக்குள் (வெர்ச்சுவல் ரியாலிடி) நம்மை தள்ளிவிட்டது.துர்நாற்றம் வீசுகின்ற வியர்வையின் உழைப்பு தான் உண்மையான நம் முகம் அகம் எல்லாம்.ஜிகினா அழகும் போலித்தூய்மையும் (ப்யூரிடானிசம்) தான் இன்னமும் நம்மை முடக்குகிறது.இது ஒரு பக்கம்....இன்னொருபக்கம்...


இளைஞர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள்.

சினிமாக் கதாநாயகர்களை தோளில் ஏற்றிக்கூத்தாடுகிறார்கள்.

இல்லத்தரசர்கள் இல்லத்தரசிகள் பஞ்சுமிட்டாய் போன்ற துணுக்கு செய்திகளில்

புரண்டு கிடக்கிறார்கள்.

சமூக ஊடகங்களும் சாணக்கிய ஊடங்களாய் மௌனித்து காய் நகர்த்துகின்றன.

வைக்கல்படப்புக்குள் விழுந்துவிட்ட இந்த "நீதி" எனும் ஊசியை

எப்படி இனம் பிரிப்பது?

நீதி தேவன் மயக்கம் என்பது கூட சரியாகாது.

நீதி தேவதையின் "கோமா"வில் கிடக்கிறது நம் அரசியல்கள் எல்லாம்.

நம் சிந்தனை தெளிவது எக்காலம்?

நம் சுதந்திரம் மீள்வது எப்படியோ?


===========================================================







நல்ல காலம் வருகுது

 நல்ல காலம் வருகுது 

__________________________________ருத்ரா


அந்த குடுகுடுப்பைக்காரன்

நல்ல காலம் வருகுது 

நல்ல காலம் வருகுது

என்று குரல் பிஞ்சுகளை

உதிர்த்துக்கொண்டே வந்தான்.

சாதிகள் தொலையுது 

சண்டைகள் தொலையுது

என்று உதறி உதறி ஒலித்துண்டுகளை

இறைத்துக்கொண்டே வந்தான்.

அந்த தெருவெல்லாம் 

அந்த நம்பிக்கையால் 

கழுவி கழுவிச் சுத்தம் செய்யப்பட்டது.

அவனது குடுகுடுப்பை ஒலி

அந்த ஊரின் கடைக்கோடிக்கும் அப்பால்

ஒரு விளிம்புக்கு வந்தது.

இங்கே உள்ளவர்களுக்கு 

அது சுடுகாடு.

ஆனால் அதை ஒட்டியே

அவனைப்போன்றவர்களின்

இருப்பிடங்கள் 

சினிமாத்தட்டிகளிலும் சில்லறைத்தகரங்களிலும்

வேய்ந்த "மாளிகைகளாய்"

இறைந்து கிடந்தன.

அப்படி ஒரு 

"வசந்த மாளிகையின்" 

சிவாஜிகணேசனும் வாணிஸ்ரீயும்

தலைகீழாய் கவிழ்த்து வைக்கப்பட்ட‌

உறைவிடங்களாய் 

அந்த திரைப்பட போஸ்டரில் 

நம் சமூகப்பொருளாதாரத்தை

திரைப்படம் காட்டின.

அவனைப்போன்றவர்கள்

தங்கள் 

ஜனனங்களையும் மரணங்களையும் கூட‌

முதுகில் தூளி கட்டி 

சுமந்து சென்று கொண்டிருப்பார்கள்.

அடர்ந்து கிடந்த இருட்டில் 

விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டன.

ஓ!விடிந்து விட்டது.

நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன.

ஒன்றோடொன்று பாய்ந்து பிராண்டின.

"நல்ல காலம்" எல்லாம் 

அங்கே நார் நாராய் கிழிந்து கிடந்தன.

___________________________________________

ஒரு காதல் பேச்சு


ஒரு காதல் பேச்சு

==============================ருத்ரா 


எத்தனைப்புள்ளிகள் 

இருக்கின்றன என்று

அந்த புள்ளி மானிடம் அவன் 

புள்ளிவிவரம் 

கேட்டுக்கொண்டிருக்கிறான்.


=================================






____________________________ருத்ரா

செதில் செதில்களாய்

 செதில் செதில்களாய்

__________________________________________ருத்ரா


ஆயிரம் ரெண்டாயிரம்

கவரில் செருகி வந்து கொடுத்தார்கள்.

அப்போதும் போட்டோம்.

தாலிக்கு என்று

அரைபவுன் தங்கம் கொடுத்து

கெட்டிமேளம் கேட்காத 

பிய்ஞ்சு போன காக்கைச்சிறகுகள் போன்ற‌

குடிசைக்குள் எல்லாம்

மங்கலம் ஒலிக்க வைத்தார்கள்

அப்போதும் போட்டோம்.

லேப் டாப்

ஆடு மாடு கோழி...

பரிவர்த்த‌னையை இனி

"எந்த ரூம் போட்டு வடிவேலு பாணியில்

தரலாம்" என்று 

தருகிறார்கள்.

தருவார்கள்.

அப்போதும்

போடுகிறோம்

போடுவோம்

போட்டோம்.

நம் மொழியின் உயிர்

பறவைகள் கொத்திக்குதறும்

கோழிக்குடலாய் 

வீதியில் வீசியெறியப்பட்டுக்

கிடக்கிறதே.

மொழியை அழிக்க 

இனத்தை அழி

என்று 

ஒரு கசாப்புக்கார‌

சாணக்கியத்தனத்தோடு

"இதோ பாருங்கள் பொன் முலாம் பூசிய‌

சவப்பெட்டிகள்" என்கிறார்கள்.

எல்லாம் உங்களுக்கே என்கிறார்கள்.

நம் தமிழுக்கு இன்னும் ஒரு கடல்கோளா

இந்த நாசப்பேரலைகளால்?

நூற்றிமுப்பத்திமூணு அடி உயரம் கொண்ட

நம் அய்யன் வள்ளுவனுக்கு

காவி பூசி ருத்திராட்சம் போட்டு

கீழே சலவைக்கல்லில்

"வால்மீகி ரிஷி"என்று

பெயர் பொறிப்பார்களோ நாளை?

சுற்றுலா என்று

அதையும் பார்க்க கியூவில் டிக்கட் வாங்க‌

காத்திருக்கப்போகிறாயா

என் உயிரினும் இனிய தமிழனே!

உன் முதுகில் உன் மரணமா?

இது எப்படி?

உன் விழியில் உன் பார்வை இல்லை.

உன் மொழியில் உன் உயிரும் இல்லை.

அதோ வருகிறார்கள் 

நம் வரலாற்றுச்சருகுகள் சர சரக்க 

மிதித்துக்கொண்டு!

ஏற்கனவே தட்டி விட்டோம் பட்டனை

தொட்டுக்கொடுத்தால் 

போதும்

என்கிறார்கள்.

கணிப்பொறியே கூசுகிறது

இப்படி ஒரு கேவலமான பொய்யை

என் வயிற்றுக்குள்

செருகுகிறீர்களே என்று.

தினம் தினம் நீங்கள் பார்ப்பது

உதிக்கும் சூரியன் அல்ல!

நம் தமிழின் 

ரத்தக்கண்ணீர்ப்பெருக்குகள்

அவை.

ஈசல்களே உங்கள்

சிறகுகளை இன்னுமா

கோடி கோடியாய் குவித்து

ஒரு மயானதேசத்தின்

மணிக்கொடியை பறக்கவிடப்போகிறீகள்.

இவை

ஓட்டுக்கள் அல்ல..ஓட்டுக்கள் அல்ல‌

தேசத்தின் ஜனநாயகத்தை

செதில் செதில்களாய் ஆக்கும்

வெட்டுகள்..வெட்டுகள்

ஆம்.

வெட்டுகளே தான்.


_________________________________________






திங்கள், 26 அக்டோபர், 2020

அக்கினிக்குஞ்சு

 

அக்கினிக்குஞ்சு
_________________________________________________________



ஒரு சிறந்த கவிதைக்குள்அக்கினிக்குஞ்சு ஒன்றுவைத்தீர்கள்.அது தீம் திரி கிட..என்கிறது.வெந்து தணியட்டும் இந்த காடு.ஆணாதிக்க எலும்பு மிச்சங்களைஅப்போது பார்க்கலாம்._______________________________ருத்ரா
இந்த என் கவிதைக்கு காரணமாய் இருந்த‌கவிதை இது.



அவளுக்கு பேசத்தெரியாது எனஎனக்காக யாரோ பேசியபோதுநான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு கூச்ச சுபாவம் எனஎன் மௌனங்களை யாரோ மொழிபெயர்த்தபோது நான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு இதுதான் நல்லதெனஎன் விருப்பங்களை யாரோ தேர்வு செய்தபோதுநான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு என்ன தெரியும் எனஎனக்காக யாரோ முடிவெடுத்தபோது நான் அமைதியாக இருந்து விட்டேன்..இப்படித்தான்ஒவ்வொரு முறையும்எனக்கெனஎன் நன்மைக்கெனயார் யாரோ முடிவெடுத்துக்கொண்டிருந்தார்கள்..நானோபேருந்தின் ஜன்னலோர பயணியைப்போலவெறுமனே நடப்பவற்றைவேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்..பின்பொருமுறைநீள் கனவொன்றிலிருந்துவிடுபட்டு வந்து...யாருடையதை போலவோயார் யாரோ நிர்மாணித்திருந்தஎனக்கானவாழ்விற்குள்யாரையோ போலஉள்நுழைந்துப்பார்த்தேன்..அந்தோஅங்குநான் இறந்து வெகு காலமாகிப்போய் விட்டிருந்தது!!!-ரிஸ்கா முக்தார்-

பேட்ஜ் ஐகான்
காட்சிகள் மூலம் கதை சொல்பவர்
 1h 



செத்த பாம்பு

 செத்த பாம்பு

_________________________________________ருத்ரா


செத்த பாம்பு என‌

பெண்மையைப்பற்றிய‌

ஒரு கவிதை படித்தேன்.

அதுவும் கூட 

அங்கே சீறுகிறது!

சட்டை உரிக்கிறது.

பெண் என்றால்

படுக்கை அறையில்

ஆணி மாட்டி அடித்து

நேராக்கி சரியாக்கி

சுவரில் தொங்கவிடப்படுகிற‌

ஒரு படம்.

அதிலிருந்து 

கை முளைத்துக் கொண்டு

காஃபி போடும்.

சிக்கன் குழம்புக்கு மசாலா

அறைக்கும்.

பிறப்பித்த குஞ்சுகளுக்குள்

எல்லாம் தன் உயிரைப்பெய்து விட்டு

மீண்டும்

படத்துக்குள் சுருண்டுவிடும்.

கணவனின் இரவு நேர‌

அந்த மரப்பாய்ச்சிக்குள்

மின்னல்கள் நெளிவது பற்றி

அந்த கணவனுக்கு

மரத்து செத்துதான் அனுபவம்.

அந்தப் படம்

ஆடையில் இருந்தாலும்

அது எப்போதுமே அவனுக்கு

ஒரு நிர்வாணம்.


__________________________________________


அழகிய பெண்ணே!

 அழகிய பெண்ணே!

_________________________________________

ருத்ரா


அழகிய பெண்ணே!

அழகிய பெண்ணே!

அந்த‌ டிவியில் 

வண்ண வண்ண‌

ரவிக்கைகளுடன் 

வலம் வந்தாய்.

எப்படி இப்படி 

திடீரென்று

பயங்கர டைனோசாராய்

பயம் காட்டுகிறாய்?

இந்த பிஜேபி 

கிரீன் ரூமில் இருந்து

கோரைப்பல் 

தொங்கும் நாக்கு சகிதமாய் 

கபாலமாலையுடனா

ஜனநாயகத்தை

வதம் செய்ய கிளம்பியிருக்கிறாய்?

இது

" பாரத மாதாஜி கி ஆவாஸ் ஹை"

______________________________

அம்பது

 இடஒதுக்கீடு இனி வெறும்

சட ஒதுக்கீடு.

அதனால் கிடைத்தது

அம்பது "சட"வீதம்.

___________________________ருத்ரா

சுஜாதா ஜீனியஸ்களுக்கெல்லாம் ஜீனியஸ்

 சுஜாதா ஜீனியஸ்களுக்கெல்லாம் ஜீனியஸ்

______________________________________________ருத்ரா


அருமை அன்பர் திரு ராம்ஸ்ரீதர் அவர்களின் பதிவு மிக மிக அருமை.



"என் கையைப் பின்பக்கத்தில் கட்டினாள்."அழைத்துச் செல்லுங்கள்" என்றாள்.

ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்."



சுஜாதாவின் "யாகம்" சிறுகதை இப்படி முடிகிறது.


அப்புறம் நம் விஷுவலைசேஷனில்

எல்லாம் தெரிகிறது.

எல்லாம் புரிகிறது.

ஒரு வீட்டுக்கு ஒருவனை பலிகொடு.

ஒரு ஊருக்கு நாலு பேரை பலிகொடு.

ஒரு நாட்டுக்கு

ஆயிரம் ஆயிரமாய் பலி கொடு.

பிரம்மம் எனும் ஆர்கசம் எனும் பேரின்பம்

அப்போது தான் உச்சம் பெரும்.

வேத ஸ்லோகங்களின் 

அடி அமிலம் 

இப்படித்தான் 

மனிதனோடு சேர்த்து 

சமூகத்தை எரிக்கிறது.

எரிக்கிறதை

புனிதமாகச்சொன்னால் "யாகம் அல்லது யக்ஞம்".

கோத்ராவும் புல்வாமாவும்

அப்படித்தான் என்று

பத்திரிகைகள் எழுதலாம்.

வேதங்கள் காற்றின் ஒலிகள்.

அது மனித நாக்குகளில் வருடப்படும்போதே

அபவுர்ஷம் என்பதிலிருந்து

புருஷம் ஆகி தீட்டு ஆகிவிடுகிறது.

அப்புறம் எதற்கு இந்த‌

புருஷ சூக்தங்களும்

வர்ணாசிரமங்களும்?

சுஜாதா 

(அவர் பூணூலில் இருந்தால்)

இப்படி எழுதுவது

ஒரு எழுத்தின் நேர்மையின் நெருப்பாகத்தான்

இருப்பதாக நமக்கெல்லாம்

சிலிர்க்கிறது.

ஆரியம் திராவிடம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்

இன்னும் வடமொழிகளும் கூட‌

ஃபிஸிக்ஸின் "க்ராண்ட் யுனிஃபிகேஷன்" போல்

ஒரு புள்ளியில் நிலைகுத்துகிற வேலையை 

சுஜாதா அவர்கள் செய்திருப்பார்.

இப்போதும் கணிமொழிக்குள்

தமிழின் ஒரு சங்கப்பலகையை

தோண்டியெடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகள்

செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுஜாதாவின் எழுத்துக்குள்

நம் தமிழ் தொன்மையின் ஃபாசில்கள் கூட‌

உறங்கிக்கொண்டிருக்கலாம்.

வேதத்தை அகழ்வாராய்ச்சி செய்தால்

தமிழ் எனும் அந்த ராட்சச டினோசார்களின்

எலும்பு மிச்சங்கள் கிடைக்கலாம்.

பக்கங்களை சேர்த்துக்கொண்டே

கடைசி அட்டைக்கு காத்திருக்காமல்

ஆயிரம் ஆயிரம் பக்கங்களை 

அடுக்கிக்கொண்டே போகும்

அசுர புத்தகம் சுஜாதா.

அத்தனையிலும் அறிவுத்தேனின் 

இனிப்புகள் பிலிற்றும்

இன்ப அனுபவங்கள்.

அவர் எழுத்துக்களுக்குள் நுழைந்து

ஒரு ஹிக்ஸ் போசானின்

செகஸ் கலைடோஸ்கோபை

அதாவது 

("கப்ளிங்க் கான்ஸ்டன்ட்டும்

ஃபெய்ன்மன் டையாகிராம்ஸ்ம்")

சுழற்றி சுழற்றி

படித்துப்பார்க்க ஆசை.


____________________________________________________________________

 


ஞாயிறு, 25 அக்டோபர், 2020

திரு.இராம.கி அவர்களே

 திரு.இராம.கி அவர்களே

__________________________________


அன்பு செறி திரு இராம.கி அவர்களே

உங்களுக்கு எங்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வேலையற்றவர்கள் 

எண்ணிக்கொண்டிருக்கட்டும்

உங்கள் அகவைகளை.

எங்கள் தமிழ் உயிர்ப்பின்

விடியல் ஏந்தி வரும்

ஊழிப்புயல் நீங்கள்.

இந்த‌

காலமற்ற காலங்கள் எல்லாம்

உங்கள் காலடியில்.

நீடூழி நீடூழி....நீடூழி

நீங்கள் வாழ்க!


_______________________ருத்ரா இ பரமசிவன்




பத்தாவது இரவு

 பத்தாவது இரவு

_____________________________ருத்ரா

பெண்ணே!

பார் இந்த கூத்தை.

உன் கோபம் புனிதமானது.

நியாயமானது.

உன் சூலாயுதத்தின் கூர்மை முன்

இந்த பிரபஞ்சங்கள் கூட‌

தூள் தூள்.

ஆனால்

இந்த மனுநீதி முன்

நீ வெறும் மரப்பாச்சி

என்று மந்திரங்கள்

கக்குகின்றார்களே!

இதற்கு இன்னொரு

முனை மழுங்காத வேல் கோண்டு வா!

சனாத சங்கிலிகளைப்

பொடி பொடியாக்க‌

சினத்தீ தெறிக்கும்

வேல் விழி கொண்டு வா!

உன் முதல் இரவுக்கும் பத்தாவது இரவுக்கும்

இடையே தலைநீட்டும்

இந்த சாதி மத ஆதிக்க மிருகங்களை

வேட்டையாடுவதே உன் 

புதிய அவதாரங்கள்.

இந்த எருமை அரக்கப்புராணங்கள்

எல்லாம் எரிக்கப்பட 

அக்கினிச்சட்டிகளை எந்திக்கொண்டு வா!

தாயே! வா ஒரு புயலாய்.

கருவறை தந்து

உலகமே கண்விழிக்கச்செய்யும்

உன் தூய்மை நெருப்பை

தீட்டென்று கதைக்கும்

இந்த தீயசக்திகளே

முதன் முதலாய் 

சம்பலாக்கப்பட வேண்டியவை.

காளி வேடங்களில் 

காமிக் செய்தது போதும்.

உன் ஊழிக்கூத்தை அந்த‌

மானிஷா வால்மீகியிடமிருந்து

தொடங்கு.

உன் சீற்றமே

இந்த‌

மானிடத்தின் கன பரிமாணம்.


____________________________________



 

தொற்று

தொற்று

_________________________________________


கல்லூரி வகுப்புகள் இல்லை.

சந்திப்புகளும் இல்லை.

அவள் கண்களைக் கடைசியாய்க்

கண்டதே

தூண்டில் முள்ளாய்

வதைத்துக் கிடக்கின்றேன்.

புகைப்படம் இருந்தது.

சரியாய்த்தான் சொன்னார்கள் 

புகைப்படம் என்று.

பிரிவின் கொடுந்துயர்ப் 

புகை மூட்டத்தில்

ஒரு 

எரிமலைக்குழம்பால் அல்லவா

என்னைக்

குளிப்பாட்டுகின்றாள்.

காதல் எனும் தொற்றுநோய் உற்றபின்

கொரோனாவும் என்னிடம்

புறமுதுகிட்டு ஓடிச் சென்றது.


___________________________________ருத்ரா 

குரல்

 குரல்

____________________ருத்ரா இ பரமசிவன்


காலண்டரை மாட்ட‌

சுவரில் ஆணி அடித்தேன்.

மௌனமாய் ஒரு குரல்

ஆமென் என்று.

மனசாட்சிகள் தனியே

கழன்றுகொண்டு நிற்பது போல்

மிதந்து கிடந்தேன்.

கடவுளின் குரல் என்றாலும்

அது 

மனித அவலத்தின் ஒலி.

அந்தக் குரலின் கசிவில்

அந்தியின் சிவப்பு.

காலத்தின் மறைவா?

காலத்தின் தோற்றமா?

காலண்டர் தாள்கள்

பட படத்துக் கேட்டன


_____________________________________




சனி, 24 அக்டோபர், 2020

காக்காவின் எச்சம்.

 முட்டி முளைத்து

தலை நீட்டுகிறது

பாறையில் ஏதொ ஒரு பயிர்.


காக்காவின் எச்சம்.

________________________ருத்ரா


மணல்வெளி

 மணல்வெளி

______________________________________ருத்ரா


ஒட்டகமாகி நடந்து பார்த்தேன்.

வெயில் மழை நனைத்தது.

வெறுமை நீண்டது.

நான் அரேபியாவைச்சொல்லவில்லை.

நாற்பத்தைந்து வயது இளைஞன் 

நான்.

"சோதிட"த்தின் சோர்ந்து போன‌

ராசிக்கட்டங்களிலும்

இன்னும் இன்னும்

பஸ் ஸ்டாண்டு பூங்காக்களில்

ஏதாவது காதல் ஈக்கள் மொய்க்காதா

என்ற‌

ஏக்கப்பெருமூச்சுகளிலும்

ஒரு நீண்டவெளியில்

நடந்து கொண்டே இருக்கிறேன்.

விதி என்றார்கள்.

மிகவும் கனத்த சுத்தியலை எடுத்து

ஓங்கி அதன் மண்டையில் 

அடித்து நொறுக்கிவிட்டுக்கொண்டே தான்

நடந்து கொண்டிருக்கிறேன்.

அதோ விளிம்பு தெரிகிறது.

அது சந்திரோதயமா?

சூரியோதயமா?

என்னைச்சுற்றிய பாம்பு

இருட்டு எனும் சட்டையை

உரித்துப்போடுகிறது.

அனல் காற்றிலும் குளிர்ப்பசை

உணர்கிறேன்.

ஆம்.

நான் நடந்து கொண்டே இருக்கிறேன்.


_______________________________________________

பாலன்ஸ்

 பாலன்ஸ்

__________________________ருத்ரா இ பரமசிவன்


எத்தனை முறை கூப்பிட்டேன்.

வரவே இல்லை கடவுள்.

எரிச்சலில் 

கைபேசியை வீசப்போனேன்.

அப்போது தான் பார்த்தேன்

என் அழைப்புகள் யாவும்

"மிஸ்டு கால்"களால் மறிக்கப்பட்டிருந்தன

கடவுளிடமிருந்து!

பாலன்ஸ் இல்லையென்று!

______________________________ரு

குறும்பாக்கள் மூன்று

 குறும்பாக்கள் மூன்று

__________________________________


ஊழல் வளி மண்டல மேலடுக்கு

சுழற்சியால் அடுத்த சில 

மாதங்களில் பணமழை.


தேர்தல்

_________________________ருத்ரா


ஒரு "குவா"வில்

கிடைக்கும்

பிரபஞ்சத்தின் சாறு.


மகப்பேறு மருத்துவமனை.

_______________________________ருத்ரா


தன் வாழ்நாட்கள் எண்ணப்பட்ட போதும்

பிறர் வாழ்நாட்களை

நீட்டிக்க எண்ணிக்கொண்டே இருப்பவர்.


கொரோனா மருத்துவர்

_______________________________ருத்ரா



வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஊசி

 ஊசி

______________________ருத்ரா


ரோஜா இதழ்கள்களை

ஆயிரமாய் அடுக்கி

சரக்கென்று

ஊசியால் குத்தியது போல்

அத்தனையும் சிரிப்பு.

அத்தனையும் அமுதத்தின்

குத்தல்

உன் புன்னகை.

____________________________________________


உயிர்



எழுத்துக்கூட்டி வாழ்க்கை என்று 

படிப்பதற்குள்

பறிக்கப்பட்டு விடும்.


உயிர்

_______________________ருத்ரா


சனி, 17 அக்டோபர், 2020

"உன்னையே நீ எண்ணிப்பார்"

 "உன்னையே நீ எண்ணிப்பார்"

====================================ருத்ரா


நம் மைல்கற்கள்

களைத்து விட்டனவோ?

இனி அந்த 

குழியைத்தவிர வேறு

எதற்கும்

இனி நடப்பதற்கு மைல்கற்கள்

நடுவதற்கும் அவசியம் இல்லையோ?

மனித மலர்ச்சியின் 

பயணம் இதற்குமேல்

நடைபோட இயலாமல்

மனிதம் தன்

சுவாசத்தையெல்லாம் 

இழந்து விட்டதோ?

அதோ பாருங்கள்

முக கவசங்கள் மற்றும் 

கவச உடைகளின்

உடைந்து போன 

செயற்கை சுவாசக்கருவிகளின்

குப்பைமேடுகள் எல்லாம்

இமயமலைகளையும் விழுங்கி விடும்

உயரத்துக்கு

சென்று விட்டனவே!

அஞ்சத்தேவையில்லை.

பயங்களை உதறி விடுங்கள்.

கொரோனாவுக்குள்

ஒரு ரகசிய சங்கீதத்தின்

சுருதி ஒன்று

மனிதனுக்கு

மெல்லிதாய் கேட்கத்தான்

செய்கிறது.

ஓ! மனிதா!

என்னை விடவும் கொடியதான‌

மூடத்தனத்தின் அரசியல்

உன்னை மூடிக்கிடக்கிறதே!

என்னால்

உன் கூட்டுக்குள்ளேயே 

முடங்கிக்கிடந்தாவது

அந்த ஒளியை

அந்த ஒலியை

அந்த விஞ்ஞான நுட்பத்தை

நீ

புரிந்து கொள்ள முயலக்கூடாதா?

வானம் அளந்து

பிரபஞ்சங்களையெல்லாம் 

உரித்துக்கொண்டு

கிளர்கின்ற அறிவின் ஒளி

உன் மீது

புதிய வெளிச்சத்தை படரவில்லையா?

பூஜை நைவேத்தியங்கள்

பக்தர்கள் இன்றி எளிமையாக‌

நடந்தன.

பிரம்மோற்சவங்கள் எல்லாம்

அப்படியே

பிரம்மங்கள் இன்றியே

இன்னும் 

எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆம்.

கடவுள்கள் இன்றி

அவற்றின் பேரால் பொய்மை போற்றும்

சாதி மதங்கள் இன்றி

காழ்ப்புகள் கழன்று

இந்த உலகம் எளிமையாக‌

சுழன்று கொண்டிருக்கிறது.

மனிதா!

உன் மூளையை எல்லாம் 

கழற்றி 

கொரோனாவாய் ஆகிய 

இந்த அடகுக்காரனிடம்

கொடுத்துவைத்திருக்கிறாய்.

ஏதோ ஹெல்மெட்டைக் கழற்றி 

கொடுத்து வைத்திருப்பது போல.

போதும்!

நீ பயந்து பயந்து செத்தது.

எப்போது

உன் உயிர்களை

சிந்தனையால் சாகடிக்கவே முடியாத‌

உன் அறிவின் செல்களை

இந்த "அடகிலிருந்து" மீட்டுக்கொள்ளப்போகிறாய்?

இதற்கு 

அசலும் வேண்டாம் வட்டியும் வேண்டாம்.

"உன்னையே நீ எண்ணிப்பார்"

உன் சமுதாயத்தையே நீ எண்ணிப்பார்"

அது போதும்.


============================================







புதன், 14 அக்டோபர், 2020

அந்தி

 


கடலில் தண்ணீரின் விளிம்பு 

தடுக்கி விழுந்தா 

இத்தனை ரத்தம் சூரியனுக்கு?


அந்தி

___________________________ருத்ரா

சனி, 10 அக்டோபர், 2020

"வர்ணங்கள்"‍‍‍‍‍

 "வர்ணங்கள்"‍‍‍‍‍

_____________________________ருத்ரா


அது நம் உணர்வு அல்ல.

"வர்ணங்களில்" முக்கி எடுத்த‌ 

வெறும் துணி மட்டுமே.


தேசியக்கொடி.


___________________________ருத்ரா.



கருப்பையில் சுருதி கூட்டினாய்.

தொட்டிலில் 

அதை நான் இன்று மீட்டினேன்.


தாலாட்டு

____________________________ருத்ரா


மின்னல் அல்ல அது.

என் இதயத்தின் நாளம்.

நம் கனவின் கீற்றாய்.


காதல்

___________________________ருத்ரா


தாழ்ந்த சாதியிலும் அவதாரம்

எடுத்துப்பார்த்து விட்டார்.

அப்போதும் அவர் எரிக்கப்படுகிறார்.


கடவுள்

‍‍‍‍‍_____________________________ருத்ரா


வியாழன், 8 அக்டோபர், 2020

ஆர்த்தெழு! தமிழா!

 ஆர்த்தெழு! தமிழா!

=====================================ருத்ரா


மனிதனை

அவன் சமுதாயத்தை

மேலும் மேலும் மேம்படச்செய்ய‌

மனிதனே தான்

மாற்றங்களுக்கு முரண்டு பிடிக்கவேண்டும்.

அதற்கு தடையாய் இருக்கும்

சாதி மதத் தடங்கல்களை 

அவன் தவிடு பொடியாக்க வேண்டும்.

அதற்கு இடையூறு செய்யும்

வர்ண மயக்கங்களை

அழித்தாக வேண்டும்.

ஓட்டு எனும் ஆயுதம் கையில் வரும்போது

உன் போர்க்களம்

தெளிவாக இருக்க வேண்டும்.

சினிமாவின் நுரைக்குமிழிகளை

நொறுக்கித்தள்ள வேண்டும்.

தமிழும் தமிழ் இனமும்

குப்பைகளையாய் கருதப்பட்டு

அப்புறப்பட்டுத்தப்படும் அபாயம்

உன் தோள்களில் தொங்கிக்கொண்டிருப்பதும்

அறியாமல்

உன் ஓட்டு காணாமல் போகும் 

பேராபத்தும் புரிந்து கொள்ளாமல்

இருக்கின்ற‌

தமிழா

நீ என்ன செய்யப்போகிறாய்?

ஒரு அரச்சனை செய்து விட்டால் போகிறது.

ஒரு யாகம் செய்தால் சரியாகி விடும்..

என்ற கானல் நீர் நோக்கி ஓடும்

கரப்பான் பூச்சி அல்ல நீ!

அக்கினிச்சிறகு விரித்து

அதர்மங்களை பொசுக்கும்

ஊழி நெருப்பே நீ!

தமிழா!

இந்த இருட்டுகள் எல்லாவற்றையும்

துடைத்தெறி!

துடித்தெழு தமிழா!

இதுவே தருணம்.

தப்பினால் மரணம்.

கொரோனாக்கள் திசை மாற்றும்.

மொழியை அழித்தால்

விழியை அழிக்கலாம்.

விழிகள் அழிந்ததால்

வழிகள் ஏது? வாழ்க்கை ஏது?

பாழ்வெளி ஆகிடும்  தமிழ் நாடு.

அதில் ஆள்வது இனி

நாமே என்று 

ஆரியம் இங்கே ஆலவட்டம் போடுகிறது.

தமிழா!

உன் தமிழ் தான் 

உன் ஆயுதம்.

அதன் உயிரெழுத்தும் மெய்யெழுத்துமே

உன் பாசறை.

ஆர்த்தெழு!தமிழா!

ஆர்த்தெழு!


============================================================



செவ்வாய், 6 அக்டோபர், 2020

சாணக்கிய தந்திரம்


சாணக்கிய தந்திரம்



 அரசியல் ஒரு சாக்கடை.

அரசியலே வேண்டாம் எனும் அரசியல்

அதை விட மோசமான சாக்கடை.


ஜனநாயகம்

_____________________________ருத்ரா




ஈ மொய்த்த பண்டங்களும்

கொரோனா மொய்த்த ஓட்டுகளும்

விலக்கப்படவேண்டும்.


சாணக்கிய தந்திரம்

_____________________________ருத்ரா




ஞாயிறு, 4 அக்டோபர், 2020

மந்திரக்கம்பளம்

 மந்திரக்கம்பளம்

========================================ருத்ரா


பூவென்று ஊதினாள்.

நகம் வெட்டி கையில் சேகரித்த‌

துணுக்குகள் காற்றில் பறந்தன.

அவன் 

விசுவலைஸ் செய்தான்.

ஆகா!

அவை நகவளைவுகள் இல்லை.

நிலாத்துண்டுகள்

நுண்ணிய பிறைகளாய்

வானம் பூராவும் மத்தாப்பு காட்டும் அல்லவா?

செல் ஃபோனில்

கூப்பிட்டு

என்ன நெயில் கட்டிங்க் முடிந்ததா?

என்றான்.

எப்பிடிடா இது?

எப்பிடி கண்டுபிடித்தாய் சொல்

என்றாள்.

சூடாகிப்போன டிவியில்

காதல் சூடேறி

எதையாவது பார்ப்போம்

என்று

"அலாடின்" பார்த்தான்.

காதல் வெளிச்சத்தின் அற்புதவிளக்கில்

கிடைத்த மந்திரக்கம்பளத்தில் 

உட்கார்ந்து தான் இத்தனையும் 

பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

என்றான்.

காக்கை உட்கார பனம்பழம் விழும்போது

பூதம் காட்டும் இந்தக்

காதல் வந்து அமர்ந்தால்

இவர்கள்

ஒரே திரைக்குள் வந்து

பிலிம் காட்டிக்கொண்டு தானே

இருப்பார்கள்.


=====================================



சனி, 3 அக்டோபர், 2020

தமிழன் என்றொரு இனமுண்டு

 தமிழன் என்றொரு இனமுண்டு

==============================ருத்ரா (குறும்பாக்கள்) தனக்கு கல்லறை கட்டி அதற்கும் கும்பாபிஷேகம் செய்யும் ஒரே இனம் இதுவே. தமிழன். _______________________________ இந்த மொழியில் ஒரு துரும்பு கூட மின்னல் தான். தமிழ் ______________________________ தன்னைத் தின்ற கரையான்களே இவனுக்கு அவதாரங்கள்! தமிழன் ________________________________

வெள்ளி, 2 அக்டோபர், 2020

உலக முதியோர் தினம்.

 உலக முதியோர் தினம்.

__________________________ருத்ரா


காலை 8 மணிக்காரன்

பகல் 12 மணிக்காரனை விட 

முதியவன் தான்.

இந்த தேசத்தில்

இன்னும் 

பஞ்சாங்கத்தைக்

கட்டிக்கொண்டே தான்

குழந்தைகள் பிரசவிக்கின்றன.

இளைய பாரதமே வா வா ..

என்று எழுதுவதற்குள்

முதுகெலும்பு இற்று விழுகின்ற

முதுமைக்குப்பைகள் தானே

இங்கே ஈசல்களாய் கிடக்கின்றன.

பிறந்திருக்கிறோம் 

என்ற ஓர்மையே இல்லாத

இந்த காட்டிடையே

நான்கு வர்ணக்காட்டுத்தீ

பற்றி எரிந்த போதும்

மரத்துக்கிடக்கும்

மண் புழுக்களுக்குமா

இந்த உலக தின விழா

தோரணங்கள்?


________________________________


.


தேசத்தந்தையே !

 தேசத்தந்தையே !

====================================ருத்ரா


தேசத்தந்தையே!

எந்த ஆண்டும் இல்லாமல் 

இந்த ஆண்டுதான்

உன் வெறுமையை 

அதில் தகிக்கும் அக்கினிக்குழம்பை

தாங்கவொண்ணாமல் 

நாங்கள் தவிக்கிறோம்.

"ஹே ராம் என்று 

கூப்பிட்டாயே

அந்த ராமனிடம் கேள்

ஓ ராமா !

உன் ராஜ்யத்தில் 

செங்கோல் என்றால்

கடப்பாரையா

என்று கேள்.

ஈஸ்வர அல்லா தேரே நாம்

என்றேனே

உனக்கு இந்தி தெரியாதா ?

என்று கேள்.

உன் தராசு தட்டுகளில்

ராமரும் பாபரும்

ஒன்றாய்த்தானே இருந்தார்கள்.

இவர்கள் தராசுகள்

தடம் புரண்டது 

ஏன் என்று கேள்?


"டுமீல் டுமீல்"

அந்த துப்பாக்கியில் இன்னும்

குண்டுகள் 

பாக்கியிருந்தது போலும் !


"உன்னை எத்தனை தடவைகள் 

சுட்டாலும் நீ 

சாக மாட்டாய் போலிருக்கிறது!"

அந்த ராம் 

இன்னும் உறுமிக்கொண்டிருக்கிறான்.

அட!

தேசத்தந்தை தேசத்தந்தை 

என்று இவர்கள்

மலர் தூவிக்கொண்டிருப்பது

இந்த "ராம்"க்கு த் தானா?


"ஹே ராம்!"

நம் தேசத்தந்தை 

மீண்டும் மண்ணில் வீழ்ந்தார்!


========================================