திங்கள், 4 ஜூன், 2018

என் பிறந்த நாள்.

என் பிறந்த நாள்.
================================================ருத்ரா

என் பிறந்தநாள் இன்று.
நண்பர்களின் வாழ்த்துக்கள் குவியல்.
காலண்டர் தாள்
என்னால் "ஸ்பெஷலாக"
இன்று தூசி தட்டப்படலாம்.
நேற்றைய தாள்
வேக வேகமாய் கிழித்தெறியப்படலாம்.
காலப்பிழம்புக்கு
தூசி ஏது?
துரும்பு ஏது?
நாளும் அது! வாளும் அது!
என்றானே வள்ளுவன்.
வாள் எனினும் அஞ்ச வேண்டுவதில்லை.
"கேக்கை" இவ்வாள் கொண்டு வெட்டுவோம்.
தன் சதையை அறுத்துக்கூறுபோடும்
இந்த இனிப்புத் தருணத்துக்கும்
நாக்கைச் சப்பு கொட்டுவோம்.
இன்னும்
கேக்கும் இருக்கும் வாளும் இருக்கும்.
உலகத்தில்
இப்படி காலத்தை அறுத்துச்சுவைக்கும்
கடைசி நாக்கு எது?
"ஸ்பேஸ் டைம்" சமன்பாட்டுக்கு
இப்போது பில்லியன் பில்லியன் நாக்குகள்
என்கிறார்கள்.
அந்த துடிப்பு இழை எனும்
ஸ்ட்ரிங் தியரி பற்றிய புத்தகம்
என் கையில் உண்டு.
அது காதலா?
அது சாதலா?
பிறந்து பிறந்து துடிப்பது.
இறந்து இறந்து துடிப்பது.
"கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு..."
கவலை மொய்க்கின்ற அந்த ஈக்களை
கவிதையின் அந்த‌
கம்பன் கொண்டு விரட்டுவோம்.

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக