திங்கள், 4 ஜூன், 2018

கலைஞரா?

கலைஞரா?
=====================================ருத்ரா

கலைஞரா?
யார் அவர்?
என்று
ஒரு தமிழன்
தன் வரலாற்று நூலை
புரட்டி புரட்டி பார்த்துவிட்டு
வீசியெறிந்து விட்டான்
தனக்கு
வரலாறு என்று
ஒன்றுமே இல்லை என்று!
இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
கலைஞர் பெயரை
ஒலிக்காத நாவில் தமிழ் இல்லை.
கலைஞர் எழுதுகோல்
உழாத சிந்தனையில்
விளைச்சல் ஏதும் இல்லை.
கலைஞரைக் கேட்காத செவிகள்
வெறும் வவ்வால்கள் தொங்கும்
பாழ் மண்டபங்கள்.
கலைஞரைப் படிக்காதவர்களுக்கு
தமிழ் நோக்கி பயணிக்கும்
படிக்கட்டுகளும் இல்லை.
மைல் கற்களும் இல்லை.

===================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக