புதன், 13 ஜூன், 2018

வா நண்பனே வா!

வா நண்பனே வா!
====================================ருத்ரா

என் இனிய நண்பனே !
திடீரென்று
என் அறை முழுவதும்
கடல் சூழ்ந்தது போல்
ஒரு உருவெளித்தோற்றம்.
நாம் எப்போதும்
கை கோர்த்து
கருத்திலும் கோர்த்து
நிற்போமே
அந்த தருணம்
ஒரு கட்டு மரம் போல்
என்னை உரசி நின்றது.
ஆம்!
அந்த உந்துதல் எனக்கு
புது உலகங்களைத்தந்தது.
சாதி சொல்லி
மதம் சொல்லி
இனம் பிரிக்கும்
பாறைகள் எல்லாம்
உடைந்து நொறுங்கிப்போயின.
ஓட்டு போட
தனிமையில்
நாம் அந்தக்கடலில்
தள்ளிவிடப்படும் போதெல்லாம்
ஏதோ "கம்பியூட்டர் கேம்ஸ்"க்குள்
தடுக்கி விழுந்தவர்கள் போல்
அல்லவா ஆகி விடுகிறோம்.
நண்பனே அன்பு நண்பனே
நம்மை விட நமக்கு அடியில்
முழ்கிக்கொண்டிருக்கும்
அந்த ஜனநாயகத்தை
நிச்சயம் காப்பாற்றிவிடுவோம்
வா நண்பனே!
ஆளும் எந்திரத்தின்
அத்தனை பற்சக்கரங்களும்
சர்வாதிகார சுறாக்களாய்
நம்மை இரையாக்குவதற்குள்
நாம்
நம் வாக்குரிமையின் இறையாண்மையை
கோடி கோடி பலங்கொண்ட
சீற்றத்தின் அலைகள் ஆக்கி
தளும்ப நிற்போம்
வா நண்பனே! வா!

==============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக