திங்கள், 16 செப்டம்பர், 2024

வாசல்.

 


வாசல்.

_____________________________________


விழிக்கும் முன் 

வானம்

உங்கள் உள்ளங்கையில் 

ஒரு போன்சாய்.

நீண்ட கெட்டித்தட்டிப் போன‌

இருட்டுக்குழம்பில்

உரு ஏந்தி வரும்

பிண்டங்களுக்கு

உன் 

இலக்கியங்களையும் 

இலக்கணங்களையும்

சமைத்துக்கொடு.

மனிதக்கருவின் காய்

கனிந்து வர‌

உன் அறிவையும் 

நுண்மாண் நுழைபுலத்தையும்

பதியம் இட்டுக்கொடு.

ஒரு மனிதன்

எல்லா மனிதனையும்

தன் வட்டத்துள் கொண்டுவரக்

கிளம்பும் 

வெறித்தனமான மந்திரக்கூச்சல்களின்

குறுகிப்போன மூளையின் காய்ச்சல்

சாதிகளாக 

பூதம் காட்டுவதை முதலில்

அழித்து ஒழிக்க வேண்டும்.

மனித நேயம் அடர்ந்து செழிக்கும்

மனக்காடுகளே

தண்ணிழல் தரும்.

அறிவின் குரல்கள் 

அழகிய அதிர்வு எண்களின் 

பண்களும் அமைத்துத்தரும்.

மற்ற சுடுகாடுகளுக்கு

கொள்ளிக்குடம் சுமக்க வைக்கும்

தாந்த்ரீக தகடுகளை

தட்டி நொறுக்கும்

சம்மட்டிகள்

உன் குவாண்டம் கம்பியூட்டிங்

வியப்புகளில்

வித்தைகள் கோர்த்த வியூகங்களாய்

வாசல் திறந்து வரவேற்கின்றன.

இதை தவறவிட்டால்

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கூட‌

நீ

இருட்டையே தின்று 

இருட்டிலேயே நெளியும் 

புழுக்களாய்த் தான்

பூஜை செய்ய காத்துக்கிடக்கவேண்டும்.


__________________________________________

சொற்கீரன்







சனி, 14 செப்டம்பர், 2024

தமிழ் ஆற்றுத்தொகை

தமிழ் ஆற்றுத்தொகை

___________________________________

இடைக்காடன் (இ பரமசிவன்)



நிரை பெயரத்தந்து 

மாடு காண் கொளீஇ

இலை புதை பெருங்காட்டு

கொலை மறம் படுத்து

நடுகல் துஞ்சிய                           5

பெருநாட்டுத் தலைவன்

வெண்ணிப் பறந்தலை 

வெள்ளிய படப்பையின்

மன்று தேய்க்கும்

மாண் இறை நீழல்.                     10

கழை அடர் அடுக்கத்து

மஞ்சு போர்த்த நெடுவான் தோய்

செவ்வொளி பூசிய செவ்வேள்

அன்ன நிலைஇய நின்ற மாறனை

முருகு மெய் வெறியாட்டு              15

அகற்கண் அணங்கு நோக்கிய காலை

ஆய்மயிலாளும்  விழி  அம்பு தீட்டி

ஓர்த்த வான் எய்யும் 

கார்வை மிக்கு பொழிவின்

விசும்பும் விரிய நீர்க்கடல்                20

திரையின் அடர் படல் ஆர்க்கும்.

தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை   

முயல் வந்து கறிக்கும் முன்றில்            

கொய்குரல் அரிசியோடு

களவுப்புளி அட்டு குய்புகை கமழ‌    25


(தொடரும்)


வெல்வதும் தமிழ்.

 


வெல்வதும் தமிழ்.

______________________



தமிழ் நாடு 

என்ற சொல்

கேட்கும் போதே

அங்கே

உடல் எரிகிறது.

உள்ளம் பதறுகிறது.

ஏன்?

தமிழ் மொழியின்

ஊனும் 

உயிரும்

மானம் தான்.

ஈ என இரப்பது இழிவு.

ஈயேன் என்பது 

அதை விட இழிவு.

தனி மனிதனின் மானத்தின் முன்

வானம் எல்லாம் மண்டியிடும்.

தமிழ் மொழியில் 

மனிதன் ஒற்றையாய் நின்றாலும்

மாநிலமாய் நின்றாலும்

அதன் முதுகெலும்பு நிமிர்வு மட்டுமே

கோடி பெறும்.

அதனால் 

இங்குள்ள கடவுள்கள்

மனிதனிடம் இறைஞ்சிக்கேட்கும்

மனிதா என்னைப்பாடு என்று.

அதனால்

இந்த கோவில்களின் 

கல் தூண்களும் சரி

கல் படிக்கட்டுகளும் சரி

இப்படிப்பாடியதன்

புராணங்களை மட்டுமே சொல்லும்.

நட்ட கல்லும் பேசுமோ

மனிதன் எனும் நாதம் 

உள்ளிருக்கையில்

என்று

பெருமை கொள்ளும் மனிதமே

இங்கு விஸ்வரூபம் எடுக்கும்.

தமிழின் இந்த மண்பாடே

தனிப்பெரும் பண்பாடு.

சொல்வது தமிழ்.

வெல்வதும் தமிழ்.

_________________________________________

சொற்கீரன்.





வியாழன், 12 செப்டம்பர், 2024

சமூகப்போராளி



சமுதாயத்தோடு போராடும் வீரம்

எவருக்குமே இல்லை

மார்க்சிய சித்தாந்தவாதிகளைத்

தவிர.

அந்த போராட்டம் என்பது

சமுதாய முரண்களை 

தட்டி நொறுக்குவதே ஆகும்.

முரண்கள் முரண்களைதானே

விளைவிக்கும்.

இந்த தெளிவு உடைய‌

ஒப்பற்ற சமுதாயப்போராளியே

தோழர் சீத்தாரம் யெச்சூரி அவர்கள்.

பேரிழப்பு என்று

மோவாயைத்தடவி விட்டுக்கொண்டு

இதுவும் கடந்து போகும் என்று

சீக்குப்பிடித்த கவிதை எழுதிக்கொண்டு

பேனாவோடு சொடக்கு போடுவது அல்ல‌

அந்த 

"செவ்வணக்கம்"

அந்த மனிதனின் ஏக்கமே

நம் எல்லோருக்கும்

வெளிச்சம் தரும் 

எரிமலை ஏக்கம்.

மானிட அநியாயங்கள்

பூண்டற்றுப்போக‌

நம்மிடையே

மிச்சமிருக்கிற‌

அந்த சமூகப்போராளியின்

மூச்சுகளே

வெடித்துக்கிளரும் பேச்சுக்கள்.

அறச்சீற்றத்தின் வீச்சுக்கள்.


_____________________________________

செங்கீரன்.





புறாணம்.

 



என்ன கவலை உனக்கு?

கவலையே இல்லாதது தான் கவலையா?

ஆமாம்.

அதிலென்ன சந்தேகம்?

கவலை இருந்தால் தான்

அது கடுகு போல் இருந்தாலும்

கனத்த பாறாங்கலாய் தோன்றி

அழுத்தி அழுத்தி

மூச்சு திணறச்செய்து அப்புறம்

அதே மூச்சுத்திணறலே

பெரும் ஆற்றாய் வீசி

அந்த பாறாங்கல் "கடுகை"

பூ வென்று ஊதித்தள்ளிவிடும்.

அப்புறம் நான்

ஒரு புத்தாக்கம் பெற்ற புது மனிதன்.

கடவுள் கூட‌

என்னிடம் அது

எப்படி எப்படி??

என்று விவரம் கேட்பார்.

போதும் நிறுத்து.

என்ன இது புதிய பூதம்?

இது எங்கிருந்து முளைத்தது?

மறுபடியும்

கடுகு இராட்சசன் ஆனான்.

மனது எனும்

பெரிய நிழல் கரிய நிழல்

நம்மை கவ்விக்கொண்டிருக்கிறது.

ஏதடா வம்பு என்று

கடவுள் நம் கண்ணிலேயே படாமல் 

காணாமல் போவார்.

மனம் எனும் திரைச்சீலையின்

ஆட்டம் தானே கடவுள்!

அந்த புறாக்கள் அந்த கோவிலில்

சிறகடித்து சிறகடித்து

மந்திரம் ஓதியதில்

கருவுற்றது தானே கடவுள்.

இதுவே கடவுள் புறாணம்.


____________________________________________________‍

சொற்கீரன்

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

தட்டை வடிவ கணித க்யூ எஃப் டி

 தட்டை வடிவ கணித  க்யூ எஃப் டி

__________________________________________________________

Translated by E Paramasivan

1.

கட்டிஅமைக்கப்பட்ட அளபடையப் (குவாண்ட) புலக்கோட்பாடு என்பது கன்ஸ்ட்ரக்டட் க்யூ எஃப் டி ஆகும்.

ஏன் அப்படி? இயல்பான இயற்பியல் புலம் இங்கு இல்லை.தற்காலத்திய புள்ளியியல் இயங்கியம் தான் இங்கு செயல்படுகிறது.புள்ளிவிவரங்கள் நாம் செய்யும் கணித ஏற்பாடுகள் தானே.இந்த துறையில் சிறந்த ஆய்வுகள் நடத்தியவர்கள் விய்ட்மேன்,க்ளிம்,மற்றும் ஜேஃப்ஃபி ஆக்கியவர்களே.

ஐன்ஸ்டீன் பொதுசார்புக்கோட்பாட்டில் ஆழ்ந்த ஆய்வு கணிதம் செய்து கொண்டிருந்த போது உள்ள "தூரக்கூறு"(டிஸ்டன்ஸ்  எலிமென்ட்) ஒரு சிக்கலான "திசையக்கூறுகளின் தொகுப்பே" (டென்ஸார்) பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் வளையவியக்கூறுகள் (கர்வேச்சர் எலிமென்ட்ஸ்)அதில் இருந்தன. ஆனால் இந்த க்யூ எஃப் டியில் புள்ளியியல் கணிதத்திற்கேற்ற "ஈக்குளிடியல் வடிவ கணிதமே" ஏற்றதாய் இருந்தது. ஐன்ஸ்டீன் செயல்படுத்தியதோ கோளக வடிவத்தின் நேர்முறை வளைவியம் (ஸ்ஃபெரிகல் பாசிடிவ் கர்வேச்சர்) ஆகும்.ஆனால் இதில் தட்டை வடிவ கணிதமே (ஃப்ளேட் ஜியாமெட்ரி) அடிப்படைக் கணிப்பாக இருக்கிறது.


(to be continued)

______________________________________________________________________________


2.

 

இதில் சார்புத்தன்மையை உள்ளிட வடிவ கணிதத்தின் நேர்கோடும் வளைகோடும் வேண்டிய அளவுக்கும் மாற்றம் செய்யப்படவேண்டும். ஈர்ப்புவிசை ஆற்றல் நிறை திசைவேகம் எனும் வெலாசிடி இவையெல்லாம் உரிய கணித சமன்பாடுகளோடு உட்புகுத்தப்படவேண்டும்.இதில் ஈக்குளிடியன் புலக்கோட்பாடு "மார்க்காவ்" இயல்புகளோடு (மார்க்காவ் ப்ராப்ர்டி) அமைக்கப்படும்.இதை அப்படியொரு சரியான வடிவத்தில் ஆய்வு செய்தவர் "நெல்ஸன்" ஆவார்.இதற்கு சார்பியல் கூறுகள் சேர்க்கப்பட்ட கியூ எஃப் டி அமைக்க அவர் செயல்பட்டார்.ஏற்கனவே குறிப்பிட்ட விய்ட்மேன் என்பவர‌து அடிப்படைக்கூற்றுகள் (ஆக்ஸியம்ஸ்) எடுத்துக்கொள்ளப்பட்டன. பழைமை முறையிலிருந்து மாறுப்பட்ட களத்தில் இதை ஆய்வு செய்ய "நெல்சன்"ஒருவரே தகுதியானவர்.ஏனெனில் அவர் ஈகூளிடியன் புலம் மற்றும் புதிய குவாண்டப்புலம் ஆகிய இரண்டையும் பற்றிய‌ தெளிவான கோட்பாடுகளை  அறிந்தவர்.


_________________________________________________________________________

translation by  COPILOT


1 முன்னுரை இந்த திறனாய்வில், யூக்ளிடிய புலக் கோட்பாட்டை குவான் தும் புலக் கோட்பாட்டின் உருவாக்கமாகக் கருதுகிறோம், இது யூக்ளிடிய வெளியில் வாழ்கிறது, மேலும் இது நிகழ்தகவு சொற்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஆக்கபூர்வமான குவாண்டம் புலக் கோட்பாட்டின் திடமான மாதிரிகளின் ஆய்வில் யூக்ளிடிய புலக் கோட்பாட்டிலிருந்து எழும் முறைகள் மிகவும் வெற்றிகரமான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யூக்ளிடிய புலக் கோட்பாடு ஷ்விங்கர் [1] மற்றும் நகானோ [2] ஆகியோரால் தொடங்கப்பட்டது, அவர்கள் புல விளைபொருட்களின் வெற்றிட எதிர்பார்ப்பு மதிப்புகளை யூக்ளிடிய பகுதியில் (ஷ்விங்கர் சார்புகள்) படிக்க முன்மொழிந்தனர், அங்கு ஒரு உலக புள்ளியின் முதல் மூன்று (இடஞ்சார்ந்த) ஆயதொலைவுகள் உண்மையானவை மற்றும் கடைசி ஒன்று (நேரம்) முற்றிலும் கற்பனையானது (ஷ்விங்கர் புள்ளிகள்). சுவிங்கர் சார்புகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மற்றும் யூக்ளிடிய குழுவின் கீழ் அவற்றின் மாறுபாடு ஆகியவை வைட்மேன் வழங்கிய வெற்றிட எதிர்பார்ப்பு மதிப்புகளின் அடிப்படையில் குவாண்டம் கோட்பாட்டின் கிளாசிக் சூத்திரத்தின் உடனடி விளைவுகளாகும். லோரென்ட்ஸ் குழுவிற்கு பதிலாக யூக்ளிடிய குழுவை அதன் நேர்மறை டெஃப் இனிட் ஸ்கேலார் தயாரிப்புடன் கையாள்வதற்கான வசதி தெளிவாக உள்ளது, மேலும் இது பல்வேறு சூழல்களில் பல ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சைமான்சிக் [4] என்பவரால் மேற்கொள்ளப்பட்டது, அவர் போசான் புலங்களுக்கான சுவிங்கர் செயல்பாடுகள் ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறை பண்பைக் கொண்டுள்ளன என்பதை உணர்ந்தார், இது யூக்ளிடிய புலங்களை அவற்றின் சொந்த நலனுக்காக அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது. யூக்ளிடிய புலக் கோட்பாடு மற்றும் கிளாசிக்கல் புள்ளியியல் இயக்கவியல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்புமையையும் சைமான்சிக் சுட்டிக்காட்டினார் [5]. இந்த ஒப்புமை குவேரா, ரோசன் மற்றும் சைமன் [6] ஆகியோரின் அனைத்து போசான் இடைவினைகளுக்கும் வேறுபட்ட விளக்கத்துடன் வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டது, மின்னஞ்சல் ∗: francesco.guerra@roma1.infn.it 1 நவீன புள்ளிவிவர இயக்கவியலின் கடுமையான முடிவுகளை கட்டுமான குவாண்டம் புலக் கோட்பாட்டின் ஆய்வுக்கு பயன்படுத்துதல், வைட்மேன் [7] முன்வைத்த நிரலுக்குள், மேலும் க்ளிம் மற்றும் ஜாஃப் ஆகியோரால் மேலும் தொடரப்பட்டது (ஒட்டுமொத்த முன்வைக்க [8] ஐப் பார்க்கவும்). யூக்ளிடிய கோட்பாட்டின் மிகவும் வியத்தகு முன்னேற்றம் நெல்சனின் பொறுப்பாகும் [9] [10]. அவர் யூக்ளிடிய புலங்களின் (மார்கோவ் சொத்து) ஒரு முக்கியமான சொத்தை தனிமைப்படுத்த முடிந்தது மற்றும் யூக்ளிடிய புலங்களுக்கு நிபந்தனைகளின் தொகுப்பை வழங்கினார், இது வைட்மேன் கோட்பாடுகளை பூர்த்தி செய்யும் சார்பியல் குவாண்டம் புலங்களின் அனைத்து பண்புகளையும் பெற அனுமதிக்கிறது. நெல்சன் கோட்பாடு மிகவும் ஆழமானது, புதிய கருத்துக்கள் நிறைந்தது. அடிப்படைக் கட்டுரைகளிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், நெல்சன் கருத்துக்கள் வழங்கிய வழக்கமான கோட்பாட்டிலிருந்து தீவிரமான விலகல் பற்றிய முழுமையான புரிதல் நமக்கு இன்னும் இல்லை, குறிப்பாக அவற்றின் சாத்தியமான மேலதிக வளர்ச்சிகள் பற்றி. நெல்சன் திட்டத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக மிகவும் விசித்திரமான சமச்சீர் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், இரு பரிமாண போசான் கோட்பாடுகளுக்கான முடிவிலா தொகுதி வரம்பில் தள நிலை ஆற்றல் அடர்த்தி மற்றும் வான் ஹோவ் நிகழ்வு ஆகியவற்றின் குவிவை நிரூபிப்பது மிகவும் எளிதாக இருந்தது. ஒரு பிந்தைய பகுப்பாய்வு [12] கோட்பாட்டின் முடிவிலா தொகுதி வரம்பின் பிற பண்புகளைக் கொடுத்தது, மேலும் முன்னர் க்ளிம் மற்றும் ஜாஃப் ஆகியோரால் நிறுவப்பட்ட புலங்களுக்கான மிக முக்கியமான ஒழுங்குமுறை பண்பின் நிரூபணத்தில் குறிப்பிடத்தக்க எளிமைப்படுத்தலை அனுமதித்தது. அன்றிலிருந்து எல்லா வேலைகளும் 



 

சுவடிகள். ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

 


சுவடிகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________‍‍



ஏதோ எனக்கு ஒன்றும் தெரியாது

என்று அந்த 

நாரதன்

மரா மரா என்று சொல்லு

என்றானே.

ராமன் மனிதன் இல்லை

மரம் தான் என்று

எனக்கு எப்போதோ தெரிந்து

விட்டது.

ராமன் வேறு சீதை வேறு

என்று நான்

எழுத்தாணி கிறுக்கியதில்லை.

நான் வேறு அவள் வேறு

என்று அவளை

தீக்குளிக்கச்சொன்னானே 

அப்போது 

அவன் மரம் தான் என்றே 

உணர்ந்து கொண்டேன்.

இறைவன் அவதாரம் எடுத்தபோதும்

தர்ப்பைப் புல்காரன் அல்லவா

இறைவனையும் கூட‌

ஆட்டிப்படைக்கின்றான்.

நீ எனக்கு கீழே தான்.

நான் சொல்வதே தர்மம்.

உன் மனைவி தீக்குளிக்கவேண்டிய்வள்

என்று தாடியை உருவிக்கொண்டே

அந்த இறைவனையும்

தன் அகங்காரத்திற்கு 

இரையாக்கிக்கொண்டானே.

இறைவனும் கூட‌

பிராமணர்கள் பிசைந்து செய்த‌

மண்ணுப்பாண்டம் தான்

என்பதே

வேதங்களுக்கெல்லாம்

ரகசிய வேதமாக இருப்பது.

நான்மறை அலப்பறைகள்

வெறும் ஜால்ரா சத்தங்களே.

வால்மீகிக்கு 

ராமாயணம் புரிந்து விட்ட பிறகு

அவன் தீண்டத்தகாத சாதியாகி

வெளியில் நின்றான்.

இன்னும் அவன் வெளியில் தான்

 இருக்கிறான்,

அவனது சுவடிகள் மட்டுமே

அந்த பளிங்கு பீடத்தில்.


_________________________________________________

சொற்கீரன்.