செவ்வாய், 15 மார்ச், 2022

ஜெய் பாதாள பைரவி

 ஜெய் பாதாள பைரவி

_____________________________________ருத்ரா


1950 களில் ஒரு புகழ்பெற்ற மந்திரவாதிக்கதை ஒன்று படமாக்கப்பட்டது.எஸ் வி ரங்காராவ் என் டி ராமராவ் போன்றோர் நடித்த அற்புதமான திரைப்படம் அது.நமக்கு பிடிபடாத விஷயங்களை அப்படி ஆகாசத்திலிருந்து வரவழைத்துப் பார்க்கும் இயல்பை சித்தரிக்கும் படமே. குவாண்டம் மெகானிக்ஸ் கூட அப்படியொரு "ஜெய் பாதாள பைரவி" தான்.ஏனென்றால் இந்த குவாண்டம் மெகானிக்ஸை விஞ்ஞான உலகுக்கு கொண்டுவந்த "நீல்ஸ் போர்" கூறுவதைப்பாருங்கள்.

"குவாண்டம் மெகனிக்ஸ் என்றால் என்ன என்று அறிபவன் முதலில் "அதிர்ச்சி"அடைந்தாக வேண்டும்.அப்படி அதிர்ச்சி அடையாதவன் குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி அறிந்தவனாகக்கருதப்பட மாட்டான்." 

சரி.உலகப்புகழ் பெற்ற "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்" சொல்வதைப்பார்த்தால் ஏதேது குவாண்டம் மெகானிக்ஸ் என்பது நிச்சயம் ஒரு "ஜீ பூம்பா" தான்.ஏனெனில் அவர் குவாண்டம் மெகானிக்ஸ் என்பது "ரியல் ப்ளாக் மேஜிக் கால்குலஸ்" தான் என்கிறார்.

ஏன் குவாண்டம் மெகானிக்ஸ் இப்படி புதிர் ஆகி எல்லோரையும் குழப்பியது?

வேறு ஒன்றுமில்லை. நம் வடிவேலுவும் என்னத்தெ கன்னையாவும் ஒரு சினிமாவில் காமெடி செய்தார்களே

"வரூஉ உ உ ம்..ஆனா வரா அ அ து" என்று.

அதே தான் "குவாண்டம் மெகானிக்ஸ்" 

ஸ்டாடிஸ்டிகல் மேதெமேடிக்ஸ் குறிப்பிடுகிற "ப்ராபபலிடி" (அதாவதுநிகழ்தகைவு) தான் குவாண்டம் மெகானிக்ஸின் அடிப்படை.

இப்போது நாமும் அந்த பாதாள பைரவியை நோக்கி பயணிப்போமாக!


_________________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக