திங்கள், 14 மார்ச், 2022

உயர்ந்த கவிதை.

 உயர்ந்த கவிதை.

____________________________________ருத்ரா



வரிகளை

நீட்டி மடக்கி

ஒடித்து குறுக்கி

எழுதி விட்டால் 

அது கவிதையா?

சரி.

வரிகளை குவியல் குவியலாய்

அடுக்கி அழகாய்

வரிசைப்படுத்தி வைத்திருந்தால்

அது கட்டுரை.


அதற்குள்  உணர்சசித் தீ மூட்டி 

சொற்களை சமைத்து வைத்திருந்தால் 

அது 

கதை அல்லது நாவல்.


எதற்கு இந்த சிரமம்?

அதை வெள்ளைக்காகிதமாய்

அப்படியே காட்டியிருந்தால்

.............

விடுங்கள்.

மூச்.

சப்தம் காட்டாதீர்கள்.

மௌனமாய் இருங்கள்.

அதில் அது 

இன்னும் வெளிப்படவில்லை.

கன்னிக்குடம் உடையட்டும் 

காத்திருங்கள்...

இது தான்

வலி மிகுந்த ஆனால்

இருளைப்  பிசைந்து கொண்டு 

வந்த 

ஒளி மிகுந்த கவிதை.

உலகிலேயே மிகச்சிறந்த கவிதை.

ஒலியில்லாமலேயே  ஒரு

ஒலி கேட்கிறதா?


"குவா..குவா..குவா"


தலைப்பு இது தான்

"பிரச‌வம்"


_______________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக