வெள்ளி, 11 மார்ச், 2022

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.

______________________________________‍________ருத்ரா



என்னத்தைச்சொல்ல?

உ.பி யில் நிகழ்ந்த 

ஜனநாயக எழுச்சியைப்பற்றி.

மனிதர்கள் இன்னும்

புழுக்கள் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த இருட்டுப்பிழம்பிலிருந்து

பரிணாம வெளிச்சத்தின் கீற்றுகள்

அந்த புழு பூச்சிகளுக்கு

என்றைக்கு விடியல் இமைவிளிம்புகளை

திறக்கும்?

எதிர்க்கட்சிகள் 

ஒன்றிணைய வேண்டும் 

இல்லாவிட்டால்

அங்கே கல்லறைகளில் தான்

ஜனநாயகம் 

எலும்புக்கூடுகளின் எச்சமாகி கிடக்கும்

என்ற திகிலூட்டும் 

உண்மையை புரிந்துக்கொள்ளாத‌

மரத்துப்போன அல்ல மரித்துப்போன‌

சிந்தனைகளின்

சித்திரமே

இப்போது நாம் பார்க்கிறோம்.

மேற்கிளையிலிருந்து 

அடிக்கிளையை வெட்டும்

பதவி வெறி விளையாட்டில்

நம் ஜனநாயகம் 

என்றைக்கோ தூக்கில் ஏற்றப்பட்டு விட்டது.

இந்த வெற்றியைக்களிக்கும்

அந்த நிழல்மிருகம்

மக்கள் மீது படர்த்தியிருக்கும்

சாதி மத சிலந்திப்பின்னல்கள்

புரிந்து கொள்ளப்படாத வரை

இந்த "ஃப்ராங்கென்ஸ்டீன்" இளிக்கும்

மரணச்சிரிப்புகளே

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.


__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக