அரங்கேற்றம்
=========================================ருத்ரா
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு.
.............
.............
அடச்சீ..
எனக்கு இந்தப்பாட்டு தான்
தெரியும்.
வேற காதல் பாட்டெல்லாம் வராது..
வா..வா..சீக்கிரம்.
இந்த "மால்ல"
அட்வான்ஸா
டிக்கட் புக் பண்றதக்குள்ள
நான் பட்ட பாடு பெரிய பாடு.
ம்ம்ம் ..வா.வா...ரஷ் அப்
தியேட்டர்ல படம் போட்டுருவான்.
அரங்கத்துள்
"அகநானூறு ..மணிமிடைப்பவளம்"
அரங்கேற்றம் ஆரம்பித்தது.
===============================================
2 கருத்துகள்:
வணக்கம். நான் உங்கள் தளத்தைத் தொடர்ந்து வாசிக்க விழைகிறேன். “பின்பற்றுவோர்” பெட்டி இல்லையே? எப்படித் தொடர்வது? உங்கள் தளத்தின் முகப்புப் படம் பளீரென்ற ஒளியுடன் அழகாக உள்ளது, கவிதையும்தான். நா.முத்துநிலவன், வலைப்பதிவர்,எழுத்தாளர், புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்.
வணக்கம் திரு.நா.முத்துநிலவன் அவர்களே.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.இந்த வலைப்பூ "அவர்கள்" (ப்லாக்கர்ஸ்)சொல்லியபடி தான் வடிவமைக்கப்பட்டது.இருப்பினும் என்னால் அதை முழுமையாக நிறுவ இயலவில்லை.கூகிள் கணக்காளர்கள் நுழையலாம்.மேலும் தேடு பொறி மூலம் இதே லிங்க் மூலம் வரலாம்.நீங்கள் குறிப்பிட்ட "ஃபாலோ" பெட்டியை எப்படி அமைப்பது என்று ஆன் லைன் மூலம் முயற்சி செய்கிறேன்.
உங்கள் இலக்கியப்பணி பாராட்டுக்குரியது.உங்கள் வாசிப்பும் கருத்தும்
(இப்போது எப்படி பின்னூட்டம் கொடுத்தீர்கள் என எனக்கு தெரியவில்லை.நான் ஃபாலோ பெட்டி இணைக்கும் வரை உங்கள் கருத்துகள்) தொடரவேண்டும் என வேண்டுகிறேன்.
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக