புதன், 15 மே, 2019

பிரமிள்





https://mail.google.com/mail/u/0/?tab=rm#inbox/FMfcgxwCgfxwgvfQVXlpGpRHsJQQLjGW
சுட்டிக்கு மிக்க நன்றி 


பிரமிள்
==========================================



கவிஞனுக்கு இறப்பு இல்லை.
அதிலும்
பிரமிள் என்ற பிரபஞ்சத்துக்கு
பிறப்புமில்லை
இறப்புமில்லை.
அவர் கவிதை மட்டும்
"ஒற்றை இறகாக"
அதோ!
அது எங்கிருந்து
வருகிறது.
அடி முடி தெரியாது என்று
அந்த சிவனை
கல்லுக்குள் வைத்தார்கள்.
ஆனால்
இவன் கவிதை
சொல்லுக்குள்ளிருந்து
ஒரு நியூட்ரினோவாய்
பல பிரபஞ்ச அடுக்குகளை
ஊடுருவிக்கொண்டே
பயணிக்கிறது

===============================ருத்ரா இ பரமசிவன்


விஷமத்தனமான விமர்சனங்கள்

விஷமத்தனமான விமர்சனங்கள்
===============================================ருத்ரா

விமர்சனம் என்பது
எழுத்துக்கள் வழியாக‌
மனிதர்களை
அவர்கள் ஏந்தும் ஆளுமைகளை
வர்ணம் பூசுவது தான்.
இந்த எழுத்துப்புருசுகளில்
ஏதோ தராசுத்தட்டுகளைத்
தாங்கிய‌
அந்த நடுநிலைக்கோல்
"கோடாமல்" எழுதுவது போல்
ஒரு தோற்றம் மட்டுமே
தெரியும்.
ஆனால் காய்கறி சந்தையில்
நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
வியாபாரியின்
கைக்குள் ஒரு தந்திரம்
முளைத்து
அந்த தராசுமுள்
அவன் சொன்னபடித்தான் கேட்கும்.
அப்படியான‌
நடுநிலை தவறிய விமர்சனங்கள் தான்
நடுநிலையின்
பொய்த்தோற்றம் காட்டி
விஷமத்தனமான விமர்சனங்களை
பதிவிடுகின்றன.
இப்போது நேராகவே
இந்த சமுதாயத்தைப்பார்ப்போம்.
இது மூடத்தனமான
சாதி மத அரசியல் தீ மூட்டங்களால்
போர்த்தப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் திராவிட இயக்கம்
மக்களின் சிந்தனையில்
வரலாற்று இயலில்
தமிழ் எனும்
நம் மொழியியலில்
ஒரு மறுமலர்ச்சியை ஊட்டியது.
காலப்போக்கில்
அரசியல் நாற்காலி அங்கு
மையம் கொண்ட போது
அந்த திராவிடசிந்தனைகள்
எரிச்சலூட்டின போல தோன்றின.
ஆனால் திராவிட எழுச்சி
இன்னும் நமக்கு தேவைப்படுகிறது.
இந்த பரிணாமத்தில்
அதிமுக தன் முகத்தையே
மாற்றிக்கொண்டது.
பாஜக எனும் மதவாதக்கட்சியே
அதன் உட்கருவாக ஊடுருவி விட்டது.
திமுக மீதும்
இந்த வகையான குற்றச்சாட்டை
சுமத்தும் கடந்தகாலச்சுவடுகளை
வைத்துக்கொண்டு
சிலர் எழுதுகிறார்கள் .
இந்த திசை திருப்பல்களோடு
அணுகுவது தான்
திரிபு அடைந்த நடுநிலை என்பது.
மேலும் ஊழல் என்பதை வைத்து
கிலுகிலுப்பை காட்டும்
அந்த போலி சிந்தனையாளர்கள்
அந்த விமரிசனங்களை
திமுக மீது எறிவதும்
தமிழ்ப்பகைவர்களின் தந்திரங்கள் தான்.
அதிமுக மீது ஊழல் குற்றம்
சுமத்துவது மட்டும் சரியா
என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் இவர்களின் ஊழல்களை
வெளிப்படுத்துவதில்
அந்த தமிழ் இன எதிரிகளின்
நச்சு வர்ணத்தை தோலுரிக்கும்
நோக்கமே இருக்கிறது.
திராவிட வரலாற்று இயல் தான்
தமிழர்களின்
இப்போதைய அடர்த்தி மிகுந்த‌
தேவை.
மக்கள் இயக்கங்கள் இந்த புள்ளியில்
குவிவது தான்
நம் வரலாற்றின் திருப்புமைனையை
தீர்மானிக்க வல்லது.
அரசியல் நிகழ்வுகளில்
முரண்பாடுகள் கூட‌
நம் இலட்சியத்தை பாதை போட‌
பயன் படுத்திக்கொள்ளப்படுகின்றன.
முன்பு எதிரியாய் இருந்தவர்களோடு
கை கோர்த்துக்கொள்ளும் காட்சிகள்
அத்தகைய முரண்பாடுகள் தான்.
"எங்கோ இருந்த தமிழ்ப்பகைவர்"
இதோ
நம் தமிழ் இதயங்களை
ஈட்டி கொண்டு தாக்க அருகில்
வந்து விட்டனர்.
அன்று எங்கே போயிற்று இந்த வேகம்?
என்று சினங்கொள்ளும்
ஈழத்தாகங்களே!
வெறும் சினமும் வீரமும்
கொத்து கொத்துகளாய்
பலி கொண்டது
நம் தமிழ் உயிர்களைத்தானே!
அன்று அவர் ராஜினாமா செய்யவில்லையே என்று
இன்று நம் தமிழ் எழுச்சி மீதா
கோடரி தூக்குவது?
ஒரு தேசத்தின்
அசுரத்தனமான இறையாண்மைக்கு முன்
இந்த ராஜினாமாக்கள்
என்பது வெறும் பொம்மை விளையாட்டே.
அந்தக்காலியிடத்துக்குள்ளும்
தமிழ்ப்பகைமையே போய்
நிரப்பிக்கொள்ளும் என்பது
என்பது கூடவா நீங்கள் புரியவில்லை.
போர் என்றால் ஆயிரக்கணக்காய்
சாவத்தான் செய்வார்கள் என்று
கொக்கரித்ததே அந்த பகைக்குரல்!
இப்படி நமக்குள் எதிர் எதிராய்
வாள் நீட்டித்தானே
தமிழ் வீரம் என்பது
மூவேந்தருக்குள் முடங்கிப்போனது.
வரலாறு யுத்தக்களம் மட்டும் அல்ல.
அது ஒரு புத்தகக்களம்
பல பாடங்களை போதித்த களம்.
ரத்தம் கொண்டு ஒலிப்பதை விட‌
அறிவின் சத்தம் கொண்டு
நம் முரசை ஒலிக்க வேண்டும்.

இந்த காலகட்டத்து அரசியலில்
நம் தமிழ்க்குரல் ஓங்க வேண்டும்.

ஸ்டாலின் அணியில் திரளும்
இந்த ஜனநாயக பேரெழுச்சியை
கொச்சைப்படுத்தவும்
மழுங்கடிக்கவும்
வேடதாரிகளும் கபடதாரிகளும்
எழுத்து வேட்டையாடக்கிளம்பியிருக்கின்றனர்
விஷமத்தனமாய்
விமரிச‌னங்கள் என்ற பெயரில்.
இந்த தேர்தல் கூட‌
நம் "தலையாலங்கானத்துச் செரு"தான்.
ஆரியப்படை கடந்தவர்கள்
ஆரியப்படையால் மிதித்து நசுக்கப்பட்டு
கடக்கப்பட விடலாமா?
அன்று இமயத்தில் நம் கொடியை
நாட்டியவர்கள்
இன்று ராமர் கோயிலுக்கு
கல் சுமக்கக்கிளம்பிவிட்டார்களே.
சிந்திப்பீர் தமிழர்களே!

===================================================

செவ்வாய், 14 மே, 2019

பயம்

பயம்
=====================================================ருத்ரா

ஒரு இந்து
ஒரு பயங்கரவாதி
ஒரு தீவிரவாதி
இதெல்லாம் சேர்த்து
யாரைக்கூப்பிடுவது.

"கடவுளே!"
ஆம்
அவனைத்தான்.
பின்னே என்ன?

ராம் ராம் என்று
பஜனை செய்யும்
ஒரு மனிதன் இருந்தான்.
அவனச்சுட்டுத்தள்ள
ஒரு ராம் வந்தான்.

 அவன் ஒரு கொலையாளி
அவன் ஒரு இந்து.
அவன் ஒரு பயங்கரவாதி.
அவன் ஒரு தீவிரவாதி.
ஆனாலும்
அவன் ஒரு கடவுள்
என 
சுடப்பட்டவன்
"ஹே ராம்"
என்று தான்
கும்பிட்டு விழுந்தான்.

கடவுளுக்கு
ஈவு இரக்கம் கருணை
எல்லாம் இல்லை.
ஏனெனில்
அவனிடம் "மானுடம்"இல்லை.
எல்லா வேதங்களையும்
வாந்தியெடுத்ததாக
சொல்லப்படும் அவனிடம்
அரிது அரிது
மானிடராக பிறத்தல் அரிது
என்ற வேதம் அதாவது
அறிவு மட்டும் இல்லை.
இருந்தால் எல்லோரிடமும்
"நான்" தான் இருக்கிறேன்
என்று கீதை சொல்லிவிட்டு
தன்னையே
தற்கொலை செய்வது போல்
இந்த கொலையை செய்திருப்பானா?
கேட்டால்
தர்மம் வென்றது என்பான்.
அதர்மமும் அவனுக்கு
தர்மம் தான்.

கடவுளே
உன்னை "ஈஸ்வர அல்லா" என்று
கூப்பிட்டதற்கா
உன் சங்கு சக்கரங்களை
தூர எறிந்துவிட்டு
வெள்ளைக்காரன் கண்ட‌
துப்பாக்கியைத்தொட்டு
தீட்டுப்படுத்திக்கொண்டு
இந்த பயங்கரத்தை செய்தாய்?

கடவுளே
என்று உன்னைக் கூப்பிடக்கூட‌
இந்த தேசத்தில் "பயம்"தான்.
"கடவுளா"
இது என்ன மொழி?
சமஸ்கிருதம் இல்லையே
என்று இவர்களை
சுடுவதற்கு
ஒரு அரசாங்கத்தின் உருவில்
ஒரு அவதாரம்
எடுத்தாலும் எடுப்பாய் நீ.
இந்தக் கடவுள்கள்
எங்களுக்கு வேண்டாம் இனி.

=====================================================

திங்கள், 13 மே, 2019

உற்றுக்கேள்





உற்றுக்கேள்
==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
"டி ப்ரேன்" பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து தேடு!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

================================================
17.07.2016


ஞாயிறு, 12 மே, 2019

அன்னையர் தினம்


அன்னையர் தினம்
===============================================ருத்ரா


ஒரு நாள் போதுமா..?
இன்றொரு நாள் போதுமா?

அம்மா எனும் அன்பின்
ஏழ் பெருங்கடலே!
உன் படைப்பின்
உயர் வேதம்
பற்றி பாராயணம் செய்ய
இன்றொரு நாள் போதுமா?

அந்த வேதங்கள்
சோம பானத்தையும்
சுரா பானத்தையும்
முட்ட முட்ட க்குடித்து
போதை மதங்களை
ஸ்லோகங்களாய்
வாந்தியெடுத்தன.

உன் படைப்பு வேதம்
உன் ரத்தத்தையே உருக்கி
உயிர் பூசி
பிள்ளையாய் வார்த்தது.

அம்மா!
இவர்கள் எதை எல்லாம்
சிகரம் என்று காட்டுகிறார்களோ
அதில்
உன் மெட்டிச்சுவடுகள் கூட
தெரிய வாய்ப்பில்லை.
அதையும் தாண்டிய உயரம்
உன் உயரம் அம்மா!

உயரம்
எல்லை
வரம்பு
எல்லாமே
உடைந்து போயின
உன் அன்பின் முன்னே.

காலம் பூத்து முகிழ்த்ததே
அம்மா
உன் முலைப்பால் சொட்டு
இந்த கால உயிர்களின் வாயில்
விழுந்த பொழுது தானே
விடிந்தன பொழுதுகள்!
அப்படியென்றால்
உனக்கு ஏது ?
அந்த காலமும் வருடமும்
காலண்டர் தினமும்?

வலி உயிர் போகுது என்பார்கள்.
ஆனால்
அந்த வலியையே
உயிராக்கி பயிராக்கி
உன் மடியிலேயே
அந்த பிரபஞ்சத்துடிப்புகளை
விவசாயம் செய்பவள் அல்லவா நீ!

கடைகளில் ஷாப்பிங் செய்து
மகிழ்ந்து கொள்ளுங்கள்.
தொலைக்காட்சிகளில்
இதற்காகவே மடித்து மடித்து
வைக்கப்பட்டிருந்த
தலைப்புகளில்
சொற்போர் நிகழ்த்துங்கள்.
நிச்சயம்
அன்னை எனும்
அந்த சினிமாக்காவியத்தை
கண்டு மகிழுங்கள்.

அன்னை என்பவள்
பெற்றுத்தான் நிரூபிக்க வேண்டுமா?
அந்த சினிமாவில்
அந்த ஒப்பற்ற நடிகை பானுமதி அவர்கள்
தன்  ஒவ்வொரு
இதயத்துடிப்பையும்
பிரசவம் ஆக்கி ஆக்கி
அன்பின் பிரவாகத்தை
வெளிப்படுத்தினார்களே
அது அம்மா என்பதன் உயிர்ப்பிம்பம்.

ஓ! குழந்தைகளே
உங்களைத்தாங்கி நிற்கும்
இந்த மண்ணின் சுவாசமே
உங்கள் அன்னையின் தொட்டில்.
ஆம்!
இங்கு குழந்தைகளின் தாலாட்டே
இந்த அம்மாவுக்கு இப்போது தேவை.
அந்த ஜனநாயகம்
இப்போது மூச்சடங்க விட்டு விடாதீர்கள்
ஓ! குழந்தைகளே.
அன்னையே குழந்தை!
குழந்தையே அன்னை!
ஜனநாயக யுகம் மரித்திடல் கூடாது.
அந்த ஓட்டுப்பெட்டிகளின்
"கோக்கூன்களிலிருந்து"
என்ன புயலின் சிறகுகள்
என்ன பெயர் சூடி
வரப்போகிறதோ ?

ஜனநாயக அன்னையின்
புன்னகை வெல்க.

தாய் மண்ணே வணக்கம்!
தாய் மண்ணே வணக்கம்!
வந்தே....மாதரம்...!

===============================================================





சனி, 11 மே, 2019

அஜித்துக்கு தெளித்த "பன்னீர்"

அஜித்துக்கு தெளித்த "பன்னீர்"
==================================================ருத்ரா

சமீபத்தில்
அஜித் அவர்களின்
பிறந்த நாளுக்கு
வாழ்த்துக்கள் எனும்
பன்னீர் தெளித்தார்
ஒரு முக்கியக்கட்சித்தலைவர்.

இதுவரை
அரசியல் சாயம்
தன் மீது விழாமல் பார்த்துக்கொண்ட‌
அஜித்
தேனி மண்வாசனையோடு
தூக்குதுரையாக‌
விஸ்வாசத்தில்
ஏதோ ஒரு
மெல்லிய கோடு காட்டிவிட்டார் போலும்.
அஜித்தின்
அரசியலின் கதவு வெளிச்சம்
அதன் இண்டு இடுக்கு வழியாய்
ஒரு கீற்று காட்டியிருக்குமோ?
நமக்கான ஒரு "சூப்பர் ஸ்டாரை"
நமக்கான ஒரு போன்ஸாய் மரமாய்
நம் மேஜையில் வைத்துக்கொள்ளலாம்
என்று
காய் நகர்த்தல் எனும்
புதிய யோகப்பயிற்சியை
துவக்கி இருப்பாரோ?
ஏற்கனவே வாரணாசியில் போய்
மோடி அலையை
ஒரு கங்கா ஜலக் குடுவையில்
பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இணை துணை என்ற‌
அடைமொழிகள் எல்லாம் இல்லாமல்
சுயம்புவாய்
கோட்டையின் "அரசனாய்"
தன் மகன் செங்கோல் ஏந்த
"டிப்ஸ்" கிடைக்குமே
என்று
மாண்பு மிகு பன்னீர் அவர்கள்
இப்படி பன்னீர் தெளித்திருப்பாரோ?
நகைசச்சுவைக்காக
எழுதப்படும் வரிகள்
ஒருபுறம் இருக்கட்டும்.

ஏதோ ஒரு ஏலியன் படத்தில்
ஏலியன் முட்டைகள்
பயங்கரமாய் அடைகாக்கப்பட்டு
பயங்கரமாய் குஞ்சு பொறிக்கும்
பயங்கரமான காட்சிகள்
நம்மை திகிலில் உறைய வைக்கும்.
அதுபோல்
நம் ஜனநாயக முட்டைகளான
அந்த கணினிப்பெட்டிகள்
அடைகாக்கப்படுகின்றன.
வெளிப்படப்போவது
சர்வாதிகாரமா?
மக்கள் அதிகமா?
நம் கதாநாயகர் தல அவர்களுக்கு
இதையே ஒற்றை வரிக்கதையாய்
முன் வைக்கிறேன்
"எந்திர வேதாளம் " என்ற தலைப்பில்
அரசியல் மசாலாப்பொடியும் கொஞ்சம்
தூவி நடித்தால்..
அய்யய்ய்யோ ..!
அவர் எங்கோயோ போய்
உயர்ந்து நிற்பார்!
அவருக்கு
நம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உரித்தாகுக!

======================================================













தோப்பில் முகமது மீரான்.




https://tamil.asianetnews.com/tamilnadu/writer-thoppil-mohammed-meeran-dead-pr9t0g 
இந்த சுட்டிக்கு நன்றி! 

தோப்பில் முகமது மீரான்.
============================================ருத்ரா

திருநெல்வேலி பேட்டை
வீரபாகு நகரில்
தமிழ் எழுத்துக்களின்
குவியல்
முத்துக்களாய் மணிகளாய்
சுடர்ந்து கொண்டிருந்த
ஒரு யுகம் ஓய்வு கொண்டு விட்டது.
அவரது சிறுகதை தொகுதியில்
சமுதாயம்
அவலங்களால்
அழுகிக்கொண்டே
அழுதுக்கொண்டே
இருந்த போதும்
ஒரு எரிமலையின்
அழகிய  சிலிர்ப்பை சிரிப்பை
புஷ்பித்துக்காட்டியது.
அதில் ஒரு  காதல் கதை
படித்தவர்களின்
நெஞ்சை ரகசியமாய் கிள்ளும்.
அந்த காதலி
அவர் எழுதிய பக்கங்களில்
எந்த
இடத்திலும்
க்ளுக் என்று சிரிப்பொலி கூட
எழுப்பியிருக்க மாட்டாள்.
முகத்தையோ
கண்களையே கொண்டு
அந்த "பொன் தூண்டிலைக்கூட "
வீசியிருக்க மாட்டாள்.
ஆனால்
பின்தொடரும் இவன்
துடிக்கும் மீன் ஆகியிருப்பான்.
அந்த பஸ்ஸில்
அவன் அவள் கூந்தலை
பின்னிருந்து தான்
பார்க்கிறான்.
கூந்தலின் கீற்றுகள்
அந்த மண்ணின்  மணம் மிக்க
ஒரு தைலத்தில்
மின்னும் ஒளியுடன்
அவன் மீது  சுளீர் சுளீர் என்று
சாட்டை சொடுக்கியது.
அவன் இதயம் இன்பவலியின்
பொன்னுலகம் ஆனது.
அவர்கள் காதல்
நிறைவேறுவது அல்லது
நிறைவேறாமல் போவது பற்றி
அந்த பக்கங்கள் மூச்சு
காட்டவில்லை.
வரிகள் எல்லாம் வழுக்கிக்கொண்டு
ஓடிவிட்டன.
ஈரமே காட்டாத கண்ணீர்த்திவலைகள்
அந்த  எழுத்துக்கள் தோறும்
கிளர்ச்சி ஊட்டின.
அற்புதமான எழுத்துக்கள்.
"அனந்த சயனம்   காலனி "
எனும் அந்த கதைகளின் தொகுப்பு
எழுத்து மின்னல்களின் "கோகூன்"கள்
ஊஞ்சல் ஆடுகின்ற
படைப்பு த்தோட்டம்.
அந்த புத்தகம் படித்தால்
அவர் இறந்து விட்டது
மறந்து போய்விடும்.
அவர் பிறந்து பிறந்து வந்து
அந்த எழுத்துக்களில்
அவர் உலவுவதாய் உணர்கின்றோம்!

==========================================================







.