புதன், 7 ஜூன், 2023

புல்லுக்கும் புழுவுக்கும்

 


புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

கவிதை எழுதத்தெரியும்.

வானமே தான் அவற்றின்

காகிதமும் எழுத்தும்.

அவை

சூரியனைக்கொப்புளித்து

சொற்களில் பல் தேய்த்து

விடியலை வரவேற்றன.

அவற்றின் மூச்சுகள் தோறும்

விடுதலையின் அணுவுலைக்கூடம்.

அவற்றின் பட்டாம்பூச்சிகளில்

வர்ணங்கள் மட்டுமே இருந்தன‌

வர்ணாசிரமங்கள் இருந்த தில்லை.

கடவுள் எனும் ஆபாசத்தை

அவை இன்னும் 

அறியவே இல்லை.


_________________________________சேயோன்.

வியாழன், 1 ஜூன், 2023

கொஞ்சம் கிட்டே வா!

 

கொஞ்சம் கிட்டே வா!

___________________________________________சேயோன்.



சூரியனே 

கொஞ்சம் கிட்டே வா!

உன் கன்னத்தை வருடிக்கொள்கிறேன்.

தர்ப்பைப்புல் மந்திரங்களால்

உன்னை கிச்சு முச்சு மூட்டிக்கொண்டிருந்தபோது

கடைசியில் சுண்டல் பிரசாதம்

குருட்டாம்போக்காய்

ஒரு கணிதம் சொன்னது.

கடவுள் என்ற ஒன்றை

மனிதன் புரிந்து கொள்ளவே கூடாது

என்பது தான் அது.

இன்று அறிவியல்

உன்னை என் மேஜை மீது

"போன்ஸாய்" போல்

முகம் காட்டிச்சொல்கிறது.

உன் நெருப்பின் சிவப்பு

வெட்கத்தினால் அல்ல.

என்னை தினம் தினம் பார்த்து தான்

நீ சன்னலை திறக்கவேண்டுமா?

உன் அறிவுக்குழம்பில் 

நான் இந்த நாட்களை

உனக்கு உருட்டி விளையாடுவது

தெரியாமால்

அந்த ருத்திராட்சங்களையா

நீ இன்னும் உருட்டிக்கொண்டிருப்பது?

கொஞ்சமாய் செல்லமாய்

நீ சிவப்பது தான்

அந்த மின்காந்தப்புயல்களின் செங்கரு

என்று புரிந்து கொண்டு விட்டோம்

நாங்கள்.

அண்டத்தின் இந்த பாதையில் 

நாம் கைகோர்த்தே செல்வோம் வா.


__________________________________________________







https://www.msn.com/.../the-inouye.../ss-AA1c0GOw...

WITH THANKS FOR THE LINK




செவ்வாய், 30 மே, 2023

அகழ்நானூறு 42.

 



அகழ்நானூறு 42.
உரை இன் விளக்கப் படமாக இருக்கக்கூடும்

அகழ்நானூறு 43

 



அகழ்நானூறு 43


டிக்கெட் ஸ்டப் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அகழ்நானூறு 44

 

அகழ்நானூறு  44

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________சொற்கீரன்


குடந்தை செவிய குறுமுயல் தழீஇய‌

சிலம்பி சிறையினம் சில் ஒலி கூர‌

பளிக்கின் அன்ன படர்நிழல் முன்றில்

புல்வாய் மிதிபடு சீறடி தோறும் அவள்

சிற்றடி ஒற்றிய பொறிபடு எல்லின் 

வலைக்கண் வடிக்கும் வயமான் வெற்ப!

விசைத்த வில்லர் கொடுவரி உழுத 

கொல்சுரம் இறந்தும் கொன்னே சிவப்போள்

கள்ள நகையும் களிபிறங்கு கலித்த‌

கல்பொரு அருவி மணிப்பெயல் மாய்ந்து

உவக்கும் ஒருபால் அத்தம் சேர‌

ஊர்ந்தனை என்கொல்?

ஞாயிறு, 7 மே, 2023

அருமைத்தோழர் எழிலன்.






அருமைத்தோழர் எழிலன்.
___________________________________செங்கீரன்


ராமன் எத்தனை ராமனடி என‌
பாடல்கள் வந்தன என்று
யாவரும் அறிவார்.
இந்த "செங்கொடி"யேந்திய 
ராமனை நாமே அறிவோம்.
இவர் அம்புகள் சுரண்டல் அரக்கனை
விடுவதாயில்லை.
துரத்திக்க்கொண்டே இருந்தன.


தெப்பக்குளத்திலிருந்து அந்த‌
செங்கடல் புறப்பட்டது.
........................
தூள் கிளப்பிய பேரணியால்
மாசி வீதிகள் 
தூசி வீதிகள் ஆயின.
...........................
கோடிக்கால் பூதம் என‌
கிளம்பிய ஊர்வத்தால் 
வைகை கல்பாலம்
கதிரியக்கத்தின் ஒரு
கல்பாக்கம் ஆனது 
......................

மறு நாள இந்தப்பேரணிக்கவிதை
தீக்கதிரில் வந்தது.
ராமன் அவர்கள் என்னிடம் வந்து
"செங்கீரன்"கவிதை அருமை
அந்த மாசிவீதி..தூசிவீதி தூள்!
என்று அந்த பளிங்குச் சிரிப்போடு 
சொல்லிக்கொண்டே போனார்.
அந்த தோழனின் உள்ளம் 
எப்போதுமே
ஒரு செவ்வான விடிவானம் தான்.
இப்படி பரிமாறிக்கொள்ள‌
இந்த இடைவெளிக்குள்
ஒரு மரணமா
எழுது என்று காகிதம் நீட்டுவது?
இந்த உணர்வே என்னை
ரம்பமாய் அறுக்கிறது.
"செவ்வணக்கம்"என்று
விடைப்பாக சல்யூட் 
வைக்க முடியவில்லை.  









அகழ்நானூறு 41"

 அகழ்நானூறு 41

________________________________________________சொற்கீரன்



பொருது இறங்கு வன்பெயல் 

கழுவிய வானின் வறள் மஞ்சின்

வாலா வெண்மழை புல்லென் நிரவிய‌

கள்ளி நனந்தலை கால் இடற‌

கடுங்கண் பரலிய வெட்சுரம் இறந்து

முள்படர் இலவம் செம்பூ மறைப்ப‌

மண்ணிய நிழலின் நனைதரு குளியல்

நீந்திய ஆற்றின் ஒரு சிறை ஆங்கே

பொறி மாவின் இரலை திரிமருப்பின்

கவின் மிகக்கிளறி அவள் நகை புண்செய‌

கலிமா எறிஉளைச் செலவின் கடுகி

புதல் ஒளிச்சிறந்த வைகறை போன்ம்

விரிதரு வெள்ளிய அகல்வான காண்பின்

அதுவும் அவள் இள முறுவல் மின்னி வரிய‌

நோதல் காழ்த்து ஊழ் ஊழ் உறுத்த 

அஞ்சு வரு நீளிடை அருஞ்சுரம் பெயர்ந்தான்.


______________________________________________‍‍‍

 இடைக்காடனார் பாடல் அகம்..139

(inspiration)