ஞாயிறு, 7 மே, 2023

அகழ்நானூறு 41"

 அகழ்நானூறு 41

________________________________________________சொற்கீரன்



பொருது இறங்கு வன்பெயல் 

கழுவிய வானின் வறள் மஞ்சின்

வாலா வெண்மழை புல்லென் நிரவிய‌

கள்ளி நனந்தலை கால் இடற‌

கடுங்கண் பரலிய வெட்சுரம் இறந்து

முள்படர் இலவம் செம்பூ மறைப்ப‌

மண்ணிய நிழலின் நனைதரு குளியல்

நீந்திய ஆற்றின் ஒரு சிறை ஆங்கே

பொறி மாவின் இரலை திரிமருப்பின்

கவின் மிகக்கிளறி அவள் நகை புண்செய‌

கலிமா எறிஉளைச் செலவின் கடுகி

புதல் ஒளிச்சிறந்த வைகறை போன்ம்

விரிதரு வெள்ளிய அகல்வான காண்பின்

அதுவும் அவள் இள முறுவல் மின்னி வரிய‌

நோதல் காழ்த்து ஊழ் ஊழ் உறுத்த 

அஞ்சு வரு நீளிடை அருஞ்சுரம் பெயர்ந்தான்.


______________________________________________‍‍‍

 இடைக்காடனார் பாடல் அகம்..139

(inspiration)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக