ஞாயிறு, 7 மே, 2023

அருமைத்தோழர் எழிலன்.






அருமைத்தோழர் எழிலன்.
___________________________________செங்கீரன்


ராமன் எத்தனை ராமனடி என‌
பாடல்கள் வந்தன என்று
யாவரும் அறிவார்.
இந்த "செங்கொடி"யேந்திய 
ராமனை நாமே அறிவோம்.
இவர் அம்புகள் சுரண்டல் அரக்கனை
விடுவதாயில்லை.
துரத்திக்க்கொண்டே இருந்தன.


தெப்பக்குளத்திலிருந்து அந்த‌
செங்கடல் புறப்பட்டது.
........................
தூள் கிளப்பிய பேரணியால்
மாசி வீதிகள் 
தூசி வீதிகள் ஆயின.
...........................
கோடிக்கால் பூதம் என‌
கிளம்பிய ஊர்வத்தால் 
வைகை கல்பாலம்
கதிரியக்கத்தின் ஒரு
கல்பாக்கம் ஆனது 
......................

மறு நாள இந்தப்பேரணிக்கவிதை
தீக்கதிரில் வந்தது.
ராமன் அவர்கள் என்னிடம் வந்து
"செங்கீரன்"கவிதை அருமை
அந்த மாசிவீதி..தூசிவீதி தூள்!
என்று அந்த பளிங்குச் சிரிப்போடு 
சொல்லிக்கொண்டே போனார்.
அந்த தோழனின் உள்ளம் 
எப்போதுமே
ஒரு செவ்வான விடிவானம் தான்.
இப்படி பரிமாறிக்கொள்ள‌
இந்த இடைவெளிக்குள்
ஒரு மரணமா
எழுது என்று காகிதம் நீட்டுவது?
இந்த உணர்வே என்னை
ரம்பமாய் அறுக்கிறது.
"செவ்வணக்கம்"என்று
விடைப்பாக சல்யூட் 
வைக்க முடியவில்லை.  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக