அகழ்நானூறு 44
____________________________________சொற்கீரன்
குடந்தை செவிய குறுமுயல் தழீஇய
சிலம்பி சிறையினம் சில் ஒலி கூர
பளிக்கின் அன்ன படர்நிழல் முன்றில்
புல்வாய் மிதிபடு சீறடி தோறும் அவள்
சிற்றடி ஒற்றிய பொறிபடு எல்லின்
வலைக்கண் வடிக்கும் வயமான் வெற்ப!
விசைத்த வில்லர் கொடுவரி உழுத
கொல்சுரம் இறந்தும் கொன்னே சிவப்போள்
கள்ள நகையும் களிபிறங்கு கலித்த
கல்பொரு அருவி மணிப்பெயல் மாய்ந்து
உவக்கும் ஒருபால் அத்தம் சேர
ஊர்ந்தனை என்கொல்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக