வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வானத்தில் ஒரு வடைமாலை

வானத்தில் ஒரு வடைமாலை
================================================ருத்ரா இ பரமசிவன்



http://www.msn.com/…/hurricane-newton-makes-lan…/ar-AAiyjxG…



வடைமாலை போடாததால் கோபப்பட்ட அனுமார் வேகமாக கை வீசிக்கொண்டு வருவதை போல் இல்லை? வானத்தில் உயரத்தில் இந்த மேகமண்டலங்கள் உருண்டு திரண்டு வருவதைப்பார்த்தால் அப்படித்தான்
தெரிகிறது.

ஆனால் புயல் மையம் சுழன்று வந்ததில் அந்த மெக்ஸிகோ குட்டித்தீவு "அகாபுல்கா" படும்பாட்டை பார்க்கும்போது நம் நெஞ்சு பதறுகிறது



Hurricane Newton packing 90-mile (145-kilometer) per hour winds made landfall near the Los Cabos resort area of Mexico's west coast on Tuesday where thousands of tourists and locals are hunkered down, US forecasters said.
msn.com

சுடலை மாடன்





சுடலை மாடன்
=============================================ருத்ரா இ பரமசிவன்.

"ஐயனே!
பச்சை நிறமே பச்சை நிறமே என்று
எனது இந்த பச்சை வண்ணம் அலுத்துவிட்டது.
என்ன "ஃபேய்ர் அன்ட் லவ்லி "போட்டாலும்
சரியில்லை.
உங்கள் மேனி மட்டும் எப்போதும்
மினு மினுக்குதே!
எனக்கு கொஞ்சம் அந்த "பவுடரை" தாருங்களேன்."


"சற்று நேரம் பொறு தாட்சாயணி.
என் பக்தன் அங்கே
எரிந்து கொண்டிருக்கிறான்..
அவன் நீறு பூத்த பின் அதை
டப்பியில் அடைத்து லேபிள் ஒட்டி
காப்பி ரைட் ஹோலோகிராம் எல்லாம்
செய்து தருகிறென்.
அப்புறம் பூசிக்கொள்"
என்ன சுடுகாட்டுக் கம்பெனியா அது?"


இதற்குள்
"காடுடைய சுடலைப்பொடி பூசி என்
உள்ளங்கவர் கள்வன்..."
என்று தேவாரப்பண் முழக்கி
அங்கே கூட்டம் குவிந்தது.
இந்த
"சுடலைமாடன்களே"
எங்கள் திருநெல்வேலிச்சீமை
மண்ணின் மைந்தர்கள்.


தென்னாடுடைய இவனின் குரலே
எந்நாட்டுக்கும் வெளிச்சம் காட்டும் குரல்.


மரணத்தை ஜனனத்தில் பூசிக்கொள்.
அல்லது
ஜனனத்தில் மரணத்தின் நேசங்கொள்.


இதுவே
இன்றைய எல்லா மனமுறிவு நோய்களுக்கும்
அருமருந்து.
அச்சம் தவிர் அல்ல.
அச்சத்தையே அருந்து.
எல்லா இசையமப்புகளும்
கொரியாகிராஃபிகளும்
சுடுகாட்டில் தான் அரங்கேற்றம்.
துவைதம் அத்துவைதம் என்ற‌
ஜன்னிப் பிதற்றல்களின்
களம் எல்லாம் அங்கே தான்.
பிடி சாம்பல்களில்
நான்கு வர்ணங்கள் ஏது?
நான்கு வேதங்களும் ஏது?
துடிப்பு அடங்கிய இந்த
இதயத்தின் துடிப்பு ஒலியை
கேட்டிருப்பீர்களே !
"டப் டப்" எனும்
அந்த துப்பாக்கிச்சூடுகள்
இன்னுமா உங்கள்
"அஞ்ஞானத்தை"ச் சாகடிக்கவில்லை?


உண்மையில்
அங்கே சுட்டெரிக்கப்படுவது
உடல்கள் அல்ல.
சச்சரவுகள் கிளப்பும்
எல்லா மதங்களும் தான்.
இது விந்தை அல்லவா?
சுடலை மாடனுக்குள்
எல்லா சூத்திரங்களும்
சுருண்டுகிடக்கிறது.
தீக்குள் விரலை விட்டு
அந்த விஞ்ஞானத்தை
தீண்டும் இன்பம் இது!
"நந்த லாலா"க்களுக்கு
இது இன்னும் புரிந்திருக்காது?
அதனால் தான்
இத்தனைக்\கோத்திரங்களும்
அதன் ஆணவத்தின்
இத்தனை ஆத்திரங்களும்.!
இந்த ஆத்திரங்களும் சாத்திரங்களும்
எரிந்து தொலையட்டும்.
எரிய விடுங்கள்!


============================================

14 பெப்ரவரி 2015

வியாழன், 8 செப்டம்பர், 2016

உலகம் சுற்றி ஒரு சிந்தனை


உலகம் சுற்றி ஒரு சிந்தனை
================================================ருத்ரா இ பரமசிவன்

http://www.msn.com/…/the-us-is-covered-in-myste…/vi-AAikjR3…
வானத்தில் விமானத்தில் பயணிக்கும் போது பார்க்கும் இந்த "வட்டங்கள்"
எல்லாம் யாரோ "ஏலியன்கள்" வந்து இந்த திகில் ஜியாமெட்ரியை செய்து விட்டாதாக கிளம்பிய "சை ஃபை" (விஞ்ஞானக்கற்பனைகள்)ஏராளம்.
நமது புராணங்கள் வேறு மாதிரி இருக்கும்.கோவர்த்தன கிரியை குடையாய் பிடிக்கும் போது அடைந்த பசுக்களினால் மாயம் செய்து கிருஷ்ணன் ஆக்கிய வரட்டிகள் என்றும் கூட கரண பரம்பரையாய்...சொல்லிக் கொண்டிருக்கலாம். கட்டுரையை  (link) படியுங்கள்.மனிதனும் விஞ்ஞானமும் சேர்ந்து செய்த வித்தை இது.
____________________________ருத்ரா
See More

புதன், 7 செப்டம்பர், 2016

"அறிவோம் நன்றாக..." (ஆசிரியர் தினம்)

"அறிவோம் நன்றாக..." (ஆசிரியர் தினம்)
===================================================ருத்ரா
"..குருவே துணை" என்று
அரிசி நிரப்பிய தட்டில்
இன்றைய "விசைப்பலகையை"
அன்றே நாம் பார்த்துவிட்டோமே.
இதற்கு
உயிர்த்துணை அல்ஜீப்ராவாய் இருந்து
உருவம் தந்தவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும்
தம் "அக நூல்"களை வருடி அல்லவா
நம் முக நூல்களை படிப்பார்.
ஓலைச்சுவடியைக்கூட‌
ஏந்தி சென்ற அன்றைய நாட்களில்
நம் மொழியின் உயிரெழுத்து மெய்யெழுத்து வரிகள்
ஊர்ந்துகிடக்கும்
அந்த நீட்டோலை வடிவ
குறுந்தகடுகளை மறக்க இயலுமா?
உடைந்த சிலேட் என்றாலும்
அதுவே தான்
நாளும் நாம் உற்றுப்பார்க்கும்
அறிவின் சன்னல்.
அந்த "விண்டோ"வுக்குள்ளும்
விடலைகளின் குறும்புச்சிரிப்புகள்
மத்தாப்பு வனங்கள் தானே!
அங்குலமும் சொல்லிக்கொடுப்பார்
அதை வைத்து விரல் முட்டியையும்
அளந்து பார்ப்பார் நம் ஆசான்.
அந்த நாளில்
அன்பின் அழுத்தம் திருத்தமான அர்த்தம்
கண்டிப்பு தானே.
நீள மான பிரம்பு அல்லது ஒரு அடிஸ்கேல் தான்
அவரது செங்கோல்.
ஆனால் அவர் அமர்ந்திருக்கும்
அரியாசனம் மட்டும் நம் நெஞ்சங்களில் தான்.
காலத்தின் வரலாற்று ஆறு
எத்தனையோ கரைகள் உடைத்து
தடம் புரட்டியிருக்கிறது.
மடிப்பொறியில்
மவுஸ் சரியில்லை என்று
வீதி விளிம்புகளில் போராட்டம்.
அரசியல் எனும்
ஒரு மலைப்பாம்பின் முதுகில் ஊர்ந்து கொண்டிருக்கிறதோ
இந்த "பிள்ளைத்தமிழ்"க் கூச்சல்கள்
என்றும்
திகைக்க வைக்கிறது இன்றைய சித்திரங்கள்.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும்
கல்வி வியாபாரத்திலும்
தேர்தல் வியாபாரத்திலும்
இலவசம் என்பதே எங்கும் பரவசம்.
ஓசியாய் சக்கர நாற்காலி கிடைக்கிறதென்றால்
காலை ஒடித்துக்கொண்டாலும் பரவாயில்லை.
இலவசமாய் கிடைக்கிறதென்று
அந்த கண்ணுக்கு தெரியாத சர்வாதிகாரத்தை
ஜனநாயகத்தை காவு கொடுத்தாலும் பரவாயில்லை.
என்று "ஓட்டை " விற்று வாங்கும்
இந்த படிப்பினை எப்படி வந்தது?
இந்த சிந்தனை எப்படி நுழைந்தது?
இனி வருகின்ற
புதிய ஆசிரியர்களாவது
இந்த பஞ்சடைந்த கண்ணாடிகளை
கழற்றி வைத்து விட்டு
வகுப்பு எனும் கோயில்களுக்குள்
புதிய வெளிச்சம்  காட்ட
நுழைவார்களா?

===================================================
7 செப் 2014ல் எழுதியது.


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ஜோல்னாப்பைகள்



ஜோல்னாப்பைகள் 
============================ருத்ரா இ பரமசிவன்


இந்த உலகத்தை
தங்கள் தோள் பையில்
தூளி கட்டி
ஒரு பேனாவில்
தூள் கிளப்பவும்
அல்லது
அதை தூங்க வைக்கவும்
வலம் வரும்.

ஒரு சித்தாந்தம்
எப்படி கரு தரித்தது என்று
அதன் மசக்கைப்பருவத்திலிருந்தே
பிள்ளைத்தமிழ் பாடுவது போல்
ஆலாபனை செய்யும் வெற்றுப்பைகள்.

"தமிழுக்கும் அமுது என்று பேர்"
என்று இனிப்பாக
எங்காவது ஒலித்துவிட்டால் போயிற்று!
"லேங்குவேஜ் ஷ்சாவனிசம்" என்று
குதி குதியென்று குதிக்கும்
இந்த பைகள்.

சம்ஸ்கிருதமே உலக மொழி என்று
மேக்ஸ் முல்லர்களை உட்காரவைத்து
பல்லக்குத் தூக்கும்.

எங்கோ ஒரு குட்டித் தீவில்
ராணுவப்புரட்சி என்று
தலைக்குள் எல்லாம்
மூளையை எரித்துக்கொள்ளும் .

அண்டைத்தீவில்
சொந்த இனம்
ஆயிரம் ஆயிரமாய்
கசாப்பு செய்யப்படும்போது
ஒரு விநோதமான சாணக்கியத்தனம் பற்றி
விரிவுரை ஆற்றும்.

வெளிநாட்டுத்தேர்தலின்
ஜனநாயக நாடி நரம்புகளை
அவர்களின் "ஜெபஃ ர்சன் பேப்பர்ஸ்"லிருந்து
வரி வரியாய் பிளந்து கட்டும்.

அதே தொனியில்
உள்நாட்டு தேர்தலின் போது
கொண்டு வந்து நிறுத்தப்பட்ட
அந்த கரன்சிகளின் "மகா தேர்கள் "
பற்றியெல்லாம்
வெளுத்துக்கட்டினாலும்
இன்னும் இங்கு
கிழக்கு வெளுத்த பாடில்லையே
என்ற கவலை இல்லாமல்
காலையில் உதிக்கும் "சூரியனே"
படு அலர்ஜியாகி
மக்கள் விழிக்கும்போது விழிக்கட்டும்
என்று "உப்புமாக்கட்சிகளோடு"எல்லாம்
கூட்டணி கணக்கு போடும்.

உலகத்தொழிலாளர்களே
என்று உரத்து முழங்கினாலும்
உள்ளூர் பஞ்சசப்படி உயர்வோடு
இவர்கள் விடியல்
கல்லறைக்கு போய்விடும்.

கோபால் ராவ் இல்லாவிட்டால்
ஒரு  சோமையாஜுலு
என்ற பெயரே
யதார்த்தம் என்று நம்பப்படும்.


எனவே
மறந்தும்
தமிழ் வழுதி அல்லது தமிழ் ஒளி
என்ற பெயர்கள்
தலை தூக்குவதே "பூர்ஷ்வாத்தனம்"
ஆகிவிடும் இவர்களுக்கு


"காக்கையை
யார் இப்படி
பிய்த்துப்போட்டது"

"தடாக நிழலில் காக்கை"

மேலே உள்ளது கவிதை.
கீழே உள்ளது தலைப்பு.

இது சர்ரீயாலிசம்
அல்லது
ஃ பெண்டாசி
அல்லது ஏதோ ஒண்ணு !


கவிதையை
அவியப்போடுமுன்
கோழியை உரிப்பது போல்
சிறகை செதில் செதிலாக பிய்த்து
நவீனத்துவம் பின் நவீனத்துவம்
என்று
வார்த்தைகளில்
கோழி குருமா வைப்பதே இங்கு
இலக்கியப்பசியெடுத்த
அறிவு ஜீவித் தனம்.


மண்ணின் மக்களின்
நாடி நரம்புகளை விட
அந்த "பிரம்ம சூத்ர பாஷ்யம்" மாதிரி
புரியாத வாக்கு வாதங்களின்
"நாடி ஜோஸ்யமே"
இவர்களின் கனவு.
அந்த குமிழிக்குள்ளிருந்து கூட
ஏதோ ஒரு "லாவா"என்று
பிதுக்கிக்கொண்டிருக்கும்
இவர்களின் தாகம்.

ஆம் "அறிவு ஜீவிகள்"!
அறிவை ஆசை போட்டு அசைபோட்டு
ஒரே இடத்தில்
அசையாமல் அணியடித்துக்கொண்டு
சிந்தனைசெய்யும்
தர்க்க வாதிகளே
இந்த "ஜோல்னாப்பைகள்".

===========================================================









திங்கள், 5 செப்டம்பர், 2016

குறுங்கவிதைகள் (2) முதல் (5)வரை







குறுங்கவிதைகள் (2) முதல் (5)வரை
=========================================ருத்ரா இ பரமசிவன்


செல்ஃபி


இனிய தருணம் தான்
கடைசி தருணம்
ஆகாத வரை
_______________________________(2)

செல்


காசு இல்லை.
எல்லாவற்றையும்
காதல் தின்றது.
________________________________(3)

டெக்ஸ்டிங்


காலேஜுக்கு நேரமாச்சு
அவளுக்கு பசிக்க வில்லை.
இந்த ஆங்கில எழுத்துக்கள் போதும்.
___________________________________________(4)

செமஸ்டர்.


ஒற்றை ரோசாவை வைத்து
அவள் பினனே சென்றதில்
அவன் பின்னே வந்தன அர்ரியர்ஸ்
______‍‍‍‍‍‍‍‍______________________________________(5)_‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

குறுங்கவிதை -1


குறுங்கவிதை -1