சனி, 26 பிப்ரவரி, 2022

"கெட்ட போரிடும் உலகத்தை..."

 "கெட்ட போரிடும் உலகத்தை..."

__________________________________________________

ருத்ரா



கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு  சாய்ப்போம்

புதிய தோர் உலகம் செய்வோம்!....

பாவேந்தன் முழங்கியது இன்று

எல்லா மேலை நாடுகளிலும் 

பேரணிகளாய் எதிரொலிப்பது கேட்கிறோம்.

இதனுள் எத்தனை

நியாயங்கள் அல்லது நியாயங்களின்

போர்வைகள் போர்த்திய அநியாயங்கள்

இருக்கும் என்று கணக்கெடுப்பது கூட‌

மனித மலர்ச்சியின் நாகரிகத்தை

குழி தோண்டி புதைத்து விடும் என்பதும்

அறிகின்றோம்.

தமிழின் குரலில் என்றுமே பிசிறு இருந்ததில்லை.

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!

மனிதனே

உனக்கு நீயே தீதையும் நன்றையும் 

விதைக்கின்றாய்

என்றானே அந்த கணியன் பூங்குன்றன்

அவன் ஓலைத்துடிப்புகளே

இன்றைய உலகத்துடிப்புகளாய்

அலை பரப்புவது நம்முள்

சிலிர்க்கின்றது.

கல் பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்றில்

ஒளிந்து கிடக்கும் 

ஐன்ஸ்டீனின் விஞ்ஞானம்

மனித சமுதாயத்துக்குள்ளும்

ஒரு "குவாண்டம் மெகானிக்ஸ்" ஆக‌

குமுறிக்கொண்டு குமிழிகள் பூப்பதை

நாம் பார்த்து திகிலடைவதை விட‌

வரலாற்றின் திருப்பங்களாக அவை

பரிணாமம் கொள்ளும்

மைல் கற்களை நாம் 

அடையாளப் படுத்தியாக வேண்டும்.

தமிழா!

கெட்ட போரின் இந்த‌

பிண நாற்றங்களை நாம்

துடைத்தெறிந்தாக வேண்டும்!


__________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக