திங்கள், 28 பிப்ரவரி, 2022

புத்தகக்கண்காட்சிகள்

 புத்தகக்கண்காட்சிகள்

________________________________________ருத்ரா


சிந்தனை விரும்பிகளே!

உங்களுக்கு மூச்சு முட்டும்போதெல்லாம்

இந்த சன்னல்களை

திறந்து வைக்கிறார்கள்.

இது எவ்வளவு சிறப்பான பணி!

மனிதன் தன் மூளைச்செதில்களுக்குள்

கணிப்பொறி கூடு கட்டி

அடைபட்டுக் கிடக்கும்போதும்

கைபேசிகளின் பிருந்தாவன‌ங்களுக்குள்

கற்பனைத் தீ முண்டெரிய‌

சமுதாய பிரக்ஞை கொஞ்சமாய் 

தோலுரிந்து உள்ளே

பச்சை எலும்புகள் இளிக்க ஆரம்பித்த‌

ஒரு எதிர்பரிணாமத்திலும்

புத்தகங்கள் எனும் அருமருந்து

என்பது

காலத்தின் கட்டாயம்.

ஒரு வகையில் இது

நம் விண்வெளியுகத்திற்குப் பொருந்தாத‌

பழங்காலத்துக்கு செல்வது போல்

தோன்றினாலும்

எழுத்தும் பேச்சும் கொண்டு

மிடைந்த நம் இன் தமிழ்

ஒரு அதிரடி மூச்சுத்திணறல்களிலிருந்து

விடுபட வேண்டியிருக்கிறது.

ஆன் லைன் எனும் அந்த 

"குகை"களுக்குள் 

மனிதன் மறுபடியும்

காணாமல் போய்விடுவானோ

என்ற அச்சம் போக்கும்

அரிய வழி இது தானே.

ஆம்.

குகையின் "அந்தப்பக்க" வெளிச்சம்

நமக்கு

ஒரு கீற்று வழி காட்டுவதற்கு

நம் நாகரிகரோஜாவின்

மின்னல் புன்னகையே

நம் மனித நம்பிக்கையின் ஊற்று ஆகும்.

இந்த 

பஞ்சாங்கக்கூட்டங்கள்

அச்சு கோர்த்துக்கொண்டு

நம்மிடையே இன்னும் வந்து

மூடநம்பிக்கைகளின் 

ஆடு புலி ஆட்டங்கள் ஆடலாம்.

பத்தகங்கள் 

பணங்காய்ச்சி மரக்காடுகள் இல்லை தான்.

இருப்பினும் அவை நம்

"மனம் காய்ச்சி" மரங்கள்.

நம் சிந்தனைகளின் பசுமை தாகம்

அங்கே

காகிதங்களும் எழுத்துக்களுமாய்

தவம் செய்து கொண்டிருக்கின்றன.

வாருங்கள் 

வணிக விளம்பரங்களின்

மற்றும் 

தாது புஷ்டி லேகிய ஜோஸ்ய இரைச்சல்கள்

நம்மை இன்னும் வெறும் 

ஈசல்களாக குவியவிடாமல்

இங்கே சென்று

நம் இருப்பை பதிவு செய்துகொண்டே 

ஆக வேண்டும்.

மனித இனமும் 

ஒரு மறைந்தொழியும் உயிரினமாய்

காணாமல் போகும் முன்

ஓ!நண்பர்களே!

நம் முகங்களும் அகங்களும்

இங்கே பளிச்சிடட்டும்.

அவை வெறும் காகிதக்கட்டுகள் அல்ல.

நாளைய யுகங்களின் 

தெளிவான பளிங்குக்கூடங்கள்.

வாழ்க!வளர்க!

புத்தக கண்காட்சிகள்.


____________________________________________________





சனி, 26 பிப்ரவரி, 2022

அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

 அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

____________________________________________ருத்ரா




பட்டாம்பூச்சிகளை

என் சட்டைப்பை நிறைய

 முட்டையிட வைத்து

அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

ஓ!பெண்ணே!

உன் இமைச்சிறகுகளின்

ஒவ்வொரு துடிப்பும்

எனக்கு என் கவிதைத் தொகுப்புகள்.

அந்த வர்ணப்பிரளயங்கள்

எனக்குள் சிறகுச்சாமரங்களில்

கனவு வடிவங்களை புயல்களாய்

சுருட்டி வீசுகையில்

உன் காதல் புன்னகை 

இந்த வானமெல்லாம்

வாசல் தெளித்துக்கோலமிடும்.

நட்சத்திரப்பரல்கள் தெறிக்கும்

சிலம்புகளாய்

உடைத்து உடைத்து நீ

சிரிக்கும் போது

இதோ நான்

மேகங்களின் பஞ்சுப்பிசிறுகளாய்

சிதறிப்போகிறேன்.


_________________________________________










அது ?!!!

 அது?!!!

______________________________

ருத்ரா




நான் தொலைத்துவிட்டேன்

உன்னிடம் 

அது இருக்கிறதா?

எது

கடவுளிடம் மனிதன் கேட்டான்.

அதாம்பா..அது..?

எது

மனிதன் மீண்டும் கேட்டான்.

எதுவா?..

சரி நான் 

எதைத்தொலைத்து விட்டேனோ

அது!

எதைத் தேடுகிறேனோ

அது!

கேள்வி தொலைந்து விட்டது.

பதில் அங்கு

அவர்களிடம் 

கருப்பிடித்து நிற்கிறது.

கோடி கோடி ஒளியாண்டுகள்

எதையோ தேடி ஓடுகின்றன.

இன்னும் அது

கிடைக்கவில்லை.


__________________________________________



"கெட்ட போரிடும் உலகத்தை..."

 "கெட்ட போரிடும் உலகத்தை..."

__________________________________________________

ருத்ரா



கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு  சாய்ப்போம்

புதிய தோர் உலகம் செய்வோம்!....

பாவேந்தன் முழங்கியது இன்று

எல்லா மேலை நாடுகளிலும் 

பேரணிகளாய் எதிரொலிப்பது கேட்கிறோம்.

இதனுள் எத்தனை

நியாயங்கள் அல்லது நியாயங்களின்

போர்வைகள் போர்த்திய அநியாயங்கள்

இருக்கும் என்று கணக்கெடுப்பது கூட‌

மனித மலர்ச்சியின் நாகரிகத்தை

குழி தோண்டி புதைத்து விடும் என்பதும்

அறிகின்றோம்.

தமிழின் குரலில் என்றுமே பிசிறு இருந்ததில்லை.

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!

மனிதனே

உனக்கு நீயே தீதையும் நன்றையும் 

விதைக்கின்றாய்

என்றானே அந்த கணியன் பூங்குன்றன்

அவன் ஓலைத்துடிப்புகளே

இன்றைய உலகத்துடிப்புகளாய்

அலை பரப்புவது நம்முள்

சிலிர்க்கின்றது.

கல் பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்றில்

ஒளிந்து கிடக்கும் 

ஐன்ஸ்டீனின் விஞ்ஞானம்

மனித சமுதாயத்துக்குள்ளும்

ஒரு "குவாண்டம் மெகானிக்ஸ்" ஆக‌

குமுறிக்கொண்டு குமிழிகள் பூப்பதை

நாம் பார்த்து திகிலடைவதை விட‌

வரலாற்றின் திருப்பங்களாக அவை

பரிணாமம் கொள்ளும்

மைல் கற்களை நாம் 

அடையாளப் படுத்தியாக வேண்டும்.

தமிழா!

கெட்ட போரின் இந்த‌

பிண நாற்றங்களை நாம்

துடைத்தெறிந்தாக வேண்டும்!


__________________________________________






வியாழன், 24 பிப்ரவரி, 2022

மயிலிறகுகள்

 

மயிலிறகுகள்

____________________________________________ருத்ரா



என் பேனாவின் கடைசிச் சொட்டை

அந்த வெள்ளைக்காகிதத்து 

பாலைவனத்தில் உதறினேன்..

ஒரு கவிதை என்று.

அதை மேய்வதற்கு ஒரு நொண்டி ஒட்டகம் கூட‌

இல்லை அந்த பாழ்வெளியில்.

"போக்கத்தவர்களே

போய்வாருங்கள் உங்கள்

கற்பனைப்பொதிகளின் அழுக்கு மூட்டைகளை

சுமந்து கொண்டு..."

என்றது அந்த வறண்ட தொண்டைக்காடுகளின்

கந்தல் குரல்கள்.

எரிந்து சாம்பலாகட்டும் அந்த‌

மயிலிறகுகள்.

என்னக்கென்ன?...


______________________________________________


ஒரு சைக்கோ

 ஒரு சைக்கோ

__________________________________ருத்ரா


"அட!

உனக்கு என் எழுத்துகள் அவ்வளவு ருசியா?

இந்தக் கழுதைகளுக்குத் தான்

ஒண்ணும் தெரியலை."

இந்தக்கழுதையை

அந்தக்கழுதை கட்டிக்கொண்டு

அழுதது.

அந்தக்கவிஞன் புனைபெயரை

இப்படித்தான் வைத்துக்கொண்டான்.

"ஒரு சைக்கோ"


________________________________________________________

பி.கு.

____________________________________

"உங்களுக்கு இப்படியும் ஒரு பெயர்

இருக்கிறதா?"

நக்கல் குரல் நன்றாகவே கேட்கிறது.

________________________________________


திங்கள், 21 பிப்ரவரி, 2022

கந்தல் நூற்றாண்டுகள்.

 கந்தல் நூற்றாண்டுகள்.


___________________________________________


ருத்ரா



இந்த ஊசல் கருத்துகளின் 


ஊளை நாற்றங்களில்


ஊறிப்போன சொற்களையா


மந்திரங்களாய் என் மீது 


கொப்புளிக்கின்றீர்கள்?


பிறப்பிலேயே நாங்கள்


பிரம்மம் ஆகிப்போனவர்கள்


என்று


பிம்பம் காட்டுபவர்களே.


ஆண்டவன் வீசுகின்ற‌


அக்கினி கேள்விகள் இது.


அக்கினி மீளேம் ப்ரோஹிதம்


என்று நெய்யை ஊற்றி

 

பொய்யை வளர்க்கும்


உங்கள் போலி உறுமல்கள் 


புகைந்து போகட்டும்.


பிறப்பின் 


மனித உயிர்ப்பின்


கல்லறைக்குள் இருந்து கொண்டு


மானிடத்தை கருவறுக்கும்


உங்கள் புராண பிணச்சுமைகளை


சொக்கப்பனை கொளுத்தவேண்டும்.


அது இது இல்லை


இது அது இல்லை


எதுவும் எதிலும் இல்லை


என்று சோமபான நொதிப்புகளில்


விழி செருகி


மொழி குழறி


செய்த உங்கள் பாஷ்யங்கள்


அறியாமையின் உச்சமாய்


எங்கோ அவிந்து கிடக்கின்றன.


சிந்து வெளி எனும் தமிழ் ஊற்றை


மறைத்து மறைத்து மாயம் காட்டும்


உங்கள் சூழ்ச்சிகளை


சுட்டெரிக்கும் அறிவுச்சுடர்


எங்கள் கைகளில்


கிளர்ந்து எழுகின்றது.


உங்கள் வர்ணக்குப்பைகளின் 


ஆதிக்க மிச்சங்கள் இதோ


சாம்பலாக எரிக்கப்பட இருக்கின்றன.


என்னருமைத் தமிழ் நெருப்பே.


வெளிச்சம் ஏற்று.


இந்த கந்தல் நூற்றாண்டுகள்


இனி தொலையட்டும்.


தொலையட்டும்.


தொலைந்தே ஒழியட்டும்.




______________________________________________



ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

உங்கள் வழியே உங்கள் விழி!

 உங்கள் வழியே உங்கள் விழி!

_______________________________________________

ருத்ரா




கனவு சாம்ராஜ்யத்தைக் கட்டுவதில்

இந்த காக்காய் இற‌க்கைகளையும்

முள்ளுக் குச்சிகளையும் கொண்டு

கூடவே 

ஆசைகளையும் ஏக்கங்களையும் 

அடைகாத்துக்கொண்டிருக்கும்

அன்பான இளைஞர்களே!

உங்கள் மூச்சுக்காற்றில்

ஒரு செம்புயலின் சிறகுகளையும்

செருகிக்கொள்ளுங்கள்.

நூற்றாண்டுகள் உங்கள் கண்ணெதிரே

வரலாற்றின் பின்னல்களை

சிலந்திகளாய் பின்னிக்கொண்டிருக்கின்றன.

சுதந்திரம் எனும் நெருப்பு கனல்வதை

உங்கள் வாழ்க்கை அவலங்கள்

"கலைடோஸ் கோப்" காட்டுவதையும்

உற்று நோக்குங்கள்.

எதிலிருந்து எதற்கு சுதந்திரம்?

எப்படி அது

இமைச்சிறகு உரிக்கும்?

அறிவின் இந்த சாவிக்கொத்துகள்

உங்கள் விரல் இடுக்கில்

சுழன்று கொண்டே இருக்கவேண்டும்.

புரியாத சத்தங்களின்

விளங்காத நுரைக்கோட்டைகளின்

அலம்பல்களின் 

குத்தாட்டங்களில்

குலைந்து போய் விடாதீர்கள்.

சமுதாய எழுச்சியும் மலர்ச்சியுமே

உங்கள் இலக்குகள்.

அதனை சீர்குலைக்கும்

போதைகளின் "லேசர்" வெளிச்சக்காடுகளில்

தொலைந்து போய் விடாதீர்கள்.

உங்கள் வழியே

உங்கள் விழி!

உங்கள் மைல்கற்களில்

உங்களை சோர்ந்து போகச்செய்யும்

இந்த சிதறல் மேகக்கூட்டங்களை

இந்த சில்லறைச்சத்தங்களை

சின்னா பின்னமாய்

சிதறடியுங்கள்.


_________________________________________________


சனி, 19 பிப்ரவரி, 2022

துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.

 துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.

_________________________________________

ருத்ரா



தனிமையில் தூக்கம் வராமல் 


புரண்டு கிடந்த அந்த நீண்ட நெடிய‌


பாழ்வெளி இரவுகளில்


குமிழிகள் பூக்கின்றன.


சொப்பனங்களைக்கொண்டு


சோறு சமைக்கும் விளையாட்டுகளில்


இந்த நாட்டின் பள்ளத்தாக்குகளில் எல்லாம்


படு குழிகளுக்குள் அடியில்


சித்தாந்தங்கள் சிலந்திக்கூடுகள்


கட்டுகின்றன.


தேடுவதற்கு என்ன இருக்கிறது


அறிவின் வெளிச்சம் தவிர!


பிரம்மத்தை தேடுங்கள் என்று


கூச்சல்கள் கேட்கின்றன்.


அது என்ன‌


இருட்டா? வெளிச்சமா?


இருட்டைக்கொண்டு இன்னொரு இருட்டைத்தேடும்


பாஷ்யங்களையும் பிரமாணங்களையும்


பந்தல் போட்டுவைத்துக்கொண்டு


பந்தி வைத்துக்கொண்டிருக்கிறோம்.


மனித உயிரின் வெளிச்சமும்


அதன் அறிவுத்திரட்சியும்


நமக்கு சுடரேந்திகளாக இருக்கும் போது


நமக்கு நாமே கோடரிகள் தூக்கும்


வர்ணப்பேய் பிசாசுகளை


தீயிட்டுக்கொளுத்துவோம்.


சட்டென்று கண்விழித்து சிலிர்த்துக்கொண்டேன்.


விழிப்பு நிலை விளிம்பு கட்டி


துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.


இது ஒரு வரலாற்றுக்கடலின் கொதிநிலை!


_____________________________________________






வியாழன், 17 பிப்ரவரி, 2022

பிரபஞ்சத்தின் சன்னலுக்கு வெளியே

 https://academic.oup.com/ptep/article/2019/4/043B06/5482208

___________________________________________________________________


பிரபஞ்சத்தின் சன்னலுக்கு வெளியே

___________________________________________________________ருத்ரா


இந்த பிரபஞ்சத்தின் கடைக்கோடி சன்னல் தான் கருந்துளை எனும் ப்ளாக் ஹோல்.இந்த சன்னலை எட்டிப்பார்ப்பதும் இயலாது.நம் மின்காந்தக்கதிர் இழையும் ஒளிக்கதிர் கொண்டு தான் அங்கு துழாவ முடியும்.

அப்படி ஊடுருவும்போது அந்த ஒளிக்கதிர் கருந்துளையால் விழுங்கப்பட்டு விடும்.அப்படி அந்த சன்னலைத்தாண்டிய பிரபஞ்சத்தை (இது நமதிலிருந்து வேறு பட்டது)யும் அதன் வடிவகணிதத்தையும் கணிக்கும் ஒரு நுட்ப சமன்பாடு மூலம் துருவிப்பார்க்கும் அந்த ஆச்சரியம் நிறைந்த கண்கள் நம் விஞ்ஞானிகளின் மூளைச்செதில்களின் நியூரான்களுக்கு உண்டு.அதைப்பற்றிய கட்டுரையே இது.


நம் பிரபஞ்சம் இப்போது அதிர்விழையக்கோட்பாட்டால் (ஸ்ட்ரிங் தியரி) அணுகப்படுகிறது.நம் அடிப்படை ஆற்றல்களில் ஈர்ப்பை தவிர மற்ற மூன்றின் அதாவது மின்காந்தம்,வலுவற்ற ஆற்றல்,மற்றும் வலுமிகு அணு ஆற்றல் இவைகளின் "ஒன்றிய நிலைப்பாடு"(யுனிஃபிகேஷன்) எனும் இந்த நுண்மாண்னுழைபுலம் புகுந்து நம்மை நம்மை நம்மீது நாமே ஒளிபாய்ச்சிக்கொள்வோம்.இந்த ஒளிவீச்சு எனும் ப்ரொஜெக்டிவிஸம் மட்டுமே நம்மை காக்க இயலும்.

__________________________________________________


_____________________________________________________________________________I on

Comments on the Stress-Energy Tensor Operator in Curved Spacetime

Abstract:

 The technique based on a *-algebra of Wick products of field operators in curved spacetime, in the local covariant version proposed by Hollands and Wald, is strightforwardly generalized in order to define the stress-energy tensor operator in curved globally hyperbolic spacetimes. In particular, the locality and covariance requirement is generalized to Wick products of differentiated quantum fields. Within the proposed formalism, there is room to accomplish all of the physical requirements provided that known problems concerning the conservation of the stress-energy tensor are assumed to be related to the interface between the quantum and classical formalism. The proposed stress-energy tensor operator turns out to be conserved and reduces to the classical form if field operators are replaced by classical fields satisfying the equation of motion. The definition is based on the existence of convenient counterterms given by certain local Wick products of differentiated fields. These terms are independent from the arbitrary length scale (and any quantum state) and they classically vanish on solutions of the Klein-Gordon equation. Considering the averaged stress-energy tensor with respect to Hadamard quantum states, the presented definition turns out to be equivalent to an improved point-splitting renormalization procedure which makes use of the nonambiguous part of the Hadamard parametrix only that is determined by the local geometry and the parameters which appear in the Klein-Gordon operator. In particular, no extra added-by-hand term g αβQ and no arbitrary smooth part of the Hadamard parametrix (generated by some arbitrary smooth term ``ω 0 '') are involved. The averaged stress-energy tensor obtained by the point-splitting procedure also coincides with that found by employing the local ζ-function approach whenever that technique can be implemented.


_____________________________________________________

Comments on the Stress-Energy Tensor Operator in Curved Spacetime | SpringerLink


__________________________________________




In this paper, we have constructed the holographic space from the primary scalar field in a free massless O(n) vector model by a flow equation at the next-to-leading order in the 1/n expansion. We investigated some properties of the bulk theory by calculating the induced Einstein tensor in the 1/n expansion. After defining pre-geometric operators, we have calculated the VEV of the Einstein tensor operator at the NLO in the 1/n expansion. As a result, the NLO correction appeared in the VEV of the Einstein operator but not in the induced metric gAB⁠. We therefore regarded the NLO correction of the induced Einstein operator as the quantum correction to the cosmological constant from the dual gravity theory on AdS space, which is proposed as the free higher-spin theory [38]. We have also shown that the stress–energy tensor for the vacuum state is covariant and proportional to gAB⁠, thanks to the conformal symmetry of the boundary theory, which turns into the bulk isometry of the AdS space.


In our approach, the bulk AdS radial direction emerges as the smearing scale for the boundary CFT. It is important to clarify how to determine the whole structure of the bulk theory. The bulk stress–energy tensor corresponding to the vacuum state calculated in this paper may give a hint to constructing the bulk theory.


In this paper we computed the one-loop correction to the cosmological constant in the bulk theory, which is supposed to be the free higher-spin theory [38], from the dual free O(n) vector model in the proposed framework. On the other hand, one-loop tests of higher-spin/vector model duality have already appeared in Refs. [39,40] (see also Refs. [41–45]). Their intriguing result is that the logarithmic divergence in the one-loop correction to the free energy cancels for higher-spin gauge theories employing a standard zeta function regularization in accordance with the analysis of sphere partition functions of their dual vector models. In particular, it was confirmed that the finite part vanishes for a free higher-spin theory, with its scalar field obeying the standard boundary condition. In the flow equation approach, the one-loop correction to the cosmological constant, which presumably corresponds to that of the vacuum energy, is free from UV divergence without specifying any regularization scheme. This is because the computation of the one-loop correction reduces to the two-point function of the flowed field, which has no UV divergence by construction. Our result for the finite part correction to the cosmological constant for a free higher-spin theory does not vanish in any dimension. It is highly important to fill the gap between these results, which could be done by identifying a bulk local operator in the flow equation approach.


The next important step is to evaluate the bulk stress–energy tensor corresponding to excited states. Indeed, we can easily generalize the computation of the VEV for the Einstein operator presented in this paper to that of arbitrary states as follows. We consider a set of states {|O⟩} in CFT with the inner product ⟨O|O′⟩=δO,O′⁠, where the meaning of δO,O′ depends on the type of states. Then we evaluate the matrix element of the Einstein operator in the 1/n expansion by using the covariant perturbation given in Appendix A as

⟨O|G^AB|O′⟩==⟨O|GAB|O′⟩+⟨O|G˙AB|O′⟩+⟨O|G¨AB|O′⟩+⋯{GAB+⟨0|G¨AB|0⟩}δO,O′+⟨O|G˙AB|O′⟩+⟨O|G¨AB|O′⟩c+O(1n2),      

(5.1)

where ⟨O|X^|O′⟩c:=⟨O|X^|O′⟩−⟨0|X^|0⟩δO,O′ for an arbitrary operator X^⁠. As asserted in Sect. 3, we interpret the matrix element of the Einstein operator as the bulk stress–energy tensor through Eq. (3.1), which we may call the quantum Einstein equation. It is natural to interpret in this way that the corresponding bulk stress–energy tensor consists of the cosmological constant and the contribution from the matter field in the bulk:

TbulkAB=−ΛgmatAB+TmatAB,gmatAB:=⟨O|g^AB|O′⟩.

(5.2)

Notice that we have already calculated the first term in Eq. (5.1) as

GAB+⟨0|G¨AB|0⟩=−ΛgAB,Λ=−d(d−1)2L2Δ(1+d+4n)+⋯,

(5.3)

which represents the vacuum contribution. Therefore, the contribution of the matter field to the bulk stress–energy tensor is given by

TmatAB=⟨O|G˙AB|O′⟩+⟨O|G¨AB|O′⟩c+Λ⟨O|g^AB|O′⟩c.

(5.4)

It is very important to compute this bulk stress–energy tensor in the construction of the dual bulk theory beyond the vacuum or geometry level. We are currently calculating TmatAB , and will report the result elsewhere.


This program can be extended to the case of the λφ4 theory in three dimensions. In the previous investigation [46], while the induced metric describes the AdS4 space at the leading order, the next-to-leading-order corrections make the space asymptotically AdS only in the UV and IR limits with different radii. These two limits correspond to the asymptotically free UV fixed point and the Wilson–Fischer IR fixed point of the boundary theory, respectively. It would be interesting to investigate how the stress–energy tensor in the bulk behaves from UV to IR at the NLO. We expect that this behaves in a similar manner to the one computed from the corresponding solution for the dual bulk (higher-spin) theory.


We hope to report on the progress with these issues in the near future.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

"வேலன்டைன்"

 "வேலன்டைன்"

____________________________________ருத்ரா




காதல் விளையாட்டுக்கு

கொலைவாள் நீட்டுகின்ற‌

கொடிய மனம் படைத்தவர்களே!

பிரம்மம் என்றால் அதை

"கசாப்பு செய்தா

பார்க்கத்துடிக்கிறீர்கள்?"

அன்பு கசியும் உள்ளங்களில்

பளிங்கு போல் தெரிவதை 

சுக்கல் சுக்கலாக்கி 

சுக்கலாம்பரதர கந்தல் கூளங்களைக்கொண்டு

குப்பை மேடு ஆக்கும் 

நச்சு ஆட்டங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி..."

என்ன? காதலா?

வெறிக்கும்பல் மரணத்தீயைக் 

கொட்டிக்கவிழ்த்ததில்

பிரம்மம் கூட சாம்பலாய் 

எழும்பி புகைந்து போனது!


______________________________________________

எங்கே அந்த இடம்?

 எங்கே அந்த இடம்?

______________________________________



ஒளிந்து கொள்ள எங்கே இடம் தேடுவது?

குழந்தை கண்ணாமூச்சி விளையாட 

இடம் தேடியது.

கிடைத்த ஒரு இடத்தில் ஒண்டிக்கொண்டது.

"உஷ்! மூச்சு காட்டாதே!

அந்த பயல்கள் மந்திரம் சொல்லி 

என்னை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சத்தம் போட்டு காட்டிக்கொடுத்து விடாதே!

ஏற்கனவே ஒளிந்து கொண்டிருக்கும்

"கடவுள்" 

குழந்தையிடம் 

கையேந்திக்கொண்டிருந்தார்.


________________________________________

ருத்ரா