வியாழன், 20 ஜூலை, 2023

NIR technique of JWST

 

I have put a question on the above NIR technique forwhich "Bing" Chat bot gave the answer

____________________________________________________________________________

E Paramasivan.



Searching for: How the NIR technique of JWST did calculate present age of the Universe as 27 billion years instead of 15 billion years?

Generating answers for you…

அகழ்நானூறு 50"

 அகழ்நானூறு  50

.............................................................................

சொற்கீரன் 



கணைக்கால் நீடிக் கண்போல் பூத்த 

குவளை அலமரும் இலஞ்சி அஞ்சுனை 

நீருள் தீ விழித்தற்று நிழல் காட்டிய‌

நுதல் பிறையாள் நுடங்கு நுண் அலை

பரப்பிய பார்வையில் வீழ்ந்தனன் ஆங்கே

அடுக்கம் ஓங்கும் சிலம்பிய வெற்பன்.

முள்ளெயிற்று வாவல் நீள் சிறை ஆர்க்கும்

ஆரிடை தோய்ந்தோன் ஆறு இறந்த‌

அவிர்வெண் காட்சியும் அவளே சாலும்.

பஃறுளி படுத்த பரல் பொருது இறங்கும்

பளிக்கின் நீர் இழை அவள் விழியோரம்

இழிவது கண்டு இடி உமிழ் துன்பில்

இற்றவன் ஆங்கு சாய்ந்தே நொந்தான்.

ஒழி திரை வரித்த வெண் மணல் அன்ன‌

அவள் வெள்ளைச் சிரிப்பில் கோட்டு அத்தம்

குவியக் கடாஅத்து கடவுட் கல்முனை

எதிர் கலித்து வெல்லும் அவன் புல்லென் 

சொல்லின் உதிரா நின்ற‌ இறைச்சியில்

முதிரா நின்ற பொருளை உய்த்தவள்

காய்ந்தே காய்ந்தே நகுவாள் மன்.


____________________________________________________________

செவ்வாய், 18 ஜூலை, 2023

"பொய்மான் கரடு" (குவாண்டம்)





குவாண்டம் என்ற சொல் கணித இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு போதையேற்றும் சொல்.இது கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவலில் வரும் "பொய்மானைக்காட்டும்" நிழல் போன்றது.ஆர்வத்தோடு அந்த நிழலுக்குள் பாய்ந்தால் நிழலையும் பார்க்கமுடியாது மானையும் பார்க்கமுடியாது.அது போல் தான் பொசிஷன் (இடம்) மொமெண்டம் (உந்தம்) என்ற இரண்டும் குவாண்டத்தைக்காட்டுவது.





இது ஒரு சிந்தனை செறிந்து விளங்கும் கருத்தோட்டம்.இது கோட்பாடு ஆகி குவாண்டத்தை நன்கு படம் பிடிக்கிறது.இதனுள் நுழைந்தால் விஞ்ஞானிகளின் கணிதச்சமன்பாடுகள் நம்மை வியக்க வைக்கும்.





-------------------------------------------------------------------------------------------------------------


விண்வெளிக்குள் ஒரு நுண்வெளி

 0103214.pdf (arxiv.org)

பல்க் பிளாக் ஹோல் பற்றிய ஆராய்ச்சி இது.30 பக்கம்.


2208.07242.pdf (arxiv.org)

357 பக்க ஆராய்ச்சிக் கட்டுரை இது!!


--------------------------------------------------------------------------------------------



விண்வெளிக்குள் ஒரு நுண் வெளி

............................................................................................................

கல்லிடைக்குறிச்சி  இ பரமசிவன்  




திங்கள், 17 ஜூலை, 2023

துடிப்பின் இழை (ஸ்ட்ரிங் தியரி)

 




இந்த எலக்ட்ரானை எப்படி நாம் வடிவப்படுத்திக்கொள்வது என்ற முயற்சியில் அது ஒரு புள்ளி அல்லது வட்டம் அல்லது மேகம் போல  ஒரு புலத்தில் எங்காவது அசைந்து சுழன்று கொண்டிருக்கும் ஒரு துகள் என்று உருப்படுத்திக்கொண்டாம்.அப்போது  தான் இழை புலக்கோட்பாடு (ஸ்ட்ரிங் தியரி) நம் உதவிக்கு வந்தது."அது ஒரு துடிப்பின் இழை" என்று எடுத்துக்கொடுத்தது.

சொட்டு சொட்டாய் ..

 

சொட்டு சொட்டாய் ...

__________________________________________



சொட்டு சொட்டாய் உதிர்கிறது

நம்பிக்கையும் 

அவ நம்பிக்கையும்.

ராமர் கோயில் பளிங்குத்தூண்களை

புடைத்துக்கொண்டு நிற்கிறது.

உள் நிழல் 

புல் முளைத்து நின்ற‌

அந்த பழைய கட்டிடத்தை அல்லவா

காட்டுகிறது.

ஒரு கிரவுஞ்ச வதத்தின்

கண்ணீர் நெருப்பு தாளாமல்

வந்த இதிஹாசத்துள்

துயரக்கடல் அலையடிப்பது

எந்த வ‌சிஷ்டரின் ஞானக்கண்ணுக்குள்ளும்

அடைபடவில்லையே.

அடுத்த ஆட்சிக்கு இப்போதே

கட்டிடம் தயார் என்று

ஹோமக்குண்டங்கள் போல்

காத்திருக்கும் மண்டபத்துள்ளே

ஜனநாயகமே கருகி

அந்த ஆகுதியின் நெய்த்தீக்கொளுந்துகள்

ஆகாசம் வரை நாக்கு நீட்டி

சப்பு கொட்டிகொண்டிருக்கிறதே.

எதிர்ப்புக்குரல்கள்

கை கோர்த்து பலமாய்

மனித சங்கிலியாய் மறித்தபோதும்

சில பல ஊடகப்பிசாசுகள்

பேய்ச்சிரிப்புகள் செய்கின்றனவே  என்றும் 

நடுநிலையாக 

லேபிள் ஒட்டிய எந்திரங்கள்

இடறி நின்று 

கோரத்தனமாய்

கோரைப்பற்களை

கடகடத்துக்கொண்டு நிற்கின்றனவே  என்றும் 

மாமூல் கணினிகளுக்குள்

மாயாபஜார் திரைப்படங்கள்

மாமூலாய் ஓட்டப்பட்டு விடுமோ என்றும் 

கவலைகள் மொய்க்காமல் இல்லை.

ஒரு பொய்யை

ஆயிரம் அல்ல கோடி அல்ல‌

பில்லியன் பில்லியன் தடவைகள்

லைக்குகளாய் மாற்றி

குழப்பியடிக்கும்

குறுக்கு வழிகள் எங்களிடம்

எத்தனையோ எத்தனையோ என்று 

மார் தட்டும் மாஃபியா மல்லர்களின் 

சூழ்ச்சி  சித்தாந்தங்கள் 

சூதுகள் புரிகின்றன.

கிரேக்கத்து ட்ரோஜான் மரக்குதிரைகள் போல் 

இந்தக்குதிரை பேரங்கள் 

அஸ்வமேத யாகங்களின் ஊர்வலமாய்

உலா வருகின்றன.

சர்வாதிகாரத்தையே ஜனநாயகம் போல் 

உருட்டும் "மணி லாண்டரிங்"

நாடகங்களும் அரங்கேறுகின்றன.

மதமும் சாதியும் 

வஞ்சகச் சூறாவளியாய் வீசும்போது

தேர்தல் வரப்பு ஓரங்களின்

வெள்ளைச்சிறு பூக்கள்

சிதறிப்போகுமா?

சீற்றம் கொள்ளுமா?

காத்திருப்போம்.

வெற்றி நமதே.


__________________________________________

செங்கீரன்














MS CHAT BOT THEORIES (BING)

 

MS CHAT BOT THEORIES (BING)

_________________________________

17.07.23

Searching for: inflation model cosmology

Generating answers for you…

Searching for: event horizon dynamics primordial black hole

Generating answers for you…