புதன், 5 ஏப்ரல், 2023

(அகழ்நானூறு 34)

 


கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,

நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,

நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்

புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,

வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5

பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,

கால் என மருள, ஏறி, நூல் இயல்

கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்

வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!

ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை 10

ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,

அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி

முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,

எல்லை போகிய புல்லென் மாலை,

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், 15

கழி படர் உழந்த பனி வார் உண்கண்

நல் நிறம் பரந்த பசலையள்

மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.  



தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்

அகம் 234

__________________________________________________



அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்


எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________


திங்கள், 3 ஏப்ரல், 2023

குகைவழியே ஒரு குவாண்டம்

 அலைக்குள்ளே ஒரு பல்கலைக்கழகம்.

(வேவ் மெகானிக்ஸ்)

_______________________________________________________

இ பரமசிவன்


விசையியல் அல்லது நகர்ச்சியியல் என்பது மெகானிக்ஸ் என அழைக்கப்படுகிறது.நமக்கு கண்கண்ட விதத்தில் புறப்பொருள்கள் உண்டாக்கும் நகச்சியியல் என்பது மரபுமுறை நகர்ச்சியல் ஆகும்.(க்ளாசிகல் மெகானிக்ஸ்) அணுவிசை மற்றும் அணுக்கருத்துகளான எலக்ட்ரான் ப்ரோடான் நியூட்ரான் இவற்றின் நகர்ச்சியியலை நாம் கண்ணாலேயே பார்க்க முடியாது. இவை நுண்ணியல் நகர்ச்சியியல் ஆகும்.(மைக்ரோஸ்கோபிக் மெகானிக்ஸ்). இப்போது சிக்கல் உருவாகிறது.நேருக்கு நேர் கண்ட பொருள்களின் நகர்ச்சியியலை நாம் அளவு படுத்திக்கொள்ள சில கணித சூத்திரங்கள் வைத்திருக்கிறோம்.ஆனால் அந்த கண்ணுக்குத்தெரியாத எலக்ட்ரான் போன்ற மின்னணு நகர்ச்சியை அளவுக்குள் கொண்டுவருவது என்பது இயலாத காரியம்.ஆனாலும் அதை ஒரு "அளபடைக்குள்"(குவாண்டம்) கொண்டுவந்தே ஆகவேண்டும்.அப்போது தான் நகர்ச்சியியல் பற்றிய முழுமையான அறிவு நமக்கு புலப்படும்.இந்த நுண்மை அளபடை நகர்ச்சியியலே குவாண்டம் மெகானிக்ஸ் எனப்படுகிறது. இதை "திறந்திடு சீசேம்" என்று

ஒரு அரபுக்கதை போல இதற்கு ஒரு அருமையான சமன்பாட்டை 1926ல் கண்டுபிடித்தார் ஆஸ்டிரிய நாட்டைச்சேர்ந்த "எர்வின் ஸ்க்ரோடிங்கர்" எனபவர்.அந்த குகை வழி குவாண்டம் இயல் பற்றி அறிய நாமும்

அந்த சூத்திரத்துள் நுழைவோம்.


ஜிகினா கூட்டில்....

 


இந்தி ஜிகினா கூட்டில்

கடைசியாக 

சிறகடித்தாலும்

அந்த மயிலு மயிலு தான்.

குயிலு குயிலு தான்.

குழையும் தமிழின் 

அந்த‌ குமிழ்சிரிப்பில் 

கொட்டிக்கிடக்கிறது 

எத்தனையோ பிரபஞ்சங்கள்.

_________________________________________

ருத்ரா

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 33

 அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்

பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்

அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்

சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;

நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5

ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்

நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய

வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் 10

சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று

அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,

பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,



அகழ்நானூறு

____________________________________________________

சொற்கீரன்.


பிறைமருள வாங்கு வெண்கோட்டு வேழம்

வேங்கை வெள்வீ அடர்சொரி மூழ்க‌

அறைபறை பரற்கண் வெள்ளிய ஊர் 

அத்த நீளிடை முள் தூங்கு இலையின் 

இலவம் திரித்த நச்சின் அரவம் 

வெரீஇயத் தந்த வெள்நள் ஆறு

கவலை உறுத்தும் ஊசிநுண்மணல்

உழந்தும் உலையா வாங்கமை வெற்பன்

தும்பி ஊது தூம்பின் நுண்கால் நறவென‌

அவள் நகை கொள்ளை இன்புறுவான்மன்

மற்று எவன் செயும் தீ ஊழ் நீடு இப்பாழாறு.


____________________________________________



குறிப்புரை

______________________________________

மாமூலனார் எனும் நம் ஒப்பற்ற சங்கப்புலவர் பாடிய அகநானூற்றுப்பாடலில் (115)

"பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை," என்று தலைவன் பொருள்தேடி செல்லும் 

வழியில் நிலாப்பிறை போன்ற வளைந்த் கொம்பு உடைய யானை இடைமறித்து அச்சம் காட்டுவதாகவும் 





சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, 15

நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,

நம் நீத்து உறையும் பொருட்பிணிக்

கூடாமையின், நீடியோரே.



பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகம்...115

விடுதலை

 



விடுதலை

_____________________________________________‍

ருத்ரா



அந்த உடுக்குச்சத்தங்களிலிருந்தும்

அந்த  பாஞ்ச சன்ய சங்கு முழக்கங்களிலிருந்தும்

சோமக்கள் எப்படி காய்ச்சுவது

அதற்கு எப்படி தீ மூட்டுவது

அதில் எப்படி மாமிசங்களை வறுத்து தின்பது

அந்த போதை மண்டைக்குள் ஏறி

கிலுகிலுப்பை ஆட்டிச்சொல்வதையெல்லாம்

எப்படி வானத்தின் உளறல்கள் என்று கூறி

அதை தெய்வங்களாக்கி

மீண்டும் மீண்டும் நெய் ஊற்றி 

தீ வளர்த்து தீ வளர்த்து

புலம்பித்தீர்த்ததை எல்லாம்

வைத்து பூதம் காட்டி வேதம் காட்டி

அங்கு மண்ணின் மைந்தர்களுக்கு

வர்ண வர்ணமாய்

சங்கிலி மாட்டி விலங்கு பூட்டி

அதை இதிகாச புராணங்கள் ஆக்கி...

பயம் வளர்த்த தீயின் ஆரண்யங்களில்

அறியாமையின் இருட்டுக்கு

ஆயிரம் சித்திரங்கள் தீட்டி தீட்டி..

இன்னும்

அந்த சிக்கிமுக்கிக்கல்லில் 

சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்

விடுதலைப்பொறியின்

சிறகுகளை பறக்கவிடாமல்...

பாழ்பட்டுக்கிடக்கும் இந்த

தேசத்தில்

அறிவின் விடுதலை என்ற சொல்

ஒலிப்பதே மகா மகா பாவம்

என்று மண்ணொடு மண்ணாய் 

மக்கிக்கொண்டிப்பதற்குத்தான்

இங்கு மக்கள் என்று பெயரா?


________________________________________________

மெய் எண் கணிதம்


மெய் எண் கணிதம்

______________________


அறிவின் நுழைவாசல் இது.

ஒன்று இரண்டு மூன்று என்று

உன் விரல்கள் உன் முன் 

மெய்ப்படவே நீளும்.

மனதுக்குள் விரல்களை

முளைக்க வைத்தும் நீ

எண்ணிக்கையை தொடரலாம்.

அப்போதும் அது மனதுக்குள்

மெய்ப்பட்டு நிற்கிறது என்று நீ

உணர்கிறாய். 

சனி, 1 ஏப்ரல், 2023

சூரி

 சூரி

_____________________________________________

ருத்ரா





இருபத்தி அஞ்சு பூரி

ஒரே வாயில் தின்று விட்டு

இன்னொரு இருபத்தி அஞ்சை

"தட்டில் போடுய்யா"

என்று அசுர சாதனை செய்த

காமெடி கிங்க்

நம் நெஞ்சையெல்லாம் 

பிழிந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறனின் கெமிஸ்ட்ரியில்

இந்த படைப்பு உலகமே

ஒரு எரிமலையை வெற்றிலை போட்டு

குதப்பிக்கொண்டு

கொப்புளிக்கத்தயாராக இருக்கிறது.

நாப்பது அம்பதுகளில்

இந்தியாவின் சுதந்திர மூச்சு

நசுக்கப்பட்டுக்கொண்டே தான்

வெள்ளைக்காரனின் பந்தாவுக்கு

மூவர்ணம் காட்டிக்கொண்டிருந்தது.

அதற்குள்ளேயே இருந்த நான்குவர்ணம் கூட‌

பின்னணியில் நாகப்பாம்பின் நச்சுவை

பீறிட்டுக்கொண்டிருந்தது.

அப்பாடா!

கம்யூனிசத்தைக்கூட‌

இந்த ஜெயமோகன் வந்து படம் காட்டும்

அளவுக்கு ராமராஜ்யம் வந்து

கவரி வீசும் கதையா?

இல்லை..இல்லை இல்லவே இல்லை.

பொய்மான்களை புரியவைத்துவிட்டார்

இயக்குநர்.

ராமனின் அம்பு எல்லாம் யாருக்காக என்றும்

புரியவைத்துவிட்டார்.

அது சீதா பிராட்டியாரின் நெஞ்சை 

அல்லவா துளைத்தது.

அது ராவணனுக்காக‌  இல்லை என்பதும்

புரிந்து போயிற்று.

மக்கள் சபை முடக்கம் என்பதும்

புரியாத மாதிரி புரியும் வசிஷ்ட சூத்திரம் தான்.

சூரி என்றால் 

வெறும் பூரி இல்லை

என்று

வெற்றிமாறன் ஒரு புது சிகரம் தொட்டுக்

காட்டி நிற்கிறார்.

ஒரு படைப்பாளி

ஆயிரம் போராளிகளின் பாசறை

என்று 

நிமிர்ந்து நிற்கிறார்.


________________________________________________________