செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

யாதும் ஊரே யாதும் தமிழே(1)

ருத்ரா இ.பரமசிவன் 
Feb 24 (12 hours ago)




imagem não exibida



யாதும் ஊரே யாதும் தமிழே(1)
===================================ருத்ரா


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.


கடந்த மாதங்களில் ஜனவரி முதல் தேதி 2014 ல் அமெரிக்காவின் "கள்ளிக்காட்டுக்குள்" (ஆம் அரிஸோனா மாநிலம் அன்டிலோப் கேன்யான்)பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.மெய்சிலிரிக்கும் பயணம்.அது
வைரமுத்து போன்றோர்களுக்கு ஆயிரம் கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கான கற்பனையை அள்ளி வழங்கியிருக்கும்.எனக்கு கல்லூரி நாட்களிலேயே
இந்த இலக்கிய கனவு உண்டு.கவிமேதை டி.எஸ் எலியட் எழுதிய "தி ஹாலோமென்"என்ற மனமாயைக்கவிதை இன்னும் எனக்குள் ஒரு மனக்குகையை நீளமாக வெட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

ப்ரிக்லி பியர் ப்ரிக்லி பியர்
ஹியர் வி கோ ரவுண்ட் தெ ப்ரிக்லி பியர்
ஃப்ரம் ஃபைவ் ஓ க்ளாக் இன் தெ மார்னிங்..

"முள்ளுக்காடு.எங்கு பார்த்தாலும் முள்ளுக்காடு.
அது என் உடலில் தன் முள் உரசல்களால்
அருவருக்கும் படியான ஒரு இன்பக்கிளர்ச்சிகளை
கம்பளிப்பூச்சிகள் போல் ஊற விட்டுக்கொண்டிருக்கிறது.
ஞானிகள் அப்படித்தான் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த முட்கள் ஒரு பிருந்தாவனத்தின்
வருடல்களா? தீண்டல்களா?
அந்த மாயத்தொடுவிரல்கள் 
கொடுவிரல்களா? பொன் விரல்களா?
அர்த்தம் சொல்லி அகராதி புரட்டியா நான் பிறந்தேன்?
வெள்ளனே வானம் வயிறு கீறிய‌
அந்த இளம்பொழுதான‌
ஐந்து மணியிலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அல்லது
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
துப்பாக்க்கியை வெடித்து ஸ்டார்ட் சொன்ன‌
அதே துப்பாக்கி தான் என் மார்புக்குள்
குண்டு துளைக்கப்போகிறதா?..தெரியவில்லை?
வாழ்க்கையை அல்லது
எல்லா அர்த்தங்களின் அர்த்தத்தை 
தேடி தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.."

இந்த ஆளுயரக்கள்ளியில் நான்
அந்தக்கவிஞனை புணர்ந்து அல்லது உணர்ந்து
எழுதிய வரிகள் இவை.

வள்ளுவன் சொன்னானே

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார் பெறின்"

இந்த தமிழ் அதோ அந்த கள்ளியில் பால் துளிகளை சொட்டுகிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக