வியாழன், 2 மார்ச், 2023

தூய தமிழர்கள்

 பிராமணர்கள் தான் தூய தமிழர்கள் என்றும் அவர்கள் தான் மற்ற மொழிக்காட்டுவாசிகளை (நீசர்கள் அல்லது மிலேச்சர்கள்) தமிழர்களாக ஆக்கினார்கள் என்றும் ஒரு கருத்தை ஒரு சங்கி அன்பர் விதைத்திருந்தார். அப்படியென்றால் சமஸ்கிருதம் எனும் செயற்கை மொழியையும் அதன் சார்வாய் வந்த இந்தி மொழியையும ஏன் தேசிய மொழி என்று திணிக்க வேண்டும்.இந்தியாவின் மூல மொழியான தமிழைத்தானே அவர்கள உயர்த்தி இருக்கவேண்டும்.அதை விட்டு தமிழை கைபர் போலன் கண்வாய் வழியே வந்ததாய் வாய் கூசாமல் பொய் உரைக்கவேண்டும்.தமிழை வைத்து திராவிடத்தை தாக்குவதும் ஆரியத்தை பெயர்குறிப்பிடாமலேயே தமிழ் போல் காட்டி இந்துத்துவாவை இடையிலே செருகி அதைக்காப்பதே நாம் கடைப்பிடிக்கும் தர்மம் என்றும் அதன் மூலம் பிராமணர்கள் கடவுளுக்கு சமம் என்றும் மற்ற சாதிகள் எல்லாம் அவர்களுக்கு அடி பணிவதே வைதிக தர்மம் என்றும் ஒரு "குழப்பியல்"வாதம் பேசுபவர்கள் தான் இந்த பிராமண எதிர்ப்பு வாதத்தை தகர்க்கவந்த வீரர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பிராமணர்கள் தான் தூய தமிழர்கள் என்றால் இந்த "உயர் சாதி அடையாள் நூல்" அவர்கள் உடம்பில் உறுத்திக்கொண்டு அல்லவா இருக்கவேண்டும்.அதை அவர்களே மனம் உவந்து நீக்கியிருக்க வேண்டும். மகாகவி பாரதியார் இதை இன்னொரு கோணத்தில் முயன்றார்.அதாவது கீழ் சாதியையும் உயர் சாதி ஆக்கிக்காட்டுவது.அதற்கு ஆதிக்க பிராமணர்கள் தடையாய் இருந்தார்களே.இந்த அடையாளங்களை அகற்றிவிட்டு எல்லோரும் தமிழர் என்று முரசு கொட்டுவோமே பாரதியின் கனவுப்படி.இதையே "நாக்பூர்"ஆட்சிக்குழு அஜெண்டா ஆக்க வேண்டியது தானே.இதையெல்லாம் நினைப்பதே மகாபாவம் என்று எல்லா பெரியவாக்களும் யாகம் வளர்ப்பது மட்டும்தானே இந்துத்துவா.இந்த போலி மனப்பான்மைகள் தவிடு பொடியாக்க வந்ததே திராவிட(த்ரமிள  அல்லது தமிழ் மாடல்) ஆகும். இதனோடு சமஸ்கிருத இந்தி ஆதிக்கங்கள் தான் குழப்பம் செய்கின்றன.இது தவிர்த்த இந்திய மூல மொழிகள் எல்லாம் தமிழ் வழிவந்தவையே.இந்திய நாகரிகத்தை சமஸ்கிருதப்படுத்த‌அவர்கள் செய்யும் தந்திரங்களை முறியடிக்கும் ஒரே மொழி இப்போது தமிழ் மொழியே.ஏனெனில் இது ஒன்று தான் தன் மூல வடிவத்தில் அதாவது நான்கு வர்க்க ஒலிப்புகள் எனும் சமஸ்கிருத வடிவம் இல்லாமல்) இருக்கிறது.

____________________________________________________________________ருத்ரா








புதன், 1 மார்ச், 2023

பென்சில் ஓவியம்

Jugal Sarkar | Kolkata | Facebook இந்த இணைப்புக்கு மிக மிக "நன்றி"

1 நபர் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

இந்த பென்சில் ஓவியம்

என்ன சொல்கிறது?

கூந்தல் கடல் அலைகள்

எதோ கருப்பு இருளை

சிலிர்க்கின்றன.

கண்களிலும் 

தளும்பும் ஏழுகடல்களின் பிஞ்சு.

இதழில்

அழுத்தமாய் ஒரு சிவப்பு.

நெற்றியில் 

அசங்கலாய் ஒரு சிவப்பு.

வகிடு உச்சியில்

வக்கிரமாய் ஒரு சிவப்பு.

பெண்ணே நீ யார்?

சிதைக்குப்போகும் சிற்பமா?

இல்லை 

ஒட்டு மொத்தமாய் எல்லாவறையும்

சிதைக்கும் சிற்பமா?

முதலில் நீ

எரித்து சாம்பலாக்க வேண்டிய வரிகள்

"ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே"

என்ற அக்கிரம ஆகமங்கள்.

ஆம்.

இப்போதைய தேவை

எல்லா ஆண் ஆதிக்கங்களையும் 

அழிக்கும் பெண்ணே தான்.

சிவனிடமிருந்து பிடுங்கி

அந்த உடுக்கையை நீ

அதிர அதிர குலுக்கு.

இவர்களின் சீஸ்மோகிராஃப்

இதற்கு

என்ன பரிமாணங்களையும் 

கொடுத்துக்கொள்ளட்டும்.

பூமிக்குள் புதைந்து போன‌

சீதைகளைவிட‌

இந்த புழுத்து நெளியும் பூமியை

பந்தாடும்

சீதா மூர்த்திகளே தேவை.

உன் சினத்தீ

இந்த வர்ண வன்மங்களை

சாம்பலாக்கட்டும்.

ஆம்.

சாம்பலாக்கட்டும்.

_____________________________________________

ருத்ரா

அகழ்நானூறு 25

 

அகழ்நானூறு 25

______________________________________________

சொற்கீரன்



பாலை வெஞ்சுரம் பாய்திரை அன்ன‌

பரிந்தே ஏகும் நின் பொருள்நசைசெல்வன்

பாலின் வாலொளி எழுதரு மதியம்

கடற்கண்டாங்கு பொங்கும் நின்முகம்

அருவியின் ஆர்த்து அவனை வான் தோய்

மாவலை எழுதகை செய்ய நகைத்தாய்.

சிமயக்குன்றத்து பல் ஒலி தேஅத்து

வழங்கொலி யெல்லாம் தமிழெனக்கண்டு

தேடா செல்வமென செந்தமிழ் ஆண்டு

செவ்விய நம்மொழி தன்னோடு சேர்த்துக்

கொணர்தகை மள்ளன் தேயா மனத்தில்

நகர் நகர் நீங்கி நாகரி மொழியை நம்

இயல்மொழி ஆக்கி பல் மொழித்திரவியம்

உலகோர் வியக்க படைத்தவன் வந்தான்.

அற்றைத்திங்களில் நின் ஆவியும் கலித்து 

அகவல் செய்தக்கால் மஞ்ஞை இனநிரை

மின்னல் மழையென பீலிகள்பெய்திடும்

மகிழ்முன்றில் அணிலாடும் மெல் ஒலி

கீறித்தரும் இன்செய்தி கேள் மெல்லிழையே!


________________________________________________________________



செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

(ஒரு இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியனின் நினைவு ஏந்தல்)

 


2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்


தோழர்  சரோஜ் சௌத்திரி.

__________________________________________‍‍

செங்கீரன்.



(ஒரு இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியனின் நினைவு ஏந்தல்)


வெள்ளைக்காலர்களின்

வெளிறிய அறிவு வனத்தில்

சிவப்புச் சிந்தனையின்

கதிர்வீச்சுக்கு

கால் கோள் ஊன்றிய‌

கல்பாக்கமே! உன்

சொல் பாக்கம் கண்டவர்கள்

வரலாற்றுத்

தலையணைப்புத்தகங்களையெல்லாம்

தள்ளி ஏறிந்து விட்டு

எழுச்சி கொண்டார்கள்.

அது வரை

அது ஒரு முரட்டு புத்தகம் என்று

மார்க்சின் நூலை விட்டு

ஒதுங்கி நின்றவர்கள்

மனித வரலாற்றுக்குள் துடித்த‌

ஈரமான வேர்வை ரோஜாவின்

எரிமலை மகரந்தங்களையும்

தம் மீது தூவிக்கொண்டார்கள்.

உன் பேருரைகள் சொற்பிரளயங்கள்

அத்தன்மையது.

ஆயுள் காப்பீடு எனும்

வெறும் மரண ஃபண்டு ஆபீஸ்கள்

இந்தியாவின் பொருளாதார வேர்களைக்

காக்கும் உயிரோட்டமான இயக்கம்

தாங்கும் கழகம் எனக் கண்டனர்.

உழைப்பின் நெருப்பு

கரத்துக்கு மட்டும் அல்ல‌

கருத்திற்கு வேர்வை பாய்ச்சும்

எனும் அறிவார்ந்த‌

பாட்டாளி இயக்கம்

பாரத மக்களின் நாடித்துடிப்புகளாய்

பாய்ந்தது

உன் சீரிய தொண்டினால் தான்.

பொருளாதார வல்லுநர்கள்

பொருளின் விலை என்றால்

மாயச்சந்தையின் வீங்கும் வற்றும்

மதிப்பு என்று

பலூன்கள் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

மார்ச்சின் சிந்தனையே அது

பாட்டாளிகளின் வேர்வை மூச்சு என்றது.

ஓ!அறிவு சிற்பியே!

உன் சிந்தனைச்செதுக்கல்களில்

இந்த பாரதப்பழம்பெரும் பாறாங்கல்

மானிட ஆற்றலின் மலர் முகத்தை...

அந்த பாட்டாளியின்

கழுத்து நரம்பு கை நரம்பு புடைப்புகளில்

ஊறும் பாரத வளர்ச்சியின் ஒளியை..

தரிசித்து நின்றோம்.

கல்கத்தாவில் அன்று அந்த‌

எழுச்சி மிகு

"இலாக்கோ விஜில்"

உன் சுவடு பற்றிக்கொடுத்த‌

ஒரு சிந்தனைப்போராட்ட வடிவம்.

மறக்க முடிய நாட்கள்

உன் சிவந்த வானத்தின் 

வீர விளிம்பு அது.

உன் பெயரே

எங்களுக்கு

இன்னும் இன்னும் ஒரு

புதிய யுகம்!

வெல்க

அச்செஞ்சுடரொளி!

________________________________________________



தமிழ்ப்புயல்





அந்த ஒலிவாங்கி

என்ன பேறு பெற்றதோ?

கலைஞர் கடல் தமிழ்

அதில் அலைவிரிப்பதை

தமிழர்களின் சூரியன்

அங்கு கரு தரிப்பதை

எவரும்

மறுக்க இயலுமோ?

தடுக்க இயலுமோ?

ஸ்டாலின் எனும்

இரும்புத்தமிழன்

மக்கள் மனங்களில்

எப்போதும்

கரும்புத்தமிழன்!

பஃறுளியாறுகளும்

பல்மலை அடுக்கங்களும்

எப்போதும் எதிரொலிக்கட்டும்

உன் தமிழை!

__________________________________________‍

கவிஞர் சொற்கீரன்


 

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்


ஓம்

 ஓம்

_________________________________________


ஓம் என்பது தூய தமிழ் ஒலிப்பு.

அகரம் உகரம் மகரம் சேர்ந்ததாய்

சமஸ்கிருதம் உருட்டுவதெல்லாம்

தமிழ் ஒலிப்புகளின் 

பகடைக்காய்களைத்தான்.

ஈழத்தமிழர்கள் நாம் ஆம் என்பதை

ஓம் என்பார்கள்.

இது ஒத்திசைவு (ஒத்துப்போகுதல்)

ஆகும்.

இதன் ஆங்கிலமே 

சிம்மெட்ரி ...சூப்பர் சிம்மெட்ரி எல்லாம்.

பிரபஞ்சம் எனும் 

விண்ணியல் தமிழ் வேர்பிடித்த‌

மண்ணியலே அன்றி

வேறொன்றில்லை.


_______________________________________ருத்ரா

the boulder

 


the boulder fell on my face

i mean that morn with sunbeams.

why not it is a sweet and mellow dawn?

'cause the vulturous wings and flights

with  its scarlet claws pierce 

into all the norms and forms.

the life bleeds on the streets

their gods pick the flesh and all

the core and mantle of hope.

the draconian gestures sway dooms.

the scriptures like deadly black sea

compress all a sigh 

all a peep of a promise and primroses..

Thwart it ! or you will be squeezed 

and all your silken threads and wings.

you are not those humble and meek

larvae to be strewn viscera of lumpy fluid

in which the fear and forlorn 

is always glorified to a "franchise".

_______________________________________

ruthraa