செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

"ஜெய்ஹிந்த்"

 


வற்றிய நம் எலும்புகள் கூட‌

நம் தேசம் மதிக்கப்படவேண்டிய‌

தருணங்களில்

விறைத்துக்கொண்டு

மரியாதையைக் காட்டும் 

பீரங்கிக்குண்டுகள் ஆகிவிடுகின்றன.

என் மொழி எல்லையில் 

என் தமிழ் கூட இப்படித்தான் முழங்குகிறது.

"ஜெய்ஹிந்த்"

_____________________________________________

ருத்ரா

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

Frozen Shoulder Exercises

 (16) 7 Frozen Shoulder Exercises to Regain Function - YouTube

உலக யானைகள் தினம்

 உலக யானைகள் தினம்

______________________________

ருத்ரா


யானைகள் என்றால் 

சர்க்கஸும் சேர்ந்தே தான்

நினைவுக்கு வருகிறது.

மனிதர்கள் 

அவற்றிற்கு தோழர்கள்

என்று ஆகி விட்ட பிறகு

இந்த "துன்புறுத்தல்"

எங்கிருந்து வந்தது?

அந்த இரண்டு யானைக்குட்டிகள்

வெறும் "ஆஸ்கார்" விருதுக்காகவா

நம் கண்களில் அந்த‌

அருவியை இயற்கையின் இதயமாக்கி

பெருகச்செய்தன?

என்ன செய்வது?

வர்த்தகத்தனமான கழுகுகள் மேலே

ஆலவட்டம் போடும்போது

இந்த சட்டங்கள் தான்

அவற்றைப்பாதுகாக்கின்றன.

நம் சித்தாந்தத்தை நாமங்களாக்கி

அவற்றை அலங்கரிப்பதாக 

நாம் பூரித்துக்கொள்கிறோம்.

ஒரு காதில் சங்கு.

இன்னொரு காதில் சக்கரம்.

கொசுவையும் ஈக்களையும்

விரட்டத்தான் அந்த காதுகள் 

விரைகின்றன.

பாஞ்சஜன்யத்து பக்தியை

அது அறிந்திருக்கவில்லை.

நாம் வட்டமாய் கூடி 

உற்சாகக்குரல் எழுப்பும்போது

அவைகளும் 

களிப்பின் பிளிறல்களில்

நம்மிடம் ஏதோ பேசுகின்றன.

ஆம்.

யானைக்குள் மனிதனும்

மனிதனுக்குள் யானையும் 

புகுந்து கொள்ளும்போது

இயற்கை இழைந்த மானிடம் அங்கே

கசியத்தான் செய்கிறது.

நம் வக்கிரங்களை அவற்றின்

புராணங்கள் எனும் 

சங்கிலிகளால் பிணைக்கவேண்டிய‌

அவசியம் இல்லை.

அந்த பாரதி என்னும் நேசக்கவிஞன்

விளாம்பழத்தோடு 

கணேசா என்று கூப்பிட்டபோது

அந்த மொழி எப்படி அதற்கு

"மிலேச்சமாய்" போனது?

உயிரின் பரிணாமம் என்பதும் கூட‌

ஒரு நுட்பமான கணிதம்.

நம் பக்திப்பரவசம் அதற்கு ஒரு 

பாறாங்கல் என்பது

ஒரு பிரபஞ்சப்புதிர் ஆகும்.


___________________________________________________





76 வது ஆண்டாய்...

 76 வது ஆண்டாய்...

_______________________________


சற்றும் மனம் தளராத‌

விக்கிரமாதித்தன் அந்த‌

நாலு வர்ண வேதாளத்தை

வாளால் வீழ்த்தினான்.

மீண்டும் அந்த வேதாளம்

மூவர்ணத்தின் தோளில்

தொற்றிக்கொண்டது.


____________________________________

ருத்ரா

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கொடி

 


"ஜெய்ஹிந்த்!"

__________________________________


மூச்சு வாங்குகிறது.

இத்தனை வருடமாய் இந்த‌

நான்கு வர்ணச்சுமை 

தாங்க முடியவில்லை.

எங்கே நம் மூன்று வர்ணம்?


_________________________________

ருத்ரா


கொடி

___________________________


76 வருடங்களாக 

வெளுத்துப்பார்த்தாச்சு.

மூவர்ணத்தை ஒட்டிய‌

நான்கு வர்ண அழுக்கு 

போகவே இல்லை.

_______________________________

ருத்ரா

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நம் கலைஞர்

 



நம் கலைஞர்

______________________________

சொற்கீரன்.



பெயர் மாற்றிக்கொண்ட‌

"பரிதிமாற்கலைஞரை"

அந்த பெயரின் தமிழ் வெளிச்சத்தை

தன் மீது எப்போதும்

சந்தனமாக பூசிக்கொண்டவர் 

நம் கலைஞர்.

சினிமா வசனம் என்ற‌

உரைக்காடுகளில்

பூ பூவாய் பூத்துக்கிளர்ந்து

தமிழ் இலக்கியத்தை சிகரம் ஏற்றினார்.

சமுதாயக்கனலின்

ஒரு சமத்துவ ஏக்கத்தை

மண்ணைக்குவித்து ஆசனமாக்கி

உயர்த்திக்கொண்டு 

சினிமா பார்க்கிற அந்த‌

கிராமத்து சிம்னி விளக்குகளுக்குள்

சூரியப்பிழம்பு ஆக்கினார்.

சங்கத்தமிழின் ஓலைச்சுவடிக்குள்ளிருந்து

தொல் தமிழின் "ஃபாசில்"செதில்களை வைத்து

தமிழனின் வரலாற்றுப்படுகையில்

சிவப்புக்கம்பளம் விரித்தார்.

உலகமே உற்றுப்பார்த்தது.

ஏன்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய‌

அந்த ராட்சத பல்லி இனங்களின்

உறுமல்களுக்குள்ளும்  செருமல்களுக்குள்ளூம்

அகநானூற்றுக் கலித்தொகைகளின்

ஊடல் கூடல் ஒலிப்பிஞ்சுகள் 

நமக்கு கேட்பதாக அல்லவா

இவர் பேனா நம்மை நிமிர வைத்திருக்கிறது.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி

அவரை அவரே முகம்பார்த்துக்கொள்ள‌

எழுதிய கண்ணாடி பதிப்பு அல்ல.

மூன்று கால தோலுரிப்பில்

தமிழனின் காலம் வெல்லும்

வெற்றிப்பட்டையங்களின் கதிர்ப்பிளிறல்

முழக்கமிடும் வைரப்பதிப்புகள் அவை.

எச்சரிக்கை கொள் தமிழா!

இந்த வர்ணப்பேய்கள்

அய்யன் வள்ளுவனையும்

ஏதோ ஒரு அத்ரி ரிஷியாக்கி

வர்ணம் பூசி ஆபாசப்படுத்திவிடும்

அபாயம் இங்கு

ஆலவட்டம் போடுவதை

தமிழா உணர்ந்து கொள்.

அவர் விட்டுப்போன மூச்சுக்காற்றைப்

பிளந்து பார்

தமிழின் நெருப்புப்புயல் 

கனன்று கொண்டிருப்பதை ஒரு ஓர்மையுடன்

உற்று நோக்குவாய்.

கலைஞர் எனும் 

எழுத்துக்குள் கோடி நூலகங்கள்

கால் கோள் விழா நடத்திக்கொண்டிருக்கின்றன.

கலைஞரின் சிந்தனைச்சிதறலிலிருந்து

நாம் உறுதியாக சேமித்து விடுவோம்

நம் "சிந்து வெளி"களை.

கலர் வளைய கனவுக்குள்

வீழ்ந்து படாமல்

நாம் விழித்து நிற்போம்.

பிடிப்புடன் நிற்போம்

அந்த சூரிய விழுதுகளே

நம் கலஞர்!


________________________________________________________

அந்த பனைமரம்

 


அதோ

அந்த பனைமரம் 

மிக நெட்டையாக இருக்கிறது.

அதன் ஓலைச்சிலுப்புகள்

காற்றோடு அளைந்து அளைந்து

ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது.

எனக்கும் ஆசை தான்

அதனோடு அரட்டை அடிக்க.

அது கேட்கிறதோ இல்லையோ

நான் என் அரட்டையை 

ஆரம்பித்தேன்.

ஏம்பா  இப்படி

நெட்டையா வளந்திருக்கையே

ஒனக்கு அறிவே இருக்காதா?

பின்னே என்ன?

எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கே.\

என்ன சொல்றீக?

நீ வெறும் பனைமரம் இல்லை.

ஈழம் என்றும் உனக்கு ஒரு பெயர் உண்டு.

உன் நிழல் வாழ்ந்த‌

இப்பெரும் தமிழ் இனம்

உலகம் முழுதும் தன் காலடிச்சுவடுகளை

விதைத்து சென்றிருக்கிறது.