"ஊர்வசி ஷோபா"
___________________________________ருத்ரா
70 களில் திரைப்படங்கள்
கூர்மையான கதைகளால்
பட்டை தீட்டிக்கொண்டதில்
சினிமா எனும் அந்த
ஜினிமாக்காடுகாடுகளில்
நடிப்பின் வைரமாக
கிடைத்தவரே
"ஷோபா"
காளி எனும் முரட்டு அண்ணனின்
பிஞ்சுச்சிரிப்பும்
நுங்கின் மென்மையின்
பூரித்த கண்களும் கொண்டு
வலம் வந்த தங்கையாக
வந்தார் ஷோபா.
ரஜினி காந்தின்
கரடு முரடு பாத்திரம்
அவள் புன்முறுவலின் முன்
குழைந்து தவித்தது.
ஒரு குழந்தைத்தனம் நிறைந்த முகம்
காதலின் மின்னல் பூசிய வானமாக
அண்ணன் முன் மலர்ந்து நின்ற நடிப்பு
நம்மால் மறக்க முடியாதது.
அந்த அதிரடி அண்ணன் ரஜினிகாந்த்
அவள் முன் குழைந்து அன்பின் பூவாய்
சிலிர்த்தது அந்த நடிப்புக்கு
ஒரு புதிய பரிமாணம் ஆகும்.
"முள்ளும் மலரும்"
அள்ளும் நம் நெஞ்சை ஷோபாவின் நடிப்பால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக