வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

காதலர் தினம்




காதலர் தினம்
====================================ருத்ரா

ஈடன் தோட்டத்தின்
மிச்ச சொச்சம்.
வணிகப்பாம்பும்
சைத்தான்கள் காட்டும்
ப்ளாஸ்டிக் ஆப்பிளும்
பதினாறுகளில்
பாய்ச்சுகின்றன‌
தேனாறும் பாலாறும்.

வாய்க்கால் வரப்புப்புல்லின்
பனித்துளியில்
கண்ணாத்தாவின்
விழி வர்ணம்
அந்த முனியனின்
நரம்பு புடைத்தலில்
யாழ் மீட்டியது.

ஒரு பேருந்தில்
எச்சில் தொட்டுக்க்கொடுத்த‌
டிக்கட் வாங்குகையில்
கண்ணுக்கே
எச்சில் ஊற வைத்த
ஒரு சுடிதார் பெண்ணின்
கண்ணின் கருங்குழியில் விழுந்த‌
அந்தக்காளை
ஒரு மௌன ஜல்லிக்கட்டுக்கு
தயார் ஆகி
கொம்பு சீறி
கண் கொதித்து
மண் தெறிக்கிறது.

ஒண்ணாம்  கிளாஸில்
ஒரு பொண்ணும்
ஒரு பையனும்
அந்த பிய்ந்த கூரைப்பள்ளியிலும்
வானத்து வழியே
ஒழுகிய ஒரு பிஞ்சு மின்னல் வெட்டி
ஷாக் அடித்து
கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

காதல் என்ற சொல்லை
வீசியெறிந்து விட்டு
வேறு வேறு
அர்த்தங்களை
அந்த சொல் இடுக்குகளில்
சொருகிக்கொண்டாலும்

காதலுக்குத்தான்
எத்தனை? எத்தனை?
பரிமாணங்கள்.

=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக