சிந்துபாத் அந்தக் கிழவனை
தோளில் சுமந்து திரிவது போல்
எத்தனை அவதாரங்களிலும்
புராணங்களிலும்
உன்னைச் சுமந்து கொண்டிருக்கிறோம்.
அப்பறம் தான் தெரிந்தது
நாங்கள் சுமந்து கொண்டிருந்தது
எங்கள்
அடிமைத்தனத்தையும்
முட்டாள்தனத்தையும் என்று.
கடவுளே
கனத்த விலங்குகளாய்
எங்கள் மீது அழுத்திக்கொண்டிருக்க
உனக்குமா தேவை
அந்த பூணூல்?
குடல் கிழிக்க வந்த அந்த
சிங்க அவதாரத்தை உற்றுப்பாருங்கள்.
கையிலும் மார்பிலும்
சுற்றிக்கொண்டு கிடப்பது
குடலா? பூணூலா?
---------------------------------------------------
ருத்ரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக