சனி, 29 ஆகஸ்ட், 2015

செப்பு விளையாட்டு

செப்பு விளையாட்டு
=========================================ருத்ரா
வாழ்க்கை
ஒரு குறுகிய சன்னல்.
அதன் வழியாய் தெரிகிறது
பொன் மழை வைர மழை..
வீடு எனும் சிமிழில்
சூரிய சிவப்பொளி அற்புதம் தான்.
அது
கதவுகள் கழன்று
கூரைகள் நீங்கி
சுவர்கள் தரையில் மல்லாந்து
பரிணாமம் அடையும் போது
அங்கு உன்னுடன்
உறைய வருபவை
அண்டங்கள் எனும் "ஞானத்"தின்
பண்டங்கள் தான்.
உன் புலன்கள் உன் நிழல்கள்
எல்லாம் நின்றுவிடச்செய்து நீ
கழன்று கொள்வது தான்
"ஓம்".
ஆம் என்பதும் அதே..
ஆங்கிலம் அந்த‌
உயிரோட்டத்தின் "மின் தடையை"
தன் மேஜையில் உட்கார்த்தி
அழகு பார்க்கிறது..
உனக்கு உட்கார்த்தவும் தூக்கிவிடவும்
மந்திரங்கள் அல்லவா
தேவைப்படுகிறது.
நடைப்பிணங்கள் மீது அடுக்கப்பட்ட‌
செப்பு வீடா இது?
வடிவேலுவைக்கேட்டால்
"சின்னப்பிள்ளத்தனமாவுல்ல இருக்கு"
என்பார்....அதனால்
போதும் இந்த செப்பு விளையாட்டு.
========================================================
Paramasivan Esakki's photo.





2 கருத்துகள்:

மு.முத்துவேல் சொன்னது…

அருமை.
எனக்கு வாழ்க்கை செப்பு விளையாட்டாகவே தெரிகிறது.
அதற்கு மேல் மதிக்கும் அளவு வாழ்வில் ஒன்றும் இல்லை.
விழிப்புணர்வு தவறும்போது இது மறந்து போகிறது

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு.மு.முத்துவேல் அவர்களே.

நம் இனிய தமிழ்மொழியின் பேசும் தமிழ்ச்சொற்களில் பல்லாயிரம் "ஃபாசில்"துணுக்குகள் கிடக்கின்றன நம் தொல்லியல் கூறிக்கொண்டு.இந்த "செப்பு" (பொருள் :பேசு) என்பதன் மூலம் நம் வாழ்க்கையை சின்ன சின்ன
அடையாளங்களாக நம் குழந்தைகளிடம் பேசிக்காட்டுவது தானே இது.தெலுங்கிலும் பேசு என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது.செம்பு எனும் கனிமம் செப்பு என்று (இடைபோலி) சொல்லப்படுகிறது,திருனெல்வேலியில்
நடராஜர் கோவில் "செப்பறை" என்று அழைக்கப்படுகிறது.(தாமிர சபை).உங்கள் வாசிப்புக்கு
நன்றி நண்பரே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக