நான் யார்?
உண்மையா? பொய்மையா?
என் கையில் இது தான் உளி.
நானே தான் அந்த கல்.
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக
இன்னும் உருவம்
பிண்டம் பிடிக்கப் படவில்லை.
"ஆயிரம் தலையில்
ஆயிரம் கண்ணில் "என்று
குழந்தை கிறுக்கியது.
"சஹஸ்ர சீர்ஷம்
சஹஸ்ராக்ஷம்"
தூய பிரம்மம் என்று
சமஸ்கிருதம் சொன்னது
எப்படி வர்ணம் என்று அதை
சாதி சாக்கடைக்குள்
தள்ளியது?
மனித நிறம் மந்திரம் ஆனது.
ஆதிக்க வெறியில்
"ஆதித்ய இருதயமும்"
இருளில் வீழ்ந்தது.
அப்புறம்
இருண்ட சாஸ்திரம் மட்டுமே
எஞ்சி நின்றது.
-----------------------------------------
ருத்ரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக