டி வி யில் "ஜெய் பீம்"
____________________________________
ருத்ரா
பாம்பும் எலியும் பிடித்து
வாழ்க்கை நடத்துபவர்களுக்கு
பட்டா எதற்கு?
இந்த சிறுபொறியில்
இது வரை அநீதியின்
சொக்கப்பனைகள் தான்
கொளுந்து விட்டு எரிந்திருக்கின்றன.
உண்மை நடப்புகளை
பெயர்த்து எடுத்து
சினிமாவில் பதியம் இட்டிருக்கிறார்கள்.
நடிப்புகளையும்
உயிர்த்தீ பற்றி எரியும்
அந்த கதையின்
சுநாமி அதிர்வுகளையும்
விமர்சித்து கொச்சையாகுவதில்
ஒரு பயனும் இல்லை.
"சந்துருக்கள்"எனும்
அக்கினி விதைகளின்
நெருப்புக்காடுகள்
அந்த காமிராப்படைப்பில்
நிச்சயம்
நமக்கு வேண்டிய
ஒரு ஆவேசத்தையும் சீற்றத்தையும்
ஒரு "சூப்பர் நோவா"வாய்
சுட்டெரிக்கும்
வெளிச்சம் காட்டியிருக்கிறர்கள்.
நூறு குற்றவாளிகள் தப்பிக்கப்படலாம்.
குற்றமற்றவன் ஒருவன் கூட
தண்டிக்கப்படக்கூடாது
என்ற
அந்த பரிமாணத்தின்
மானுட சூரியன்
புன்னகை புரிய
இங்கே எத்தனை வலியும் வேதனையும்
மனிதக்கபாலங்களை
குவித்து குவித்து
வதம் செய்திருக்கிறது?
"உங்களில் குற்றமற்றவன் எவரேனும் ஒருவன்
அந்த முதல் கல்லை எறியுங்கள்"
என்றானே ஒருவன்
அந்த குரலின்
உயிர்ப்பு நிறைந்த மயிரிழையில்
இந்த உலகமே ஊஞ்சல் ஆடுகிறது!
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக