வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொன் தூண்டில்

 பொன் தூண்டில்

________________________________________

ருத்ரா



சரித்திரத்தின்

காலச்சருகுகள் 

உன் காலடியின் கீழ்

சர சரப்பது

உனக்கு கேட்கின்றதா?

எத்தனை நூற்றாண்டுகள்

உன்னை மென்று விழுங்கின?

இன்னும்  உன் பசியை நீ

உணரவில்லை.

சிந்தனைச்சிற்பிகள்

இந்த சமுதாயத்தை செதில் செதிலாக‌

செதுக்கி

அதன் உருவத்தை உனக்கு

உரித்துக்காட்டியது

இன்னுமா புரியவில்லை?

முரண்பாடுகள் தானே

உனக்கு 

என்றும் மாறாத பாடத்திட்டம்

என்று வகுத்துக்கொடுத்தார்களே!

அதை நீ இன்னும் உணரவில்லை.

கடவுள் என்று

ஒரு கல்லை நட்டுக்கொள் என்றார்களே

அது முரண்பாடாய் 

ஒரு பெரும் கனமாய் உன்னை

அழுத்தி நசுக்கிக் 

கொண்டிருப்பதை

நீ உணரவில்லையா?

பரிமாண மலர்ச்சியின் 

சிகரமே மனிதன் தானே!

அவன் ஏன் 

இந்த சாதி மத வேற்றுமைத்தீயில் 

கருகி மாய வெண்டும்?

அறிவு உன்னை 

பதுப்பித்துக் கொண்டே அல்லவா இருக்கவேண்டும்!

உயிரற்ற வெற்றுச்

சடங்குகளின் கிடங்குகளில் கட்டிய 

மார்ச்சுவரிகளிலா உன் 

மார்க்கத்தைத் தேடுகிறாய்?

சுகமான அம்புலிமாமாக்கதை

புராணங்களின் அபினித்தூக்கத்திலா

இன்னும் நீ ஆழ்ந்து கிடப்பது?

ஓட்டு எனும் பொறி வைத்து பிடிக்கப்படும்

பூச்சியா நீ?

ஓ!மனிதா!

உன் குவாண்டம் கம்பியூட்டிங் எனும் 

நுண்ணறிவு கொண்டு உன்னையே

ஒரு சுரண்டல் உலக "டாய் ஸ்டோரியில்"

விளையாட்டு கிராஃபிக்ஸ் மசாலா வெளிச்சங்களில்

மூழ்கடிக்கப்பார்க்கும் சூழ்ச்சிகளை

புரிந்து கொள் மனிதா!

பொன் தூண்டில் விழுங்கும் மீன் அல்ல நீ!

மாற்றமும் முரண்பாடுகளுமே

உன் பசி!

உன் உணவு!

ஆம்!

பசித்திரு!விழித்திரு!


_____________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக