செவ்வாய், 19 மார்ச், 2024

காலப்பறவை



காலப் பறவையே!

உன் சிறகுகளை நீ 

சட சடக்கும் போது 

சரித்திரம் செதில் செதிலாக 

உதிர்ந்தது.

வெண்  கொற்றக்

குடை  நிழலுக்குள்ளும் 

முடை  நாற்றம் வீசியது.

போர்களால் ரத்த ஆறுகள். 

வாள் வீச்சுக்களில் 

தலைகள் உருண்டன.

ஆனால் 

வாய் வீச்சுகளில்

அறிவு முளைவிட 

சிந்தனை பொறிகளும் 

தெறித்தன.

உமிழ்ந்த விடியல்கள் தோறும் 

உதிர்ந்த சூரியன்கள் 

பல் விளக்கி 

வாய் கொப்புளித்துக் 

கொண்டன.

ஆற்றங்கரைகளில் 

நாகரிகங்கள் விழித்துக்

கொண்டன.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக