ஞாயிறு, 31 மார்ச், 2024

உன்னோடு நீ பேசிக் கொள்வது....

உன்னோடு 

நீ பேசிக்கொள்வது...

----------------------------------

ருத்ரா.


உன்னோடு 

நீ பேசிக் கொள்வது 

எப்போது?

தூங்கும் போது 

கனவில் பேசுவது எ‌ன்பது 

உன் ஆழ் மனக் 

குமிழிகள் ஆகு‌ம்.

அந்த சோளத் தட்டையில் 

எந்தக் கோட்டையு‌ம் 

கட்ட முடியாது.

கண்ணாடியின் முன் நின்று 

தலை வாரும்  முன் 

அந்த சீப்பின் பல் வ‌ரிசையில் 

விரல்களைக் கொண்டு 

கொஞ்சம் "யாழ்"

வாசிப்பீர்களே 




ஞாயிறு, 24 மார்ச், 2024

ஒரு மரங்  கொத்திப்பறவை

...... ... . .. .... . - - - .. ...

அது ஏதோ "கட கட் கட  கட"

என்று அந்த மரத்தில் 

தந்தி அடித்துக்  

கொண்டிருக்கிறது 








..


சனி, 23 மார்ச், 2024

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற  போதிலும் 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே.

பாரதி தான் பாடினார்.

அச்சா! அச்சா!

ஜாவ்! ஜாவ்!

அனுமார் படைகள் 

தமிழின் மீது 

கதாயுதங்களைக்கொண்டு 

..................

அச்ச மூட்டுகின்றனவே.

------------------------------------













வெள்ளி, 22 மார்ச், 2024

அகழ்நானூறு-61
--------------------------------------
சொற்கீரன்.


கோடு உமிழ் நீரில் வெறி கமழ 
பைங்குழை ஆர்த்து அடர்க் கானும் மெலியத் திரி தரும் கொல் களிறு ஆங்கே சூர் படுத்தன்ன ஆறிடை ஊர்ந்து 
விற் கொலைஞர் அம்புகள் 
தூஉய் உயிர் கொல்லும்
கொடுஞ்சுரம் சென்றான் 
பொருள் வயின் கொள்கை 
தலை மேல் சூடி.





----------------------------------------------



புதன், 20 மார்ச், 2024

"என்னடா பொல்லாத

வாழ்க்கை?"

சினிமாப் பாட்டு

வரிகளுக்குள்ளும் 

சித்தர்களின் சவ்வு மிட்டாய் 




செவ்வாய், 19 மார்ச், 2024

காலப்பறவை



காலப் பறவையே!

உன் சிறகுகளை நீ 

சட சடக்கும் போது 

சரித்திரம் செதில் செதிலாக 

உதிர்ந்தது.

வெண்  கொற்றக்

குடை  நிழலுக்குள்ளும் 

முடை  நாற்றம் வீசியது.

போர்களால் ரத்த ஆறுகள். 

வாள் வீச்சுக்களில் 

தலைகள் உருண்டன.

ஆனால் 

வாய் வீச்சுகளில்

அறிவு முளைவிட 

சிந்தனை பொறிகளும் 

தெறித்தன.

உமிழ்ந்த விடியல்கள் தோறும் 

உதிர்ந்த சூரியன்கள் 

பல் விளக்கி 

வாய் கொப்புளித்துக் 

கொண்டன.

ஆற்றங்கரைகளில் 

நாகரிகங்கள் விழித்துக்

கொண்டன.








ஞாயிறு, 17 மார்ச், 2024

வெயில்

வெயில்

----------------------------------ருத்ரா.


வெயில் தன் 

குருட்சேத்திரத்தை 

தொடங்கி விட்டது.

சாலை ஓரங்களில் 

சிவப்பு சிதற சிதற

குருதியை கூறு கட்டி 

வைத்தாற் போல் 

வியாபாரத்துக்கு 

காத்து கிடக்கும்

தர்பூசணி பழத்துண்டுகள் 

வண்ணதாசன் 

கவிதைத் துண்டுகள் என 

ஈக்கள் மொய்த்ததாய் 

ஆம்...தேனீக்கள் 

மொய்த்ததாய் 

அந்த தூங்கு மூஞ்சிமரக் 

கிளைகளை சலசலக்க 

வைத்துக் 

கொண்டிருக்கி ன்றன.

---------------------------------------------


சனி, 9 மார்ச், 2024

என்ன யோசனை ?

என்ன யோசனை ?

மாமரத்தினடியில் 

அந்த குத்து கல்லில் 

உட்கார்ந்து கொண்டிருக்கும்

என் மீது  விழுந்த

ஒரு மாஞ்சருகு கேட்டது.

எதை யோசிப்பது 

என்று தான் தெரியவில்லை.


.






வெள்ளி, 8 மார்ச், 2024

குணா குகைகள்.

 


"..மனித க் காதல் அல்ல ..அல்ல.."

----------‐--------------------------------------------

ருத்ரா 




குகை நன்றாகவே 

எதிரொலித்தது.

அதனால் படம் சூப்பர்.

குகை  

மலைப்பிளவில் அல்ல.

மனப்பிளவே அது.

"ஸ்கிசொபெர்னியா"

மனிதம் மிருகம்  தெய்வம் 

எல்லாம் சேர்த்து 

ஒரு காக்டெய்ல் காதலும்

நுரைத்து அதில் பூக்கலாம்.

நமக்கு தடுக்கி விழுந்தால் 

அந்த புராணங்கள் தான்.

போகட்டும்.

ஆனால் இந்த படம் 

மனிதம் மகத்தானது என்பதின் 

ஒரு "பிரம்ம சூத்ர" பிரம்மாண்டம் 

என்றாலும் மிகை இல்லை.

ஆனா‌லும் 

ஆஹோ..ஓஹோ..எ‌ன்று 

கமல ஹாசனின் 

காதல் கோணங்கித்தனமே 

இங்கு கொண்டாடப்படுவது 

ம‌ட்டுமே 

பச்சையான கொச்சை.

-----------------------------------------------












ஒரு பொழிப்புரை.

 

வெயிலுக்கு ஒரு பொழிப்புரை .

-----------------------------------------------------

ருத்ரா 




இலை இடுக்குகள் வழியே 

ஒழுகிய வெயில் 

நிலத்தில் 

கல்வெட்டு எழுத்துக்கள் போல 

புதிர் அசைவுகள் காட்டின.

நிழல்களும் 

ஒரு ஆற்றின்  ஓட்டத்துள்

துள்ளும் மீன்களாய்

தோற்றம் காட்டின.

என் மீது உதிர்ந்தது போல் 

இரவின் மிஞ்சிய 

எச்சில் விண் மீன்கள் 

"உரு வெளி" காட்டின.

இந்த இலைகள் முடைந்த 

குடைக்கு வெளியே 

மொட்டை வெயில் 

நம்மை 

உரித்து தொங்க போட்டு விடும்.

சட்..!

இதற்கு மேல் 

வெயிலுக்கு ஒரு பொழிப்புரை 

என்று 

என் பேனா என் மீதே 

ஊற்றிக்கொண்டு  ஏமாற்றுவதை 

பொறுத்துக்கொள்ள முடி‌யா‌து.

" உஸ் ..அப்பாடா என்ன வெயில்?"

----------------------------------------------------










முதல் கல்.

முதல் கல்

-------------------------------------ருத்ரா 


பாவம் செய்த அவள் மீது 

முதல் கல் எறிய 

யாராவது பாவம் செய்யாதவன் 

முன்னே வரட்டும்.

கடவுள் கட்டளை இட்டார்.

யாரும் முன் வரவில்லை.

கனத்த மவுனம் தான் நீடித்தது.

திடீரென்று 

அவர் நெற்றியில் 

ஒரு கல் எறிய பட்டது.

ரத்தம் வழிந்தது.

பாவத்தை படைத்தவன் மீது 

அந்த பாவமே 

கல் எறிந்து கொண்டது.

சிரித்துக் கொண்டே 

அவர் நடக்கத் தொடங்கினார்.

----------------------------------------------------









சனி, 2 மார்ச், 2024

கூச்சல்கள்.

கூச்சல்கள் 

-------------------------------------------ருத்ரா 


கேள்வி கேட்கத் தெரிந்த

மிருகமே 

மனிதன் ஆனது.

மனிதனால் ம‌ட்டுமே 

கடவுளையும் 

கேள்வி கேட்க முடிந்தது.

கேள்வியு‌ம் மனிதனே 

விடையு‌ம் மனிதனே 

என்ற 

அறிவு மட்டுமே 

இங்கு "கடவுள்" ஆனது!

மற்றவை எல்லாம் வெறு‌ம் 

கூச்சல்கள் ஆனது.

-------------------------------------------------