வெள்ளி மகரந்தங்கள்
==========================================ருத்ரா இ.பரமசிவன்.
பூக்களே இலைகளாய்
பொலிவு மிக்க முகம் காட்டினாய்.
பூநுரையில் வெள்ளம் திரண்ட
விருட்சமே ..மன
வெளிச்சமாய்
மண் பிளந்து
விண் பிளந்து நின்றாய்.
நாணம் என்றால் சிவந்து அல்லவா
நிற்க வேண்டும்!
இது என்ன வெள்ளைச் சிலிர்ப்பு?
மொத்தமாய் முத்துக்குளித்த சிரிப்பின்
திருமுல்லை வாசலா நீ!
பஞ்சு மேகங்களின் வெண் கவரிகள் கூட
மௌனமாய் உனக்கு
"பனி"விடை செய்கின்றன.
குளிர் தூவும்
வெள்ளிக்குழம்பில்
இங்கே விதை தூவியது யார்?
உன் வெள்ளி மகரந்தங்கள் அத்தனையும்
நாளைக்கு
ஒரு வியப்பு மழையிலா
எங்கள் விடியல்.
எங்கள் நம்பிக்கையின்
கருப்பு வெள்ளைக் கிளைகள் தோறும்
கலர்க்கனவுகளில்
இமைகள் போர்த்த
விழிக்கூட்டங்களே
இந்த பூக்கள் !
===================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக