"திகில்பரங்குன்றம்"
______________________________________
திருப்பரங்குன்றதில் நீ சிரித்தால்....
அது என்ன முருகா?
திருத்தணி மலையும் தாண்டி
அயோத்தி கோயில் பக்கமா
அலையடிச்சு திரும்பும்ணு
சொல்றாங்களே முருகா?
உன் வள்ளி திருமண விளையாட்டுக்கு
அந்த சூரங்கூட
நீ நடத்துன
அட்டைக்கத்திச் சண்டையை
ஒரு ரத்தக்களரி ஆக்குகிற மாதிரி
"தீபத்தூண" கட்டிப்பிடிச்சுகிட்டு
நம்ம "தமிழையே" அசுரனா ஆக்கிகிட்டு
அடிபுடி கும்மாளம்லாம் நடக்கிற
வேதனையான காட்சிகள்
அரங்கேறும் இந்த
"திகில்பரங்குன்றம்" எப்போ
அழகான அமைதியான
திருப்பரங்குன்றம் ஆகும்?
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக