நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
நாவலத் திறனில் நற்றமிழ் காட்டி
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
நாவலத் திறனில் நற்றமிழ் காட்டி
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
-------------------------------------------------
சேயோன்
ஒரு தேர்தல் விவரிக்கப்படுகிறது
( an election is described )
By "ஆலிவர் கோல்ட்ஸமித்"
புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதிய கட்டுரை இது.தலைப்பை மட்டுமே மகுடமாய் சூட்டிக்கொண்டு வரும் எழுத்துக்களின் ஊர்வலம் இது.
பிளந்து கிடந்த ஒரு
நடு இரவில்
ஊமையாக சிமிட்டிக்
கொண்டிருந்த
நட்சத்திரங்களின் சாட்சியாக
சுதந்திரக்கொடியை
விரித்துக் கொள்ளுங்கள்
என்று
கொடுத்து விட்டுப் போனான்
அந்த வெள்ளையன்.
இந்த வெள்ளையனோ
மூவர்ணத்துள்ளும்
அந்த நாலு வர்ணத்தையும்
சேர்த்து சுருட்டி
மிச்சர் பொட்டலம் போட்டு
கொடுத்திருக்கிறான்.
வர்ண வர்ணமாய்
அந்த சாதிமத வெறிகளின்
அபினிச்சித்திரங்களே
இங்கு தேர்தல் சினிமாக்கள்
---------------------------------------------
சேயோன்
நூலகம்
-------------------------------
அட்டை
போட்டுக்கொண்டு
சட்டை மாட்டிய புத்தகங்கள்
வரலாறுகளாய்
நெளிந்தோடின.
விஞ்ஞானங்கள்
பொய்த்தோல் உரித்து
உண்மையின்
இமைகள் விரித்தன.
புராணங்கள் எனும்
அம்புலிமாமாக் கதைகள்
ஆயிரம் குவிந்து கிடக்கட்டும்.
ஆங்காங்கே மூலைகளில்
சாதி மத "நூலாம்படைகள்"
படிந்து கிடந்த போதும்
படிக்கப்படவேண்டும்
புத்தகங்கள்.
அந்த இண்டு இடுக்குகள்
எல்லாம்
அறிவின் ஆவேச
சுநாமிகளால்
துழாவி துழாவி
அடித்துச் செல்லப்படட்டும்.
மானுடத்தின்
கூர் அறிவு எல்லா
இருட்டுச்சிப்பங்களையும்
அழித்தொழிக்கட்டும்.
சிந்தனைச்சுடர்கள்
ஓங்கித்தெறிக்கட்டும்.
---------------------------------------------
ருத்ரா.
என்ன இது?
துன்பம் நெஞ்சைப்
பிசைந்து கொண்டிருக்கிறது.
எதை நினைத்து?
எல்லாவற்றையும் தான்.
என்ன சொல்கிறாய்?
இந்த இ சி ஜி யை பார்.