வியாழன், 29 பிப்ரவரி, 2024

உச்சாணிக்கொம்பு.

மனிதா 

அறிவின் உச்சாணிக்கொம்பில்  

நின்று எப்படி 

இந்த அறிவின்மையை 

கொடி கட்டி 

வாழ்த்துப் பா பாடுகின்றாய்?

கேட்டால் 

மெஷின் லேர்னிங்க்

என்று 

பொம்மலாட்டம் நடத்துகிறாய்.

கணித நுட்பங்களும் 

அறிவியல் கோட்பாடுகளும் 

சந்தை மொழியின் 

கணினி எந்திரங்களில் 

லாபச் சக்கைகளை 

கோடி கோடிகளாய்

குவிப்பது மட்டும் தானா 

உன் குறிக்கோள் ?

மனிதம் மக்கிய 

குப்பைகளைக் கொண்டு 

நீ செய்த 

செயற்கை மூளைகளும் 

செயற்கைக் கடவுள்களும் 

அதோ!







 



I




செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

தேர்தல்.



தேர்தல்.

----------------------------------------ருத்ரா 


கரடு முரடாக 

க‌ணி‌னிகளின் 

காட்டாறு

துரத்துகிறது.

ஆற்றின்

மேலோட்டத்தில் நின்று 

ஓநாய்கள் கூச்சல் இடுகின்றன...

ஓட்டுகளுடன் 

கீழ் ஆற்றில் நிற்கும் 

ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து 

"நீங்கள் நீரை

 அசுத்தப்படுத்துகிறீர்கள்".

---------------------------------------------------




  

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

குருட்டு ஆட்டங்கள்.

 

நம் ஜனநாயகம் 

சுடு காட்டு சிதையில் 

வைக்கப்பட்டு விட்டது 

என்பதை 

"சண்டிகார் "

காட்டிவிட்டதே.

அப்புறம் என்ன 

இந்த 

"கருத்துக்கணிப்பு"

குருட்டாட்டங்கள் ?

தராசு முள் 

வெற்றி என்று 

சொன்ன போதும் 

நம் நம்பிக்கைகள் 

அந்த 

மார்ச்சுவரிக்குள் தானே 

கிடக்கின்றன ?


-----------------------------------------------

ருத்ரா 




வியாழன், 22 பிப்ரவரி, 2024

தமிழ் வாழ்க

 தமிழ் வாழ்க 

----------------------------------------

சொற்கீரன்.


தமிழ் வாழ்க 

என்று கத்திய

ஈசல் கூ‌ட்ட‌ம் 

இறகுகள் 

உதிர்த்தது தான் 

மிச்சம்.

காதலின் நுண்தொகையான 

அந்த "குறுந்தொகை"

வரிகளில் உள்ள 

மொழியின் ஓர்மையில் 

உணர்வின் கூர்மையில் 

என்றாவது 

 சிலிர்த்தது உண்டா ?

"கல் பொரு சிறு நுரை..."

எனும்  சொல்லோட்டத்துள்

ஊர்ந்து பார்த்தது உண்டா?





திங்கள், 19 பிப்ரவரி, 2024

அரக்கு மாளிகை.

அரக்கு மாளிகை 

----------------------------------------ருத்ரா.


எப்படி

சுத்தி சுத்தி வந்தாலும் 

ஓட்டுக்கான "வசந்த விழா"

விரைவில் தொடங்கி விடும்.

பல கட்டங்களில் 

பகடைக்காயாக 

மக்கள் உருட்டப் படலாம்.

அந்த பழைய சகுனிகள் 

அதர்மமாய் பகடை 

உருட்டியிருக்கலாம்.

ஆனால் 

இவர்களின் பகடைகளே 

அதர்மம் தான்.

சாதிகள் வர்ணத்தீ 

மூட்டிக்கொண்டதி‌ல்

மனிதம் சாம்பலானது.

மூட்டிய தந்திரங்கள்

மந்திரங்களில்

மகுடம் சூட்டிக்கொண்டு 

ஆள வந்திருக்கிறது.

அதே பட்டன் தா‌ன்.

அதே தட்டல் தா‌ன்.

இந்த மாயக்குதிரையை 

தகர்த்து  எறியுங்கள்.

உங்கள் வரலாறுகள் 

தொலையும் முன் 

உங்கள் வழிகளை 

மீட்டெடுங்கள்!

-----------------------------------------------












வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

உங்களிடமே.

  

வாக்காளப்  பெரு மக்களே!

நம் ஓட்டை கம்ப்யூட்டரின் 

ஓட்டு எனும் பாஸ்வேர்டு 

உங்களிடமே.

இதை ஓட்டுகின்ற

மண் குதிரை ஜனநாயகமும் 

உங்களிடமே.

உங்கள் எதிர்க் குரல்களின் 

குரல் வளையை குறி வைக்கும் 

ஏவல் எந்திரங்கள் 

அவர்களிடமே.

உரிமைக்குரல் உங்களிடமே. 

எந்த உரிமை என்று 

நீங்கள் நினைக்கும் உரிமையை

நினைக்க வைப்பது 

அவர்கள் உரிமை. 

அவர்கள் ஊடகங்களில் 

அவர்களுக்காக 

அவர்கள் கருத்துகளில் 

புழுக்களாக 

நெளிந்து கொண்டிருக்கும் 

உரிமை மட்டுமே உங்கள் உரிமை.

-----------------------------------------------------

ருத்ரா.