இடிப்பொறி
___________________________________________
தூரப்போங்கடா
ஏ ஐ லொள்ளுகளா?
கொஞ்சம் மடிப்பொறியில்
கிளிக்கி கிளிக்கி
ஏதாவது பார்க்கலாமான்னு
வருடிட்டு இருந்தா
திடீர்னு
ஃபோட்டோக்களின்
படையெடுப்பு.
கீழே சொற்களின்
ரயில் வண்டித்தொடர்கள்?
"ஏன் உங்களுக்கு
என்ன பண்ணுது?
ஏது பண்ணுது?
உங்கள் "ப்ரைன் ஃப்ரொன்ட் லோபில்
நியூரல் நெட் ஒர்க்கில்
அந்த சிப் வைத்த பின்
இப்போது எப்படியிருக்கிறது?
கொசா முசான்னு
படங்கள்ளாம் தெரியுதா?
ஏதோ
ஹேல்லுசினேஷன்னு சொல்றாங்களே
அது பற்றி...."
"என்னது? நான் பைத்தியமா?
ராஸ்கல் எப்படிச்சொல்லலாம் நீ...."
போட்டோக்கள் பாத்தது போதும்.
இந்த சிப் வைப்பத்ற்கு முன்
என்ன சொல்லிக்கொண்டிருந்தானோ
அதையே தான்
இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறான்...
மடிப்பொறி
இடிப்பொறியானது.
டப்பென்று
அதை அறைந்து மூடினேன்.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக