திங்கள், 20 அக்டோபர், 2025

தோழர் கே தனலட்சுமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 


தோழர் கே தனலட்சுமி அவர்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

________________________________________


மதிப்பிற்குரிய‌

கே டி எல் அவர்களின்

கணீர்க்குரல்

இன்னும் நம்

இயக்கப் போர்முரசின்

அதிர்க்குரல்கள் தான்.

எல் ஐ சி யின்

பெண்பாற் தோழமை என்றால்

வெறும் மயில் பீலிகளா என்ன?

எரிமலைகள் பிளிறும்

மனப்பீலிகளும் தான் அவை.

நம் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின்

வளை ஓசைகளும்

சமுதாயத்

தளை நொறுக்கும்

வளையாத ஒற்றுமையின்

அலையோசைகள் தான்.

தோழர் கே டி ஏல் அவர்கள்

நீடூழி நீடூழி வாழ்க!

_________________________________

இ.பரமசிவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக