எல் ஐ சி நண்பர்
திரு விசு எனும் வி சுப்பிரமனியன் அவர்கள்
நாம் நம் "முதுமை வனத்துக்குள்"கூட
பூக்கள் சிரிக்கும் ஒரு வசந்தகாலத்தை
நினவுகளால் வருடிக்கொண்டிருக்க வேண்டும்
என்பதை (17.10.25 FACE BOOK )எழுதியிருந்தார்.
அந்த குறிஞ்சித்திணையின்
நினைவும் நினைவின் நிமித்தமுமே
எனது இந்தக்கவிதை
_____________________________________________
நெஞ்சை நெருடும் வரிகள் இவை
விசு அவர்களே.
நாம் "வயதுககு" வரும்போது
மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறோம்.
வயதுகளுக்குரிய ஒரு விளிம்புக்கு
வரும்போது
நம் சொற்கள் எல்லாம்
வெறும் புலம்பல்கள் அல்ல.
அவை ஆழமானவை.
ஆனால் உண்மையில்
அவை அழகானவை.
ஏனென்றால்
நாம் படித்த தத்துவங்கள்
அப்போது வரை
ஏதோ அர்த்தம் புரியாத
அர்த்த சாஸ்திரங்களாகத்தான்
இருக்கும்.
இப்போது தான் அவை
அர்த்த சாஸ்திரங்கள்.
ஆம்.
நீங்கள் குறிப்பிட்டீர்களே
அந்தப்பணம் தானே
உண்மை அர்த்த சாஸ்திரம்.
எல்லோருக்கும் அது
ஒரே வித சிந்தனையாக இருக்காது.
பலப்பல
"கண்ணாடி நொறுங்கல்களின்"
ஒரு கலைடோஸ்கோப் தான் அது.
அவர்கள் அந்த மனத்திரையில்
உருட்டிக்கொண்டேயிருப்பார்கள்.
நானும் எண்பதுகளைக்
கடந்தவன் தான்.
மரண பயம்
ஒரு சமயம்
அருமையான தீவு.
எங்கோ இருந்து
பயமுறுத்திக்கொண்டே இருந்தாலும்
நமக்குப்புரியாத
ஒரு அழகான "பிக்காஸொ" ஓவியம் அது.
மறு சமயம்
வயதுகளா?
அவை வெறும் எண்கணிதம்.
மேதை ராமனுஜத்திடமே
பல்லாங்குழி ஆடியிருக்கிறது.
அந்த "மாக் தீட்டா மாடுலர் ஃபங்க்ஷன்"
ஒன்று போதுமே.
அறிவு ஆண்டவனை திணறடிக்க
என்று எண்ணங்கள் குமிழியிடும்.
இந்த முட்டுச்சந்தோ மூத்திரச்சந்தோ
அது வரை
எதையாவது நினைத்துக்கொண்டு
கிறுக்கிக்கொண்டோ
கிறுக்காமலோ
ஒரு வித கிறுக்குத்தனத்தில்
காலத்தின் கனத்த பாறாங்கல்லை
கஷாயம் வைத்து
குடித்துக்கொண்டிருக்க
வேண்டியது தான்.
உங்கள் எழுத்துகள்
விறீர் என்று எதோ
ஒரு வெளிச்சம் அல்லது இருளை
ஃபிலிம் ஷோ
காட்டியிருக்கிறது.
அன்புடன்
இ பரமசிவன்.
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக